Sunday, May 20, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

நன்மங்கலத்தில் 1,000 மரங்களை வெட்ட அரசு அதிரடி முடிவு: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி

Posted: 20 May 2007 02:08 PM CDT

வி. கிருஷ்ணமூர்த்தி

சென்னை நன்மங்கலம் வனப்பகுதியில் சுமார் 250 ஏக்கர் பரப்பில் உள்ள 1,000-க்கும் அதிகமான மரங்களை வெட்ட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

சென்னைப் புறநகர்ப் பகுதியான மேடவாக்கத்தை அடுத்த நன்மங்கலத்தில் சுமார் 900 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி உள்ளது. இது வனத்துறையால் காப்புக்காடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலை, மலையை சார்ந்த வனப்பகுதியான இங்கு இந்திய கொம்பு ஆந்தை, கானான் கோழி, நாமக்கோழி உள்ளிட்ட பல்வேறு அரிய வகை பறவைகளும், 100-க்கும் அதிகமான அரியவகை மூலிகைத் தாவரங்களும், மரங்களும் உள்ளன.

இப் பகுதியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட கருங்கல் குவாரிகள் செயல்பட்டன. இப்பகுதியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருதி கடந்த சில ஆண்டுளுக்கு முன்னர் குவாரிகள் தொடர்ந்து செயல்பட வனத்துறை தடை விதித்தது. இதன் பின்னர் இப் பகுதி காப்புக்காடாக அறிவிக்கப்பட்டது.

மரங்களை வெட்டுவது ஏன்? நன்மங்கலம் வனப்பகுதியில் வன ஆராய்ச்சி நிலையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையத்துக்காக இங்கு ஏற்கெனவே 9 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டன. இந் நிலையில் இங்கு மேலும் 250 ஏக்கர் நிலத்தில் இந்த நிலையத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம் சரக வனத்துறையிடம் இருந்து இந்த நிலம் வனத்துறை ஆராய்ச்சி பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலத்தில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான மரங்களை வெட்டிவிட்டு அந்த நிலத்தில் சோதனை அடிப்படையில் புதிய வகை மரக்கன்றுகளை பயிரிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இந்த மரங்கள் அனைத்தையும் வனத்துறையினரே வெட்ட முடியாது என்பதால் வெட்டும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான டெண்டர் கோரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

ச: ரகசிய திட்டம்

Posted: 20 May 2007 09:46 AM CDT

சென்னை, மே 20:

சென்னை விமான நிலைய விரிவாக்கம் என்ற பெயரில், விமானநிலையத்தையொட்டியுள்ள பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த வீடுகளை அகற்ற முற்பட்டால், விமான போக்குவரத்துக்கு முட்டுக்கட்டை போட, விமான நிலைய ஊழியர்கள் ரகசிய திட்டம் தீட்டியுள்ளனர்.

ஏற்கனவே ஐதராபாத், பெங்களூர் விமான நிலையங்களின் விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு இந்தப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. ஆனால் அந்த 2 விமான நிலையங்களுக்கு முன்னதாகவே விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்ட சென்னை விமான நிலைய விரிவாக்கப்பணி மட்டும் இன்னும் ஆரம்பகட்டத்திலேயே உள்ளது.


மேலும் அதிக விபரங்களுக்கு "மாலைச் சுடர்"

இசைக் கலைஞர் எல்.வைத்தியநாதன் மறைவு

Posted: 20 May 2007 04:22 AM CDT

சென்னை: பிரபல வயலின் கலைஞரும், இசையமைப்பாளருமான எல்.வைத்தியநாதன் மரணமடைந்தார். 65 வயதாகும் வைத்தியநாதனுக்கு நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

மேலதிக தகவல்கள் இங்கே

சற்றுமுன்: கோவை சந்திப்பு படங்கள்

Posted: 20 May 2007 12:39 AM CDT


மாண்டலின் ஆறுமுகம் அய்யாவை நேர்காணல் செய்யும் பதிவர்பாமரன்.


பட்டறையில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதி.




பட்டறையில் கலந்து கொண்டவர்களில் இன்னொரு பகுதி.

ச: தில்லி - உபி பஸ் போக்குவரத்து மீண்டும் துவங்கியது

Posted: 19 May 2007 09:56 PM CDT

சென்ற நவம்பரில் உபி போக்குவரத்துக் கழகம் தானாகவே தில்லி நகர வழித்தடங்களில் பஸ்கள் விட்டதையொட்டி ஏற்பட்ட பிரச்சினையால் இரு மாநிலங்களுக்கும் இடையே தடைபட்டிருந்த பேருந்து போக்குவரத்து உபியில் புதிய அரசு அமைந்ததும் மீண்டும் துவங்கப் பட்டுள்ளது. இருமாநில போக்குவரத்து அமைச்சர்களும் கொடியசைத்து சனியன்று பேருந்து இயக்கத்தைத் துவக்கி வைத்தனர்.


முழு விவரமறிய...Bus service resumes between Delhi-UP- Hindustan Times

ச:நைஜீரியாவில் மூன்று இந்தியர்கள் பிணை

Posted: 19 May 2007 09:43 PM CDT

சனிக்கிழமையன்று நைஜீரியாவின் எண்ணெய் நகரான போர்ட் ஹார்கோர்ட்டிலிருந்து மூன்று இந்திய எண்ணெய்வள ஊழியர்களை அவர்களது இல்லங்களிலிருந்து தீவிரவாதிகள் கடத்தியுள்ளனர். முன்னதாக அவர்கள் இந்தோனெஷிய இந்தோராமா நிறுவனத்தில் பணிபுரியும் பத்து பேரை பிடித்துக் கொண்டனர். இராணுவத்தினரின் துப்பாக்கிச் சண்டையின் பிறகு அவர்களில் ஏழு பேரை காப்பாற்ற முடிந்தது. இந்திய அரசு நைஜீரியாவில் உள்ள தூதரகம் பேச்சுவார்த்தைகளில் பங்குகொண்டு அவர்களை விடுவிக்க ஏற்பாடு செய்யும் என அறிவித்துள்ளது.

Nigeria militants abduct 3 Indians-India-The Times of India

No comments: