Sunday, May 13, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

மனதறிய துரோகம் நினைத்ததில்லை - தயாநிதி

Posted: 13 May 2007 07:20 PM CDT

தயாநிதி மாறன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
நான், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கோ, தலைவர் கலைஞர் அவர்களுக்கோ என் மனதறிய எந்த துரோகமும் நினைத்தது இல்லை. இனி உயிர் உள்ளவரை நினைக்கவும் மாட்டேன். என் தாத்தாவும் தந்தையும் என்னை அப்படி வளர்க்கவும் இல்லை. இந்த நிலையில், என்னை பதவி விலக்குவதும் அடிப்படை உறுப்பினர் பதவியை பறிப்பதும் தலைவருக்கும் அவரது குடும்பத்திற்கும் மகிழ்ச்சி தருவதாக இருந்தால், அதை ஏற்கவும் தயாராக இருக்கின்றேன். ஏனென்றால், நான் தலைவர் கலைஞரின் வளர்ப்பு. அவரால் ஆளாக்கப்பட்டவன். இந்த நேரத்தில் இதைத் தவிர வேறு எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.
3 ஆண்டு காலம் இந்திய நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நேர்மையாகவும் என்னால் முடிந்த அளவு சிறப்பாகவும் பணியாற்றி, பலரின் பாராட்டைப் பெற வாய்ப்பளித்த தலைவருக்கும் கழகத்துக்கும் கழகத் தோழர்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

தயாநிதியை நீக்கியது ஏன்?

Posted: 13 May 2007 04:18 PM CDT

நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 146 பேர் கலந்து கொண்டனர்.கூட்டம் துவங்கியதும், தயாநிதி மாறனின் செயல்பாடு குறித்து விவரிக்கப்பட்டு, அது சம்பந்தமாக உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை கூறலாம் என்று வாய்ப்பளிக்கப்பட்டது. தொடர்ந்து, அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, கோவை ராமநாதன், முகமது சகி உட்பட ஒன்பது பேர் பேசினர். இவர்கள் அனைவருமே தயாநிதியின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.

குறிப்பாக, கட்சியின் ஆதரவு பெற்றதாக கருதப்பட்ட தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நிறுவனத்தின் செய்திகள் பற்றி விமர்சித்தனர். டில்லியில் தயாநிதியின் செயல்பாடு அவரது சொந்த செல்வாக்கை வளர்த்துக் கொள்ளும் விதத்தில் இருந்ததாகவும், கட்சிக்கு அவராலும் அவரது குடும்ப நிறுவனத்தாலும் பயன் ஏதும் இல்லை என்றும் கூறினர்.

கருத்துக் கணிப்பு மற்றும் மதுரை சம்பவத்தில் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக நம்ப வைக்கும் முயற்சியிலும் இவர்கள் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினர். தனது செல்வாக்கை பயன்படுத்தி மீடியாக்களை ஒன்று திரட்டி ஆட்சிக்கு எதிராக செய்திகள் வெளிவருவதற்கு இவர்கள் காரணமாக இருந்ததாகவும் குற்றம்சாட்டினர். இதுதவிர, பல்வேறு தரப்பினர் தி.மு.க.,வுக்கு எதிராக திரும்புவதற்கு இவர்கள் காரணமாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.

தயாநிதிக்கு ஆதரவாக ஒருவர் கூட பேசவில்லை. கூட்டத்தில் பேசிய அனைவருமே, முதல்வரின் குடும்பம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் தயாநிதி விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி என்ன முடிவு எடுத்தாலும் அதை முழுமனதுடன் ஆதரிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

அனைவரும் பேசி முடித்த பின், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். தயாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதற்கான காரணங்களை அப்போது அவர் விளக்கினார். இதன்பின் தயாநிதியிடம் இருந்து மத்திய அமைச்சர் பதவியை பறிப்பது மற்றும் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது ஆகியவை பற்றி முடிவு எடுக்கும் அதிகாரத்தை கருணாநிதிக்கும், அன்பழகனுக்கும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

- தினமலர்

தயாநிதி பதவி விலகினார்

Posted: 13 May 2007 12:19 PM CDT



- தினமலர்

தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்தார்.

Union IT and Communication Minister Dayanidhi Maran sent in his resignation to Prime Minister Manmohan Singh on Sunday night hours after a high-level committee of the party decided to withdraw him from the Union Cabinet.

- CNN IBN

Flash News- தயாநிதி நீக்கம் !

Posted: 13 May 2007 09:53 AM CDT

தயாநிதியை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்க தி. மு. க., நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு

- தினமலர்

ச:அஸ்லன்ஷா - இந்தியாவுக்கு வெண்கலம்

Posted: 13 May 2007 08:39 AM CDT

கோலாலம்பூர், மலேசியாவ்வில் நட்ந்துவரும் அஸ்லன்ஷா கோப்பை ஹாக்கி போட்டிகளில் மூன்றாவது நான்காவது இடங்களுக்கான போட்டியில் இந்தியா தென் கொரியாவை 1-0 எனும் கோல் கணக்கில் வென்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது.

ச: ஜனாதிபதி பதவிக்கு ஷிண்டே: காங்-கம்யூ. கட்சிகள் முடிவு

Posted: 13 May 2007 05:03 AM CDT

புதுடெல்லி, மே.13-

உத்தரபிரதேசம் சட்டமன்ற தேர்தலில் மாயாவதி கட்சி அதிக இடங்களை பிடித்து இருப்பதால் ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா சமாஜ்வாடி கட்சி ஓட்டுகள் வெகுவாக குறைந்து உள்ளன. இதனால் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் எளிதாக வெற்றி பெறும் நிலை ஏற்பட்டு உள்ளது.

காங்கிரஸ் கூட்டணி சார்பில் யாரை நிறுத்தலாம் என்பது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து சோனியா காந்தி கூëட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

நேற்று சோனியா கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களை தனது வீட்டுக்கு அழைத்து பேசினார். இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் பரதன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தலைவர் சீத்தாராம் யெச் சூரி, பார்வர்டு பிளாக் கட்சி பொதுச்செயலாளர் விஸ் வாஸ் ஆகியோர் சோனியாவை சந்தித்து பேசினார்கள்.

அப்போது சிலருடைய பெயரை முன்வைத்து ஆலோசிக்கப்பட்டது. மத்திய மந்திரிகள் பிரணாப் முகர்ஜி, சுஷில்குமார் ஷிண்டே, ஏ.கே.அந்தோணி மற்றும் சரண்சிங், சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, காந்தியவாதி நிர்மலா தேஷ் பாண்டே ஆகியோரில் ஒருவரை நிறுத்தலாம் என்று அப்போது ஆலோசித்தனர்.

இதில் சுஷில் குமார் ஹிண்டேவுக்கு கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு அளிக்க முன்வந்ததாக தெரிகிறது. மராட்டிய முன்னாள் முதல் மந்திரியாக இருந்துள்ளார். கவர்னர் பதவியிலும் இருந்துள்ளார். எனவே பதவிக்கு பொருத்தமாக இருப்பார் என்று பேசப்பட்டது. மேலும் இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். இதனால் மாயாவதி உள்பட எதிர் அணியில் உள்ள கட்சிகளும் அவருக்கு ஆதரவு அளிக்க முன்வரும் என்று கருதுகிறார்கள். எனவே சுஷில் குமார் ஷிண்டேயை நிறுத்துவது என்ற முடிவுக்கு வந்தனர்.

மற்ற கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு இறுதி முடிவு அறிவிக்கின்றனர்.

~மாலைமலர்

Links for 2007-05-12 [del.icio.us]

Posted: 13 May 2007 12:00 AM CDT