Saturday, May 19, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

ஹைதராபாத் மசூதியில் குண்டுவெடிப்பை கண்டித்து TNTJ தமிழகம்முழுவதும் கண்டன ஆற்பாட்டம்.

Posted: 19 May 2007 07:37 AM CDT

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 18 .05 2007 அன்று 400 ஆண்டு கால புகழ் பெற்ற மெக்கா மசூதியில் பயங்கர வெடி குண்டுகள் வெடித்துள்ளன அன்று வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையில் ஈடுப்பட்டிருந்த முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த பயங்கர தாக்குதலில் பத்துக்கும் மேற்ப்பட்டோர் பலியானதுடன் போலிசார் துப்பாக்கி சூட்டிலும் பலர் பலியாகி உள்ளனர். இதற்க்கு முன்பு கூட டெல்லி ஜும்மா மசூதியில் இதுபோன்ற பயங்கர தாக்குதல் சம்பவம் நடைப்பெற்றது இப்படி தொடர்ச்சியாக இறை இல்லங்களில் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைக்குற்றவாளிகளை கண்டித்து கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,இனி வரும் காலங்களில் இதுப்போன்ற சம்பவங்கள் நடைப்பெறாமல் தடுக்கும் வகையிலும் உறக்கதில் இருக்கும் உளவுத்துறையை விழிப்படைய செய்யும் வகையிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடசென்னை சார்பில் இன்றுமாலை 4 மணியளவில் பார்க் டவுன் மெமொரியல் ஹால் அருகில் மாபெரும் கண்டன ஆற்பாட்டம் நடைப்பெற்றது ஆற்பாட்டத்திற்க்கு மாவட்ட தலைவர் நிஜாமுதீன் தலைமைதாங்கினார் மாநிலதலைவர் பீ ஜைனுலாபிதீன் கண்டன உரைநிகழ்த்தினார்.இந்த ஆற்பாட்டதிற்க்கு ஏராளமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்துக்கொண்டு குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

ச: உலகவங்கி தலைவர் பதவிவிலகல்

Posted: 19 May 2007 05:58 AM CDT

உலகவங்கியின் தலைவர் பால் வொல்ஃபோவிட்ஸ் இன்று தமது பதவியிலிருந்து விலகினார். முன்னதாக தமது பெண்நண்பருக்கு நல்ல வேலைக்கு மாற்றியதும் அவரது சம்பளத்தை உயர்த்தியதும் பல 'கிசுகிசுக்களை' ஏற்படுத்தியிருந்தன. மற்றுமொரு அமெரிக்க வெளியுறவு அதிகாரிக்கு வாய்ப்பு கிடைக்கலாம். காண்டெலிசா ரைஸ்சிற்கு வாய்ப்புக் கிடைத்திருக்கும், அவர்மட்டும் வெளியுறவு மந்திரி (அமெரிக்காவில் செக்ரட்டரி) ஆக இல்லாமல் இருந்திருந்தால். தன் பதவிவிலகலை அறிவித்திருக்கும் பிரித்தானியப் பிரதமர் பெயர் கூட அடிபடுகிறது.

Bits of News - Paul Wolfowitz's Resignation

ச:தவறுள்ள அகராதியை விற்பனையிலிருந்து விலக்கியது ஆக்ஸ்போர்ட் யூனி.பிரஸ்

Posted: 19 May 2007 05:41 AM CDT

ஆக்ஸ்போர்ட் யுனிவரசிடி பிரஸ் வெளியிட்ட அருஞ்சொற் பொருளாகராதியில் பெங்களூரு பற்றி தவறான தகவல்கள் தந்திருப்பதாக எழுந்த எதிர்ப்புகளிடையே அந்நிறுவனம்் மன்னிப்பு கேட்டுக் கொண்டு குறிப்ப்பிட்ட அகராதி தொகுதியை விற்பனையிலிருந்து விலக்கி வைப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது..

இதுபற்றி மேலுமறிய..Zee News - Oxford University Press suspends sale of its dictionary

ச: கிரிக்கெட்: மழையினால் இரண்டாம்நாள் ஆட்டம் தாமதம்்

Posted: 19 May 2007 05:28 AM CDT

இந்தியாவிற்கும் பங்களாதேசத்திற்கும் இடையே நடந்து வரும் கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டத்தொடரின் முதல் போட்டியின் இரண்டாம்நாள் ஆட்டம் அதிகாலையிலிருந்தே பெய்துவரும் மழையினால் ஆடுகளம் ஈரமானநிலையில் தேநீர் இடைவேளை வரையில் ஆரம்பிக்கவில்லை. தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஆடுவது சாத்தியமா என நடுவர்கள் பரிசோதனையின் பின்னர் முடிவு செய்யப் படும். ஆட்டவீரர்கள் ஓட்டல் அறையை விட்டு வெளிவரவேயில்லை.


IOL: Rain delays India vs Bangladesh

ஹைதராபாத் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு : பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

Posted: 19 May 2007 12:14 AM CDT

ஹைதராபாத் சார்மினார் அருகே உள்ள மெக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்நதுள்ளது. இதில், போலீசாரால் சுடப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆனது. சார்மினார் அருகேயுள்ள மெக்கா மசூதியில் வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 9 பேர் பலியாயினர். சிறுவர்கள் உட்பட 40 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, மக்கள் அலறியடித்து வெளியேறினர்.இதைத் தொடர்ந்து, ஹைதராபாத் நகரில் கலவரம் ஏற்பட்டபோது, நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். அதில், நேற்று மாலை 3 பேர் உயிரிழந்தனர். பின்னர், இந்த எண்ணிக்கையும் 5 ஆக உயர்ந்தது. இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தேறிய அடுத்த சில நிமிடங்களில், போலீசாரால் வெவ்வேறு இடங்களில் இருந்து 2 வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்குத் தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தோருக்குத் தலா ரூ.20 ஆயிரமும் வழங்கவதாக முதல்வர் ராஜசேகர ரெட்டி அறிவித்துள்ளார்.குண்டுவெடிப்புக்குக் காரணம் நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு ஹார்கட்-உல்-ஜிஹாதல் இஸ்லாமி என்ற அமைப்பே காரணம் என போலீசார் சந்தேகித்துள்ள நிலையில், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், நாடு முழுவதிலும் உள்ள கோயில்கள், மசூதிகள் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Links for 2007-05-18 [del.icio.us]

Posted: 19 May 2007 12:00 AM CDT

No comments: