Tuesday, May 15, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

நடராஜர் ஆலய சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் பாடலாம்: அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு

Posted: 15 May 2007 05:59 PM CDT

சிதம்பரம், மே 16: சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம், திருவாசகம் பாடலாம் என அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

தமிழில் தேவாரம், திருவாசகம் பாட அனுமதி மறுத்து மயிலாடுதுறை இணை ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சிவனடியார் உ.ஆறுமுகசாமி இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு மேல்முறையீடு செய்தார்.

விசாரணை முடிந்து ஆணையர் த.பிச்சாண்டி அளித்த தீர்ப்பு விவரம்: சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் அனைவரும் நின்று வழிபடும் இடத்திலிருந்து தமிழில் இறைவனை போற்றிப் பாடுவதை தடுப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானதாகும். கடந்த 15 ஆண்டுகளாக ஆறுமுகசாமி தெய்வத்தமிழ் பதிகங்களை பாட அனுமதி மறுப்பது அவர் பிறந்த சாதியின் காரணமாக ஒதுக்கப்படும் செயலாகும்.

பழக்க வழக்கங்கள் அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பானதாக இருக்கக்கூடாது.

Dinamani

"சுற்றுச்சூழல்-நகரம்" திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் தேர்வானாலும் நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை

Posted: 15 May 2007 05:21 PM CDT

மத்திய அரசின் சுற்றுச்சூழல்-நகரம் என்ற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் உள்ளிட்ட 6 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா, மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு திங்கள்கிழமை எழுத்து வடிவில் அளித்த பதில்:

  1. கோட்டயம் (கேரளம்),

  2. புரி (ஒரிசா),

  3. திருப்பதி (ஆந்திரப் பிரதேசம்),

  4. உஜ்ஜைனி (மத்தியப் பிரதேசம்),

  5. பிருந்தாவன் (உத்தரப்பிரதேசம்) மற்றும்

  6. தஞ்சாவூர் (தமிழ்நாடு) ஆகிய 6 நகரங்கள் சுற்றுச்சூழல்-நகரம் திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.



என்றாலும், தஞ்சாவூருக்கு நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.

தமிழகத்தை சேர்ந்த ராஜா நேற்று வரை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

domain-B : Indian business : economy : Zero funds for Thanjavur under Eco-City project | தினமணி

S. No

Town

Amount released in Lakh of Rupees

1

Kottayam

40.84

2

Puri

55.53

3

Tirupati

49.34

4

Ujjain

67.41

5

Vrindavan

43

6

Thanjavur

Nil

ஜெயலலிதாவுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனுக்கு குற்றப்பத்திரிகை

Posted: 15 May 2007 05:06 PM CDT

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் பரிசாக ரூ.2 கோடி வழங்கப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இவ்வழக்குக்காக சென்னையில் சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தார் செங்கோட்டையன். விசாரணையை ஜூன் 11-ம் தேதிக்கு நீதிபதி மீனாட்சி சுந்தரம் ஒத்தி வைத்தார்.

1992-ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது ஜெயலலிதாவுக்கு தமிழகத்தின் பல இடங்களில் இருந்து பிறந்தநாள் பரிசாக காசோலை மூலம் ரூ. 2 கோடி பணம் அனுப்பப்பட்டது. இந்தப் பணத்தை தனது வங்கிக் கணக்கில் சேர்த்துக் கொண்டார் ஜெயலலிதா.

இது பற்றி வருமானவரித்துறையின் புகாரின்பேரில் சிபிஐ போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். ஜெயலலிதாவுக்குப் பணம் அனுப்ப ஏற்பாடு செய்ததாக செங்கோட்டையன் மற்றும் அழகு திருநாவுக்கரசு மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Dinamani

மாநிலங்களவை: தமிழகத்திலிருந்து 6 இடங்களுக்கு ஜூன் 15-ல் தேர்தல்

Posted: 15 May 2007 04:23 PM CDT

தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து, அந்த இடங்களுக்கான தேர்தல் ஜூன் 15-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  • அதிமுகவைச் சேர்ந்த ஆர். காமராஜ்,
  • எஸ். கோகுல இந்திரா,
  • எஸ்.எஸ். சந்திரன்,
  • பி.ஜி. நாராயணன்,
  • திமுகவைச் சேர்ந்த கே.பி.கே. குமரன்,
  • காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.எஸ். ஞானதேசிகன்

ஆகியோரது பதவிக்காலம் முடிவடைகிறது. சட்டப் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில்,

  • அதிமுகவுக்கு இரண்டு உறுப்பினர்கள்,
  • காங்கிரசுக்கு ஒரு உறுப்பினர்,
  • திமுகவுக்கு மூன்று உறுப்பினர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

வேட்பு மனுத்தாக்கல் செய்ய ஜூன் 5 கடைசி நாள்.
வாபஸ் பெற கடைசி நாள் ஜூன் 8.

மாநிலங்களவைத் தேர்தல்: 6 பதவிகளுக்கு வேட்பாளர்கள் யார்?: தமிழக கட்சிகளில் பரபரப்பு

மாநிலங்களவையில் மொத்தம் 229 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 18 பேர் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இடம் பெற்றுள்ளனர்.

கட்சிகளின் பலம்:
தற்போது பேரவையில் உள்ள 234 உறுப்பினர்களில் கட்சி வாரியாக பலம்:
  • தி.மு.க. - 95;
  • அ.தி.மு.க. - 61;
  • காங்கிரஸ் - 34;
  • பா.ம.க. - 18;
  • மார்க்சிஸ்ட் - 9;
  • இந்திய கம்யூனிஸ்ட் - 6;
  • ம.தி.மு.க. - 6;
  • விடுதலைச் சிறுத்தைகள் - 2;
  • தே.மு.தி.க. -1;
  • சுயேச்சை 1;
  • நியமன உறுப்பினர் 1;
  • பேரவைத் தலைவர் -1.


(மதுரை மேற்குத் தொகுதி அ.தி.மு.க. உறுப்பினர் எஸ்.வி. சண்முகம் காலமானதால், அத்தொகுதி காலியாக உள்ளது.)

காங்கிரஸில் கிடைக்கக் கூடிய ஓர் இடத்தில் அக்கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட
  • பி.எஸ். ஞானதேசிகனே நிறுத்தப்படலாம்.
  • அல்லது ஜி.கே. மூப்பனாரின் சகோதரர் ஜி.ஆர். மூப்பனார்,
  • முன்னாள் மத்திய அமைச்சர்கள் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்,
  • ஜெயந்தி நடராஜன்,
  • தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமி போன்றவர்களில் யாராவது ஒருவருக்கு வாய்ப்புத் தரப்படலாம் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
  • மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் விரைவில் முடிய உள்ளது. எனவே, அவருக்கோ,
  • தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் வீரப்ப மொய்லிக்கோ
கூட இந்த இடத்தை காங்கிரஸ் மேலிடம் அளிக்கலாம்.

தி.மு.க.வைப் பொருத்தவரை, தனக்குக் கிடைக்கும் 3 இடங்களில் ஒன்றை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு அல்லது அக்கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு விட்டுத் தர எண்ணி உள்ளது.

எஞ்சிய 2 இடங்களில்
  • அழகிரி அல்லது அவர் சுட்டிக் காட்டும் நபர்,
  • கனிமொழி,
  • டி.கே.எஸ். இளங்கோவன்,
  • திருச்சி சிவா,
  • டாக்டர் கே.பி. ராமலிங்கம்,
  • தில்லியில் உள்ள தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன்,
  • முன்னாள் அமைச்சர்கள் அ. ரகுமான்கான்,
  • எஸ்.பி. சற்குணபாண்டியன்,
  • இந்திரகுமாரி,
  • கோவை மு. ராமநாதன்,
  • சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் சரவணன்,
  • புகழேந்தி,
  • ஜெ. அன்பழகன்,
  • தற்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் முடிபவர்களில் ஒருவரான கே.பி.கே. குமரன்

போன்றவர்களில் யாராவது இருவருக்கு வாய்ப்புத் தரப்படலாம்.

அ.தி.மு.க.வைப் பொருத்தவரை
  • சசிகலா அல்லது அவர் சுட்டிக் காட்டும் ஒருவர்,
  • கட்சியின் அவைத் தலைவர் இ. மதுசூதனன்,
  • முன்னாள் அமைச்சர்கள் டி.எம். செல்வகணபதி,
  • எஸ். முத்துசாமி,
  • நயினார் நாகேந்திரன்,
  • தளவாய் சுந்தரம்,
  • கட்சி நிர்வாகி ஆதிராஜாராம்

உள்ளிட்டோரில் யாராவது இருவர் நிறுத்தப்படலாம் என அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

தா. கிருட்டிணன் கொலை வழக்கு விசாரணைக்கு தடை

Posted: 15 May 2007 04:04 PM CDT

புதுதில்லி, மே 16: தா. கிருட்டிணன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மு.க. அழகிரி மீது மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீதிபதிகள் அசோக் பான் மற்றும் வி.எஸ். சிர்புர்கர் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் செவ்வாய்க்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

மதுரையில் முக அழகிரிக்கு உள்ள செல்வாக்கை மேற்கோள் காட்டி வழக்கை கர்நாடகாவுக்கு மாற்றவேண்டும் என்று சாட்சி விண்ணப்பம் அளித்திருந்தார்.

Dinamani | Chennai Online News Service - View News: "SC also asked the State Government as to why the case should not be transferred to Karnataka. The bench asked the TN Government to file its response within four weeks after one of the witnesses apprehended threat to his life.

The witness Suresh Kumar alias Kremmer Suresh filed the petition seeking transfer of the trial presently being held before the III Additional Sessions Judge, Madurai to any other court in the neighbouring Karnataka State on the ground that a free and fair trial cannot be held as Azhagiri wielded enormous influence."

தாஜ்மஹாலை பாதுகாக்க புது முயற்சி

Posted: 15 May 2007 03:49 PM CDT

நவீனகால உலக அதியசங்களில் ஒன்றாகவும், இந்தியாவின் புகழ்பெற்ற நினைவுச் சின்னமாக கருதப்படும் தாஜ்மஹால் கட்டிடத்தை அண்மித்த பகுதிகளில் காற்றில் மாசுகட்டுப்பாடு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும், தாஜ்மஹாலின் புகழ்பெற்ற வெளிப்புற வெள்ளை பளிங்குக் கற்கள் மெதுவாக நிறமிழந்து மஞ்சள் நிறமாக மாறி வருவதாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஒன்று கூறியுள்ளது.

இதற்கு முன்னர் முயற்சிக்கப்பட்ட, பளிங்குக் கற்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத சுத்திகரிப்பு முறை ஒன்றினை மீண்டும் மேற்கொண்டு, இந்த 17ம் நூற்றாண்டு நினைவுச் சின்னத்தை பழைய நிலைக்கே, அதாவது வெள்ளை நிறத்தை மீண்டும் கொண்டு வர மற்றுமொருமுறை முயற்சிக்கலாம் என்று இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் தாஜ்மஹாலிற்கு 30 இலட்சம் பார்வையாளர்கள் வருகின்றனர். சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க சட்டப்படி இந்த புகழ்பெற்ற நினைவுச் சின்னத்திற்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவிலேயே, வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

BBC NEWS | South Asia | Face mask to beautify Taj Mahal (BBC Tamil)

பர்மாவுடன் ரஷியா அணு சக்தி ஒப்பந்தம்

Posted: 15 May 2007 03:46 PM CDT

ரஷ்யா பர்மாவுடன் ஒரு அணு சக்தி கூட்டுறவு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருப்பதாக கூறுகிறது. இந்த நடவடிக்கை, மேலை நாடுகளை கவலையுறச்செய்யும். அடக்குமுறை மற்றும் ஜனநாயக தன்மையற்ற நடவடிக்கைகளை கையாளுவதாக பர்மா மீது மேலை நாடுகள் குற்றச்சாட்டுகின்றன.

பர்மாவில் இந்த உடன்படிக்கையின் மூலம் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் , ஒரு அணு ஆராய்ச்சி மையம் ஒன்றிற்கான வடிவமைப்பு மற்றும் கட்டுமான வேலைகள் ஆகியவை செய்து தரப்படும் என்று மோஸ்கோவில் உள்ள அணுசக்தி நிறுவனத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

இந்த ஒப்பந்தத்தில் மிகக்குறைவாக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் மூலம் இயங்கும் ஒரு 10 மெகாவாட் திறன்கொண்ட அணுசக்தி உலையும் அடங்கும். இந்த அணு உலை அமைதி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் என்று பர்மிய அரசு கூறுகிறது.

BBC NEWS | Asia-Pacific | Russia and Burma in nuclear deal (BBC Tamil)

"பாஸ் மார்க்' நிர்ணயிப்பதில் சாதகமான புதிய விதி: பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு

Posted: 15 May 2007 10:02 AM CDT

கடந்த ஆண்டு வரை பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சிபெற வேண்டுமெனில், குறைந்தபட்சம் செய்முறை (பிராக்டிகல்) தேர்வில் 30 சதவீத மதிப்பெண்களும், கருத்தியல் (தியரி) தேர்வுகளில் 40 சதவீத மதிப்பெண்களும் பெற வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த ஆண்டு முதல் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமெனில், குறைந்தபட்சம் செய்முறைத் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்களும், கருத்தியல் தேர்வுகளில் 30 சதவீத மதிப்பெண்களும் பெற வேண்டும் என்று மாற்றம் செய்யப்பட்டது.

இதேபோல சில தேர்வுகளில் கருணை மதிப்பெண்கள் (கிரேஸ் மதிப்பெண்கள்) வழங்கவும் அரசு உத்தரவிட்டது.

இதன் பயனாக இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 81 சதவீதமாக அதிகரித்துள்ளது. கிராமப்புற பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதமும் அதிகரித்துள்ளது.

Dinamani

தமிழ்ப் பாடத்தில் முதலிடம் பிடித்த மாதவன்

Posted: 15 May 2007 09:59 AM CDT

கரூர் வெண்ணெய்மலை அருகேயுள்ள சேரன் மெட்ரிக் பள்ளி மாணவர் எஸ்.மாதவன் பிளஸ் 2 தமிழ்ப் பாடத்தில் 196 மதிப்பெண்கள் பெற்றதன் மூலம் மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.

எஸ். மாதவன் கூறியது:
"எஸ்எஸ்எல்சி தேர்வில், தமிழ்ப் பாடத்தில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்தேன். தமிழ்ப் பாடத்தில் ஆர்வம் அதிகம் உண்டு. இதற்கு ஆசிரியர்கள், பெற்றோரும் காரணம். அடுத்து மருத்துவம் பயின்று, ஏழைகளுக்குச் சேவை செய்வேன்."

Dinamani

சற்றுமுன்... கருத்துக்கணிப்பு முடிவு

Posted: 15 May 2007 09:55 AM CDT

எந்த உயர் கல்வியில் சேரலாம்?: புதிய இணையதளம் அறிமுகம்

Posted: 15 May 2007 09:53 AM CDT

பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு எந்த உயர் கல்வியில் வாய்ப்பு கிடைக்கும் என்பதை அறிய www.collegesintamilnadu.com என்ற இணைய தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இணைய தளத்தில் மாணவர் தனது பிளஸ் 2 தேர்வு பதிவு எண்ணைத் தெரிவித்தால், அவர் பொறியியல் அல்லது மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான நிலையை அறியலாம்.

Dinamani

முன்னணி கல்விக்கூடங்களில் பழங்குடிகள் படிக்க நிதியுதவி

Posted: 15 May 2007 09:47 AM CDT

பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் படிக்க, மாணவர்கள் தங்குவதற்காகும் செலவு, தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட கல்விக் கட்டணம், பிற செலவுகள் ஆகிய அனைத்துக்குமான நிதியுதவி அளிப்பதற்கான அரசு திட்டம் தயாராகிவருகிறது என்று பழங்குடிகள் நலத்துறை அமைச்சர் பி.ஆர். கிண்டய்யா தெரிவித்தார்.

Dinamani

ச: தமிழ்நாடு பிராமணர் சங்கம் வேண்டுகோள்

Posted: 15 May 2007 06:11 AM CDT

சென்னை, மே 15:

ராமர் பாலம் விஷயத்தில் இந்துக்களின் மத உணர்வுகளை மதித்து மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

கும்பகோணத்தில் நடைபெற்ற சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழக அரசின் கலைக்கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் கலைக்கல்லூரிகளில் 2வது ஷிப்டு முறையை அறிமுகம் செய்ய தமிழக அரசு முன்வந்திருப்பதற்கு செயற்குழு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் தலித் மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பெரிய மாற்றம் ஏற்பட வேண்டுமானால் உத்தர பிரதேசத்தைப் போல தமிழகத்திலும் தலித் சகோதரர் அல்லது சகோதரி முதல்வராக வர வேண்டும் என்றும் இந்த செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

- மாலைச் சுடர்

இந்தியா-பங்களாதேசம் மூன்றாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது

Posted: 15 May 2007 05:53 AM CDT

இந்தியாவிற்கும் பங்களாதேசத்திற்கும் இடையே சிட்டகாங்கில் நடைபெறவிருந்த மூன்றாம் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்றிரவு பெய்த மழையினால் இன்று கைவிடப் பட்டது.நடுவர்கள் மூன்றுமுறை பார்வையிட்டபிறகும் ஈரம் காயாததால் இம்முடிவு எடுக்கப் பட்டது.


India-Bangladesh 3rd ODI called off-The Times of India

ச: பாகிஸ்தான்: பெஷாவர் ஓட்டலில் குண்டுவெடிப்பு: 24 பேர் மரணம்

Posted: 15 May 2007 05:44 AM CDT

பாகிஸ்தானின் வடமேற்கு மாநில தலைநகரான பெஷாவரில் ஒரு ஓட்டலின் வரவேற்பறையில் வெடித்த குண்டுவெடிப்பில் 24 பேர்வரை மரணமடைந்திருப்பதாக அம்மாநில அதிகாரிகள் கூறினர். ஆஃப்கானியர்கள் அதிகம் புழங்கும் அந்த ஓட்டல் பெஷாவர் நகரத்தின் மையத்தில் புகழ்பெற்ற மசூதியின் அண்மையில் உள்ளது.

Hotel bomb kills at least 24 in Pakistan's Peshawar | U.S. | Reuters

ச: தினகரன் தாக்குதல்: அட்டாக் பாண்டியன் கைது

Posted: 15 May 2007 05:34 AM CDT

தினகரன் நாளிதழ் அலுவலகத்தை தாக்கிய வழக்கில் முக்கிய குற்றவாளியான அட்டாக் பாண்டியன் இன்று கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப் பட்டார். ்மதுரை ஊரக காவல்நிலையத்தில் வலிய வந்தடைந்த அட்டாக் பாண்டியனை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.


Main accused in Dinakaran attack arrested - India

சற்றுமுன்: இங்கிலாந்தில் மேயராகும் முதல் இந்தியர்

Posted: 15 May 2007 02:41 AM CDT

லண்டன்: இங்கிலாந்தில் உள்ள கிளவ்செஸ்டர் நகரின் மேயராக இந்தியர் ஒருவர் முதன் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள கிளவ்செஸ்டர் மாநகராட்சியில் தேர்தல் நடந்தது. அதில் பார்ட்டன் டிரெட்ஒர்த் பகுதி கவுன்சிலராக தொழில் கட்சி சார்பில் இந்தியாவை சேர்ந்த ஹர்ஜித் கில் போட்டியிட்டார். அவர் அமோக வெற்றி பெற்று மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

ஆசிய நாட்டை சேர்ந்த ஒருவர் கிளவ்செஸ்டர் நகரின் மேயராக தேர்ந்து எடுக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.

ஹர்ஜித் கில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகே உள்ள தகோகாவை சேர்ந்தவர். ஜலந்தரில் முதுகலை பட்டம் பெற்ற அவர் பிரபலமான ஹாக்கி வீரர் ஆவார். இவர் இந்திய ஆணியில் இடம் பெற்று பல சர்வேதச போட்டிகளில் ஆடியுள்ளார்.

தற்போது ஹாக்கி போட்டிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார். ஹர்ஜித் கில் 1978ம் ஆண்டு இங்கிலாந்தில் குடியேறினார். அதே ஆண்டே இங்கிலாந்தை சேர்ந்த ஜம்மிந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குர்கமால் (26) மகனும், அம்ரிதி (24) மகளும் உள்ளனர். ஹர்ஜித் கிளவ்செஸ்டர் நகரின் 527வது மேயராக வருகிற 21ம் தேதி பதவி ஏற்க இருக்கிறார் கில்.

நன்றி:- தட்ஸ் தமிழ்

சற்றுமுன்: ஆஸ்திரேலிய யோசனை - ஜிம்பாப்வே மறுப்பு

Posted: 15 May 2007 02:36 AM CDT

ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை பொதுவான இடத்தில் நடத்தலாம் என்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் யோசனையை ஏற்க ஜிம்பாப்வே மறுத்துவிட்டது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக ஜேம்ஸ் சுதர்லேண்ட், ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகி ஓஜியாஸ் பூட்டை தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது மூன்றாவது நாட்டில் இந்தப் போட்டியை நடத்தலாம் என்ற யோசனையை பூட் மறுத்துவிட்டார்.

ஆஸ்திரேலிய அணி ஜிம்பாப்வே சென்று ஒருநாள் தொடரில் விளையாட அந்நாட்டு பிரதமர் ஜான் ஹோவார்ட் ஞாயிற்றுக்கிழமை தடை விதித்தார்.

பொதுவான இடத்தில் இந்தப் போட்டியை நடத்தலாம் என்ற யோசனையை ஏற்க ஜிம்பாப்வே மறுத்துவிட்டதால் தற்போது இந்தப் போட்டிகள் நடைபெறாது என கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

நன்றி:- MSN தமிழ்

சற்றுமுன்:- தயாநிதியின் இடத்தை பிடிக்கிறார் அமைச்சர் ராசா: ராதிகா செல்வி, குப்புசாமி, குமரன்-ஒருவருக்கு பதவி

Posted: 15 May 2007 02:32 AM CDT

மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையிலிருந்து தயாநிதி மாறனை விலக்கிய திமுக தலைவர் கருணாநிதி, அந்தத் துறையை மத்திய சுற்றுச்சூழல்துறை அைமச்சர் ராசாவிற்கு வழங்க பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது.

தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீரச்சாமி, அமைச்சரவையிலிருந்து தயாநிதி மாறனை விலக்கிக் கொள்வது தொடர்பாக முதல்வர் கருணாநிதியின் கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஐக்கிய கூட்டணி தலைவர் சோனியா காந்தியிடமும் ஒப்படைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்வர் கருணாநிதி அளித்த கடிதங்களை பிரதமரிடமும், சோனியா காந்தியிடமும் கொடுத்தேன். அக்கடித்தத்தில் என்ன எழுதியிருந்தது என எனக்கு தெரியாது. அதை படித்த பிரதமர் இதில் குறிப்பிட்டுள்ளபடி நிறைவேற்றுவதாக கூறினார்.

மாறன் வகித்த துறை யாருக்கு வழங்கப்படும் என்று எனக்குத் தெரியாது என்றார்.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி கூறுகையில், அமைச்சர்கள் பற்றி கூட்டணி கட்சி தலைவர்கள் முடிவு செய்வார்கள். இதில் காங்கிரஸ் தலையிடாது என்றார்.

இந் நிலையில் தயாநிதி மாறன் வசம் இருந்த தகவல் தொழில்நுட்பத்துறை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ராஜாவிற்கு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

ராஜா வகித்து வரும் வனத்துறையின் கேபினட் பதவி, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனி மாணிக்கத்திடம் தரப்படலாம் எனவும் தெரிகிறது.

இதன் மூலம் இணைமைச்சராக உள்ள பழனி மாணிக்கம் கேபினட் மந்திரியாக பதவி உயர்வு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பழனி மாணிக்கம் வசம் உள்ள நிதித்துறை இணையமைச்சர் பதவி மூத்த எம்பியான குப்புசாமி அல்லது ராதிகா செல்வி, குமரன் ஆகியோரில் ஒருவருக்குத் தரப்படலாம் என்று தெரிகிறது.

இந்த குமரனிடம் இருந்து தான் தினகரன் பத்திரிக்கையை தயாநிதி மாறனும் கலாநிதி மாறனும் ரூ. 130 கோடிக்கு வாங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. பத்திரிக்கையை மாறன் குடும்பத்திடம் விற்பதை தனது மாமனாரான தினந்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனிடம் கூட குமரன் தெரிவிக்கவில்லை என அப்போது செய்திகள் வந்தது நினைவுகூறத்தக்கது.

இதனால் மாறன் குடும்பத்தினர் மீது கடும் அதிருப்தியில் இருந்தார் ஆதித்தன். இப்போது தயாநிதி பதவி காலியாகி அதன் மூலம் குமரனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. குமரன் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்றவர் ஆவார்.

அமைச்சர் பதவிக்கு பெயர் அடிபடும் இன்னொரு திமுக எம்பியான ராதிகா செல்வி, ஜெயலலிதா அரசால் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் மனைவியாவார்.

மத்திய அமைச்சரவையில் நாடார்களுக்கு பிரதிநிதித்துவம் தரவில்லை என திமுக மீது அந்த சமூகத்தினர் குமுறல் வெளியிட்டு வந்தனர். குமரனுக்கோ அல்லது ராதிகா செல்விக்கோ அந்தப் பதவி தரப்பட்டால் அச் சமூகத்தினரின் மன வருத்தத்தையும் போக்க முடியும் என திமுக கருதுகிறது.

நன்றி:-தட்ஸ் தமிழ்

ச: மும்பையில் தீ விபத்து

Posted: 15 May 2007 02:21 AM CDT

இன்று காலை 8 மணியளவில் மும்பை கல்பாதேவி பகுதியில் உள்ள L K மார்கெட்டில் ஐந்துமாடிக் கட்டிடமொன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. எட்டு தீயணைப்பு வண்டிகள், இரண்டு ஆம்புலன்சுகள் மற்றும் எட்டு தண்ணீர் வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. காரணங்கள் , சேதங்கள் இதுவரை தெரியவில்லை.

The Hindu News Update Service

உள்துறை செயலாளரை மிரட்டிய தயாநிதி!

Posted: 15 May 2007 12:58 AM CDT

மே 15, 2007

சென்னை: மதுரை தினகரன் சம்பவத்தைத் தொடர்ந்து உள்துறைச் செயலாளரைத் தொடர்பு கொண்டு மிரட்டுவது போல பேசினார் தயாநிதி மாறன் என அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

முதல்வர் கருணாநிதியின் கடிதங்களை டெல்லிக்கு எடுத்துச் சென்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரிடம் கொடுத்து விட்டு நேற்று இரவு சென்னை திரும்பினார் ஆற்காடு வீராசாமி.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மதுரை சம்பவத்துக்கும், தனக்கும் தொடர்பு இல்லை என்று தயாநிதி மாறன் கூறுவதில் உண்மை இல்லை. மதுரை சம்பவம் நடந்த பின்னர் அவர் உள்துறை செயலாளருக்குப் போன் செய்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா, இல்லையா. உடனடியாக சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும். தவறினால் குடியரசுத் தலைவரிடம் புகார் செய்வேன் என்று மிரட்டியுள்ளார். அது வரம்பு மீறிய செயல்.

அவரது தாத்தாதான் முதல்வர். விரும்பியிருந்தால் அவரிடம் பேசியிருக்கலாம். அதை விடுத்து உள்துறைச் செயலாளரை மிரட்டியுள்ளார் என்றார் ஆற்காடு வீராசாமி.

முன்னதாக டெல்லியில் பிரதமர், காங்கிரஸ் தலைவரை சந்தித்தார் ஆற்காடு வீராசாமி. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வர் அனுப்பியிருந்த கடிதத்தை பிரதமரிடம் கொடுத்தேன். வாங்கிப் பிரித்துப் படித்துப் பார்த்த பிரதமர், அதில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்துவதாக கூறினார்.

அதேபோல சோனியா காந்திக்குக் கொடுக்கப்பட்ட கடிதத்தையும் அவரைச் சந்தித்துக் கொடுத்தேன். விரைவில் அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம்.

தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத யாரும் அமைச்சராவார்களா என்பது எனக்குத் தெரியாது. தமிழக முதல்வரின் பரிந்துரைப்படி பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்றார் ஆற்காடு வீராசாமி.

நன்றி :
தட்ஸ் தமிழ்

சற்றுமுன்: ரிசல்டுக்கு முன்பே பிளஸ் டூ மாணவி தற்கொலை

Posted: 15 May 2007 12:42 AM CDT

சென்னையில் பிளஸ் டூ தேர்வு முடிவை அறியும் முன்பே மாணவி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் வேலன். இவரது மகள் யமுனா (17) பிளஸ் டூ தேர்வு எழுதியிருந்தார்.

இவர் சரியாக படிப்பதில்லை என அவரது பெற்றோர் அடிக்கடி திட்டியுள்ளனர். இதனால் மன வருத்தம் அடைந்தார் யமுனா.

இந்நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது. தேர்வில் தேல்வியடைந்து விடுவமோ என்ற பயத்தில் நேற்றிரவு யமுனா வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நன்றி:- தட்ஸ் தமிழ்