Satrumun Breaking News
Satrumun Breaking News |
சிவாஜி' (இந்தி) படத்துக்காக ரஜினிகாந்த் நடிக்கிறார் Posted: 29 Aug 2007 04:42 PM CDT சென்னை, ஆக.29- ரஜினிகாந்த் நடித்த `சிவாஜி' படம், இந்தியில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இதற்காக, சில காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டு, மேலும் 3 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. அதில், ரஜினிகாந்த் கலந்துகொண்டு நடிக்கிறார். மேலும் செய்திக்கு "தினதந்தி". |
மரத்தில் `சாய் பாபா' உருவம் - பொது மக்கள் திரண்டு வந்து தரிசனம் Posted: 29 Aug 2007 04:36 PM CDT பாஸ்தி, ஆக.29- உத்தரபிரதேச மாநிலம் பாஸ்தி நகரத்தில் உள்ள ஒரு மரத்தில் சாய் பாபாவின் உருவம் தெரிவதாக செய்தி பரவியது. இதைக் கேள்விப்பட்டதும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் திரண்டு சென்று அந்த மரத்தில் தெரிந்ததாகக் கூறப்படும் சாய்பாபா உருவத்தை தரிசித்தனர். பைசபாத், கோரக்பூர், தேவிபடான் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் மக்கள் திரண்டு வந்தனர். பெருந்திரளாக மக்கள் திரண்டதால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட மேலும் செய்திக்கு "தினதந்தி". |
குப்பை அகற்றும் பணி மந்தம் - கொலம்பியா நிறுவனத்துக்கு மாநகராட்சி நோட்டீஸ் Posted: 29 Aug 2007 02:49 PM CDT சென்னை, ஆக. 30: மாநகராட்சியின் 3 மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் ஒப்பந்தம் பெற்றுள்ள நீல்மெட்டல் பனால்கா நிறுவனம், உரிய முறையில் குப்பைகளை அகற்றாததால், அதனிடம் விளக்கம் கேட்டு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் செய்திக்கு "தினகரன்". |
டில்லியில் தென்னக மீனவர்கள் போராட்டம் Posted: 29 Aug 2007 01:42 PM CDT கடல் அட்டை எனப்படும் மீன் வகையைப் பிடிக்க அரசு விதித்துள்ள தடையை நீக்கக் கோரி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளத்தில் இருந்தும் மீனவர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். கடல் அட்டைகளைப் பிடிக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், கடந்த 2001-ம் ஆண்டு தடை விதித்தது. இந்தத் தடையை விலக்கக் கோரி மீனவர் அமைப்புக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், இதுவரை அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. பல்வேறு அண்டை நாடுகளில் கடல் அட்டைகளைப் பிடிக்க இவ்வாறு தடை விதிக்காத நிலையில், இந்தியாவில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ் பிபிசி The Hindu : National : Fishermen seek lifting of the ban on sea cucumber (Holothurians) Udayavani - National Fishworkers Forum appeals to PM |
Posted: 29 Aug 2007 12:53 PM CDT இலங்கைக்கு வருகை தந்திருக்கும் மியான்மார் பதில் பிரதமர் லெப்டினட் ஜெனரல் தீன்சின் தமது பாரியார் சகிதம் நேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இச் சந்திப்பின்போது ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ திருமதி தீன்சினுக்கு கைலாகு கொடுத்து வரவேற்பதைக் காணலாம். ... தகவல் : தினக்குரல் "இன நெருக்கடித் தீர்வு முயற்சிக்கு வெளிநாட்டு உதவி தேவையில்லை" - இலங்கைப் பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்கா இலங்கை இன நெருக்கடித் தீர்வு விடயத்தில் இனிமேல் வெளிநாட்டு உதவியை பெற்றுக் கொள்வதில்லையென அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்திருக்கும் பிரதமர் இரட்ணசிறி விக்கிரம நாயக்கா, பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் அரசியல் கட்சிகளைக் கொண்ட சர்வகட்சி மாநாட்டின் மூலமே தீர்வை எட்டுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதி பூண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். தகவல் : தினக்குரல் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் - விடுதலைப் புலிகள் சந்திப்பு இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் சோல்பர்க் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் இன்று (ஓகஸ்ட் 29) பிற்பகல் வன்னியில் விசேட பேச்சுவார்த்தையொன்றில் கலந்துகொண்டதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பின் போது விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத் தலைவர் புலித் தேவன் மற்றும் விடுதலைப் புலிகளின் பேச்சாளர் இளந்திரயன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள், போர் நிறுத்தம் குறித்து பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்~ கடந்த ஞாயிறன்று தெரிவித்த கருத்துக்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டதாக வன்னித் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு மதிப்பளித்து அதனை நடைமுறைப்படுத்துவது குறுpத்தும் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவரினால் இந்தப் பேச்சுவார்த்தையின் போது எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தகவல் : Lanka Dissent தமிழ் இளைஞர்கள் இருவரை வாழைச்சேனையில் காணோம் வாழைச்சேனை, நாசிகன் பகுதியைச் சேர்ந்த இரு தமிழ் இளைஞர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காண வில்லை என்று வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதே பகுதியைச் சேர்ந்த காளிமுத்து சிவானந்தன் (வயது22) மற்றும் கைலாயபிள்ளை தயானந்தன் (வயது 18) ஆகியோரே காணாமல் போயிருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த இளைஞர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் கையடக்கத் தொலைபேசிக்கு "கிற்காட்' கொள்வனவு செய்வதற்காக ஓட்டமாவடிப் பகுதிக்குச் சென்ற வேளையிலேயே காணாமல் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. தகவல் : உதயன் |
தமிழகம் வருகிறார் குடியரசுத்தலைவர். Posted: 29 Aug 2007 12:20 PM CDT பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பின் முதன் முறையாக ஆகஸ்டு 31 அன்று சென்னை வருகிறார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள நவீன கலை அரங்கத்தை அவர் திறந்து வைக்கிறார். இந்தக் கலையரங்கத்தை செப்டம்பர் ஒன்றாம் தேதி குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் திறந்து வைக்கிறார். இதற்காக ஆகஸ்டு 31ஆம் தேதி விமானப் படை விமானம் மூலம் அவர் சென்னை வருகிறார். அங்கிருந்து ராஜ்பவன் செல்லும் அவர் இரவில் அங்கு தங்குகிறார். மறுநாள், ஒன்றாம் தேதி காலை ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீபெரும்புதூர் செல்கிறார். அங்கு கலையரங்கத்தை திறந்து வைத்த பின்னர், ராஜிவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். |
பணம் கடத்த முயன்ற இரு இந்தியப் பிரஜைகள் கொழும்பில் கைது Posted: 29 Aug 2007 12:18 PM CDT இலங்கையிலிருந்து வெளிநாட்டு நாணயத் தாள்களை எடுத்துச் செல்ல முயற்சித்த இரண்டு இந்தியப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று (ஓகஸ்ட் 29) பிற்பகல் இந்த இரண்டு இந்தியப் பிரஜைகளும், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவிற்கு செல்வதற்காக முயற்சித்த வேளையில், விமான நிலைய அதிகாரிகளினால் இவர்கள் சந்தேகத்தின் பேரில் சோதனையிடப்பட்டுள்ளனர். இவ்வேளையில்,இவர்கள் நாணயத் தாள்களை விழுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு இவர்கள் நாணயத் தாள்களை விழுங்கியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இவர்கள் இருவரும் விழுங்கியிருந்த வெளிநாட்டு நாணயத் தாள்களின் பெறுமதி ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமானது எனத் தெரிவிக்கப்படுகின்றது. தகவல் : http://lankadissent.com |
'டாக்டர்கள்' விஜய், ஷங்கருக்கு எதிராகப் போராட்டம் Posted: 29 Aug 2007 12:12 PM CDT நடிகர் விஜய், இயக்குனர் ஷங்கர் ஆகியோருக்கு டாக்டர் பட்டம் வழங்கியதைக் கண்டிக்கும் விதமாக கடலூரைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் தமிழரசன் கடலூரில் கழுதைகளுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து நூதன போராட்டம் நடத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், எத்தனையோ சாதனையாளர்கள், சிந்தனையாளர்கள் தமிழகத்தில் உள்ளனர். அவர்களை எல்லாம் புறக்கணித்து விட்டு தமிழுக்கும், தமிழகத்திற்கும் எதுவும் செய்யாத கவர்ச்சி ஆட்டம் போடும் நடிகர் விஜய்க்கும், தமிழுக்கு எதிரான படம் எடுக்கும் இயக்குனர் ஷங்கர் ஆகியோருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தை வன்மையாக கண்டிக்கும் வகையில் தான் இப்போராட்டத்தை நடத்தினேன்என்றார். |
மத்திய மெகா மின் திட்டம் செய்யூரில் வருகிறது. Posted: 29 Aug 2007 12:25 PM CDT மத்திய மின்சக்தி ஆணையம் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் அல்ட்ரா மெகா மின் திட்டங்களை அமைக்க ஒன்பது இடங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. அவை தமிழ்நாட்டில் செய்யூர், மத்திய பிரதேசத்தில் சாசன், குஜராத்தில் முந்த்ரா, ஆந்திராவில் கிருஷ்ணபட்டினம், ஜார்கண்டில் திலையா, ஒரிசாவில் சுந்தர்கர், கர்நாடகாவில் தாத்ரி, சட்டீஸ்கரில் அகல்தரா, மகாராஷ்டிராவில் கிர்யி ஆகிய இடங்கள் ஆகும். இந்த 4000 மெகாவாட் திறன் கொண்ட அல்ட்ரா மெகா மின் திட்டங்கள் உருவாக்கி இயக்கும் திட்டத்தின் அடிப்படையில் யுனிட் விலை போட்டி ஏல முறையில் செயல்படுத்தப்படும். அனைவருக்கும் மின்சாரம் என்ற இலக்கை நோக்கிச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் மின் அமைச்சகத்தை நாடாளுமன்ற ஆலோசனைக் குழு பாராட்டியதோடு திட்டங்களுக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் போது, பொது மக்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாமல் ஒரே மாதிரியான நிவாரணக் கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. தமிழ்சிஃபி யிலிருந்து.. |
விஜயகாந்தை காங்கிரஸ் பக்கம் இழுக்கும் ராஜா முகம்மது. Posted: 29 Aug 2007 11:57 AM CDT எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் ராஜா முகம்மது. ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டு அரசியலில் இருந்தே ஒதுங்கியிருந்தவர் சமீபகாலமாக ஜெயலலிதாவுக்கு எதிரான கட்சிகளை ஓரணியில் சேர்க்கும் புதிய முயற்சியிலும் அவர் இறங்கியுள்ளார். டெல்லி சென்றுள்ள ராஜா முகம்மது அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயலலிதாவுக்கு தமிழகத்தில் செல்வாக்கு முற்றிலும் சரிந்து விட்டது. மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவராக ஜெயலலிதா உள்ளார். அவரை 3வது அணிக் கட்சிகள் நிராகரிக்க வேண்டும். அவரை மூன்றாவது அணித் தலைவராக நியமித்தால் அந்தக் கூட்டணிக்கே எதிர்காலம் இருக்காது.என்றார் ராஜா முகம்மது. |
சென்னை: குப்பையால் திணறும் மாநகராட்சி Posted: 29 Aug 2007 11:54 AM CDT சென்னையில் குப்பை அள்ள ஒப்பந்தம் செய்யப்பட்ட சிங்கப்பூர் ஓனிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தக் காலம் முடிந்து தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனம், நகர் முழுவதும் மலை போல குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற முடியாமல் தடுமாறி வருகிறது. இதனால் நகரமே நாறிப் போய்க் கிடக்கிறது. தற்போது நீல் மெட்டல் என்கிற தென் ஆப்பிரிக்க நிறுவனத்திடம் இந்தப் பணி கொடுக்கப்பட்டுள்ளது. ஓனிக்ஸ் நிறுவனம் தனது ஒப்பந்தம் முடிந்ததைத் தொடர்ந்து தனது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வைத்திருந்த குப்பைத் தொட்டிகளை எடுத்துக் கொண்டு போய் விட்டது. இதனால் கடந்த நான்கு நாட்களாக குப்பைகள் நகர் முழுவதும் பெருகிப் போய் விட்டன. தெரு முனைகள், சாலை ஓரங்கள் உள்பட கிடைக்கும் இடத்தில் எல்லாம் மக்கள் குப்பையை கொட்டி வைத்துள்ளதால் நகரமே நாறிப் போயுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீல் மெட்டல் நிறுவனம் தகுந்த ஏற்பாடுகளைச் செய்யாததால், மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். ஓனிக்ஸ் நிறுவனம் மக்கள் வசதிக்காக பெரிய பெரிய குப்பைத் தொட்டிகளை வைத்திருந்தது. போதிய ஊழியர்களோ, வசதிகளோ இல்லாத பெருகிக் கிடைக்கும் குப்பைகளை அள்ள முடியாமல் நீல் மெட்டல் திணறி வருகிறது. அந்த நிறுவனத்திடம் குப்பையை அள்ள போதிய வாகனங்களும் இல்லை. செனனை நகரின் முக்கியப் பகுதிகளான அடையாறு, தி.நகர், கோடம்பாக்கம், அண்ணா சாலை, மயிலாப்பூர், மந்தைவெளி, திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை என நகரில் எங்கு பார்த்தாலும் மலை போல குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. கடந்த நான்கு நாட்களாக இந்தக் குப்பைகள் அகற்றப்படாததால் பெரும் துர்நாற்றம் வீசுகிறது. இன்னும் 10 நாட்களில் நிலைமை சீராகும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சரும், முன்னாள் மேயருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் இன்று காலை முதல் மழை பெய்து வருவதால் குப்பை அள்ளும் பணி முழுவதும் பாதித்து வீச்சத்தை அதிகரிக்கச்செய்தது. குப்பைகளை அகற்றுவதில் மாநகராட்சி முனைப்புடன் செயற்பட்டாலும் போதிய ஊழியர்கள் இல்லாததால் மாநகராட்சியால் சமாளிக்க முடியவில்லை. நிலைமை மோசமாகி வருவதை அறிந்த சென்னை மாநகராட்சி, யார் வேண்டுமானாலும் குப்பைகளை அள்ளலாம், ஒரு லாரிக்கு ரூ. 500 வாடைகயாக தரப்படும் என திடீரென்று அறிவித்துள்ளது. மழை பெய்ததால் தேங்கி கிடக்கும் குப்பைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். |
துணைநகரம் திட்டம்: திரும்பவும் எதிர்க்கும் பா.ம.க Posted: 29 Aug 2007 08:54 AM CDT திருப்போரூர் அருகே துணைநகரம் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பா.ம.க. மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செங்கல்பட்டு எம்பி ஏ.கே.மூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் திருக்கச்சூர் ஆறுமுகம், து.மூர்த்தி ஆகியோர் திருப்போரூரில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த புதிதில் 44 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி துணை நகரம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், மக்களிடம் சென்று குறைகளை கேட்டறியுங்கள் என எங்களிடம் கூறினார். அதன்பின் ஊரப்பாக்கத்தில் அவர் தலைமையில் கருத்தறியும் கூட்டம் நடந்தது. அதைத் தொடர்ந்து தமிழக அரசு துணை நகர திட்டத்தை கைவிட்டது. இந்நிலையில், தற்போது திராவிடர் கழக பொதுச் செயலர் வீரமணி துணைநகரத் திட்டம் வேண்டும் என பேசி வருகிறார். அதை மாநில மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியும் ஆமோதித்துள்ளார். முதல்வரும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சுகாதாரம் பேண துணை நகரம் அமைக்க வேண்டும் என்றும், இதற்கு அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கூறி உள்ளார். பா.ம.கவும் துணை நகரம் அமைப்பதை எதிர்க்கவில்லை. சென்னையில் இருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ள காஞ்சிபுரத்தில், திருவள்ளூரில் துணை நகரங்கள் அமைக்கலாம். மதுராந்தகம் வட்டத்திலும் அமைக்க லாம். ஆனால் திருப்போரூர் ஒன்றியத்தில் மட்டும் துணை நகரம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறோம். வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டார்கள் என நம்புகிறோம். 20 ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரம், செங்கல்பட்டு மட்டுமே இருந்தன. தற்போது கூடுவாஞ்சேரி, வண்டலூர், கேளம்பாக்கம் என விரிவடைந்துள்ளன. கருத்தறியும் கூட்டம்: துணைநகர திட்டம் தொடர்பாக பொதுமக்கள் கருத்தறிய வரும் செப். 5-ம் தேதி டாக்டர் ராமதாஸ் கேளம்பாக்கம் வருகிறார். துணைநகரம் திட்டத்துக்காக திருப்போரூர் பகுதியில் 25,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தம் நிலை ஏற்படும். இதனால் தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். அடிப்படை போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர். தினமணி |
கிரிக்கெட்: 2007ன் சிறந்த வீரர் பரிந்துரைப் பட்டியல் Posted: 29 Aug 2007 08:51 AM CDT 2007-ம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை ஐசிசி மும்பையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், சுழல்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே, பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் ஆகியோர் மட்டுமே இந்தியாவிலிருந்து அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். கேப்டன் ராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கர், செüரவ் கங்குலி ஆகியோருக்கு அதில் இடமில்லை. ஜாகீரும், கும்ப்ளேவும் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கும், யுவராஜ் சிங் சிறந்த ஒருதின கிரிக்கெட் வீரர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். ருமேலி தார், ஜூலான் கோஸ்வாமி ஆகியோர் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கேப்டன் ஜயவர்தனே, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாண்டிங் ஆகியோர் 4 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சுனில்காவஸ்கர் தலைமையிலான 5 பேர் ஐசிசி குழு இத் தகவலை வெளியிட்டுள்ளது. தினமணி |
"ICL அமைப்புடன் தொடர்பில்லை" - I C C Posted: 29 Aug 2007 08:46 AM CDT இந்தியாவில் பிசிசிஐ-தான் எங்களது அங்கீகாரம் பெற்ற ஒரே அமைப்பு. இந்தியாவில் அவர்கள்தான் யாரையாவது உறுப்பினராக சேர்க்கலாமா, கூடாதா என்பதை முடிவு செய்ய முடியும். நாங்கள் உலக கிரிக்கெட்டை கட்டுப்படுத்தினாலும் பிசிசிஐ- ஐசிஎல் விவகாரத்தில் தலையிட எங்களுக்கு உரிமையில்லை. தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று ஐசிஎல் அமைப்பிடமிருந்து இதுவரை எந்த விண்ணப்பமும் வரவில்லை. இருந்தாலும் இம்மாதிரியான பிரச்னைகளை சமாளிக்க நாங்கள் ஏற்கெனவே 4 கட்ட விதிமுறைகளை அடிப்படையாக வைத்துள்ளோம். அதில், நான்காவது விதிமுறை: அந்நாட்டில் எங்களிடம் உறுப்பினர் அந்தஸ்தை பெற்றுள்ள அமைப்பு அங்கீகாரம் தந்துள்ளதா என்பது. அதற்கு இல்லை என பதில் வந்தால் நாங்கள் அங்கீகாரம் அளிக்க முடியாது. இம் மாதிரி கடந்த ஆண்டு அமெரிக்கா ஒரு போட்டியை நடத்த அனுமதி கேட்டபோது, நாங்கள் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிராக இருந்ததால் அதற்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டோம் என உதாரணம் காட்டினார் ஸ்பீடு. தினமணி |
கிரிக்கெட்: திராவிட்டுக்கு தரவரிசையில் 5-ம் இடம். Posted: 29 Aug 2007 08:46 AM CDT ஐ.சி.சி. கிரிக்கெட் தரவரிசையில் டிராவிட் 5வது இடத்தை பிடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் டிராவிட் சிறந்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் 8வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறினார். தோனி 5வது இடத்தில் இருந்து 15வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார். இங்கிலாந்து தொடரில் இவர் சோபிக்காததே இதற்கு காரணமாகும். |
பட்டங்கள் கொடு: AIIMS மருத்துவர்கள் போராட்டம் Posted: 29 Aug 2007 07:50 AM CDT அனைத்து இந்திய மருத்துவகல்வி கழகத்தில் (AIIMS) இல் கடந்த மூன்று வருடங்களாக பல்வேறு மருத்துவ இளங்கலை,முதுகலை மற்றூம் பட்டமேற்படிப்பு் பட்டங்களை வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழங்காமல் இருப்பதாக குற்றம் சாஅட்டி செவ்வாய் இரவிலிருந்து மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள். தாங்கள் பிற வேலைகளுக்கு விண்ணப்பிக்கவோ வெளிநாட்டில் மேற்படிப்பு தொடரவோ ஒரிஜினல் சான்றிதழ்கள் இல்லாமல் துன்புறுவதாக கூறினர். இந்த வேலைநிறுத்தத்தால் மருத்துவமனை செயல்கள் முழுவதும் பாதிக்கப் பட்டுள்ளது. அவசர சிகிட்சைப் பிரிவும் தீவிர சிகிட்சைப் பிரிவும் மட்டும் இயங்குவதாக போராடும் மருத்துவர்கள் கூறினர். இன்று மாலை ஐந்து மணிக்குள் தங்கள் பட்டங்கள் கிடைகாவிட்டால் போராட்டம் தொடரும் என எச்சரித்துள்ளனர். AIIMS resident doctors strike continues-India-The Times of India |
ஆப்கான்: பணயக்கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர். Posted: 29 Aug 2007 05:49 AM CDT ஆப்கானிஸ்தானில் தென் கொரியாவை சேர்ந்த 23சேவை நிறுவன ஊழியர்களை தலிபான் தீவிரவாதிகள் பணயக கைதிகளாக பிடித்துச் சென்றனர். இவர்களில் 2பேரை தீவிரவாதிகள் சுட் டுக்கொன்றனர். 2 பெண் ஊழியர்களை தீவிரவாதிகள் விடுதலை செய்தனர். மீதி உள்ள 19 பணயக் கைதிகளை மீட்க தீவிரவாதிகளுடன் தென் கொரிய அதிகாரிகள் பேச்சு நடத்தினார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்து தென்கொரிய ராணுவத்தினரையும் வாபஸ் பெற அந்த அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தனர். இதை தீவிரவாதிகள் ஏற்றுக் கொண்டனர். 1 மாதமாக தங்கள் பிடியில் சிக்கி இருக்கும் 19 பணய கைதிகளையும் விடுவிக்க அவர்கள் முன் வந்துள்ளனர். மாலைமலர் |
Posted: 29 Aug 2007 02:54 AM CDT இந்தி திரைப்படமான ஷோலே இரமேஷ் சிப்பி இயக்கி ஜிபி சிப்பி தயாரிப்பில் வெளிவந்து தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஓடி சாதனை படைத்த படம். கப்பர்சிங்கின் வில்லத்தன சிரிப்பும் பசந்தியின் தொடர்ந்த வாயாடிப் பேச்சும் இன்னும் அதன் ஈர்ப்பை விடவில்லை. இந்தப் படத்தின் கதையை ஒட்டி தென்னக இராம்கோபால் வர்மா புதிய ஷோலே படத்தை எடுத்துவருகிறார். மோகன்லால், அமிதாப் முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் இப்படம் சர்ச்சையை கிளப்பியது. உரிமை மீறல் வழக்கு காரணமாக முதலில் 'இராம்கோபால்வர்மாவின் ஷோலே' என்றும் பின்னர் இராம்கோபால்வர்மாவின் ஆக் 'என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தப் பின்னணியில் பிரிதீஷ் நந்தியின் தயாரிப்பு நிறுவனம் ஷோலே படத்தின் உரிமத்தை அதன் தயாரிப்பாளர்களிடமிருந்து ரூ400 கோடி($100 மில்லியன்)க்கு வாங்கியுள்லதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன்படி இவர்களே இப்படத்தை மீண்டும் எடுக்கவோ படத்தை ஒட்டிய முன்கதையையோ பின்கதையையோ எடுக்கவும், சித்திரங்களாலான படமெடுக்கவோ உரிமை உள்ளது. இது பற்றிய செய்தி துணுக்கு: It's official: Pritish Nandy ki Sholay-Entertainment-Media / Entertainment -News By Industry-News-The Economic Times |
ஆக்ராவில் வன்முறை: ஊரடங்கு சட்டம் அமல் Posted: 29 Aug 2007 03:18 AM CDT ஆக்ராநகரில் ஷப்-இ- பாராத் ஊர்வலம் சென்று கொண்டிருந்த ஒரு கும்பலின் மீது லாரி ஒன்று மோதி நான்குபேர் பலியானதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த கூட்டம் நடத்திய வன்முறையில் இருபது லாரிகள் வரை தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் ஊரடங்கு உத்தரவை நாய்கி மண்டி மற்றும் மன்டோலா பகுதிகளில் அமல்படுத்தியுள்ளது. நகர பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. Voilence in Agra, curfew imposed |
Posted: 28 Aug 2007 09:40 PM CDT உலகின் மிகப்பெரிய வைரம் ------------------------------------ தென் ஆப்பிரக்காவின் ஒரு சுரங்கத்தில் இருந்து உலகத்திலேயே மிகபெரிய வைரம் வெட்டிடுக்கப்பட்டிருக்கிறது என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு சுரங்கத்தின் பங்குதாரர் BBC செய்தி நிறுவனத்திடன் தெரிவித்திருக்கிறார். அவரின் கூற்றை துறையின் வல்லுனர்கள் ஏற்க மறுக்கின்றனர். முழு செய்தி இங்கே தெள்ளத்தெளிவான நிலாவின் புகைப்படங்கள் ----------------------------------------------- 1970-களில் அப்போல்லோ வானூர்தியில் இருந்து எடுக்கப்பட்ட நிலவின் படங்கள் பலவற்றை அரிசோனா பல்கலைகழகம் ஸ்கேன் செய்து இணையத்தில் வெளியிட இருக்கிறது. விரிவான செய்தி இதோ கோப்புகளை சேமிக்க உலகம் முழுக்க ஒரே ஃபார்மேட் ------------------------------------------------------------------ கணிணியில் கோப்புகளை (documents) "சேமிக்க Open XML" எனும் ஃபார்மேட் (format) ஒன்றினை உலக நியதியாக்க மைக்ரோசாப்ட்(Microsoft) நிறுவனம் முயன்று வருகிறது. ஆனால் அந்த நிறுவனத்தை நம்ப முடியாது,வருங்காலத்தில் எல்லோரும் அந்த நிறுவனத்தையே சார்ந்து இருக்கும் நிலையை இது ஏற்படுத்தி விடும் என்று பார்வையாளர்கள் கருதுகின்றனர். இதை பற்றிய செய்தி இதோ ஆதாரம்: http://news.bbc.co.uk/1/hi/world/africa/6966540.stm http://news.bbc.co.uk/1/hi/technology/6966655.stm http://www.reuters.com/article/technologyNews/idUSL2824601520070828 |
You are subscribed to email updates from சற்றுமுன்... To stop receiving these emails, you may unsubscribe now. | Email Delivery powered by FeedBurner |
If you prefer to unsubscribe via postal mail, write to: சற்றுமுன்..., c/o FeedBurner, 549 W Randolph, Chicago IL USA 60661 |