Satrumun Breaking News
Satrumun Breaking News |
Posted: 21 May 2007 03:16 PM CDT வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதாவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கிரீடம் பொருத்தப்பட்டது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதாவுக்கு பாரம்பரிய வைர கற்களால் கலை நயமிக்க வைர கிரீடம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கிரீடம் தயாரிக்கும் பணி 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி இடைவிடாது ஏழு நபர்கள் கொண்ட குழுவால் இந்த மாதம் முடிக்கப்பட்டுள்ளது. கிரீடத்தில் பொருத்தப்பட்டுள்ள வைரக் கற்கள் அனைத்தும் விலை மதிப்பற்றவை. கிரீடம் பொருத்தப்பட்ட பின், தேவாலயத்தில் தினசரி சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருவதாகவும், பக்தர்கள் கூட்டமும் அதிகரித்துள்ளதாகவும் பேராலய அதிபர் சேவியர் அடிகள் தெரிவித்தார். தினமலர் |
ச:'பதவி விலகத் தயார்' டி. ஆர். பாலு Posted: 21 May 2007 03:11 PM CDT மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு இன்று 'ராமர் சேது மனிதனால் உருவாக்கப்பட்டது என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப் பட்டால் பதவி விலகத் தயார்.' என அறிக்கை விடுத்துள்ளார். "Some fundamental organisations have claimed that NASA had taken the picture of Ramar Sethu and said that it was a man-made structure. "If it was scientifically proved and NASA said it was man-made, then I will quit", Baalu told reporters here. Baalu offers to quit if Ramar Sethu proved to be man-made The Hindu |
Posted: 21 May 2007 11:21 AM CDT முதல்வர் கருணாநிதி பெயரில் புதிய டிவி சேனலை, ராஜ் டிவி மூலமாக தொடங்க திமுக திட்டமிட்டுள்ளது. இதன் ஒளிபரப்பு ஜூன் 3ம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிகிறது. இதுகுறித்து ராஜ் டிவி தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், திமுகவும், ராஜ் டிவியும் இணைந்து வெகு விரைவில் ஒரு புதிய சேனலை ஆரம்பிக்கவுள்ளன. கலைஞர் டிவி என பெயரிடப்பட்டுள்ள இந்த டிவி ஜூன் 3ம் தேதி முதல் தொடங்கும். கலைஞரின் வழிகாட்டுதலின் பேரில் இந்த சேனல் உருவாக்கப்பட்டுள்ளது. இது உலக மக்களை கவரும் முன்னணி சேனலாக இருக்கும் என்றார். தாட்ஸ்தமிழ் |
வெனிசுவேலாவில் தொலைக்காட்சி நிலையத்தின் உரிமம் ரத்து: மக்கள் ஆர்ப்பாட்டம் Posted: 21 May 2007 10:32 AM CDT ஆர்சிடிவி (RCTV) வெனிசுவேலாவில் இயங்கிவரும் தனியார் தொலைக்காட்சியாகும். அதிபர் ஹ்யூகோ சாவஸ் இந்த தொலைக்காட்சி நிலையத்தை மூட உத்தரவிட்டுள்ளார். கடந்த 2002-ஆம் ஆண்டு எதிர்க்கட்சிகளால் தூண்டப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஆர்சிடிவி துணை போனதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், துன்மார்க்க நெடுந்தொடர்களினால் கலாச்சாரம் சீர்கேட்டுக்கு உள்ளாவதை காரணங்காட்டி, மே 27 காலாவதியாகும் உரிமத்தை நீட்டிக்க மறுத்துள்ளார். ஆர்சி டிவிக்கு பதிலாக அரசே புதிய தொலைக்காட்சியைத் துவங்க இருக்கிறது. BBC NEWS | Americas | Venezuelans rally for TV station: "Tens of thousands of Venezuelans have rallied in the streets of Caracas to protest against President Hugo Chavez's plans to close a private TV station." |
ச:குருவாயூர் கோவில் மீது வழக்கு Posted: 21 May 2007 10:05 AM CDT மத்திய மந்திரி வயலார் ரவியின் மகன் கேரளாவின் குருவாயூர் கோவில்மீது வழக்கு தொடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். முன்னதாக வயலார் ரவியின் குடும்பம் கோவிலில் பூஜை செய்தபோது வயலார் ரவியின் மகனின் மதத்தை உறுதிசெய்ய சான்றிதழ் கேட்கப்பட்டது. ஆனால் அவர் வழங்க இயலாமல் போனது. இதனால் கோவில் நிர்வாகம் தூய்மைபடுத்தும் சடங்கொன்றை நடத்தியது. Kerala temple ceremony may go to court NDTV |
Posted: 21 May 2007 09:37 AM CDT |
Posted: 21 May 2007 09:03 AM CDT அசோமில் உல்பா தீவிரவாதிகள் இன்று காலை 9.30 மணியளவில் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் 13 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் ஒரு குழந்தை உட்பட மூவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேற்கு அசோமின் பாங்கைகான் மாவட்டத்தில் உள்ள பக்லதான் பஜாரில் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டை வெடிக்கச் செய்து, நாசவேலையில் ஈடுபட்டுள்ளனர். அண்மைக் காலமான அசோமில் உல்பா திவீரவாதிகளின் வன்முறை மீண்டும் தலைதூக்கி உள்ளது. கடந்த வெள்ளியன்று கவுஹாத்தி பேன்ஸி பஜாரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் காயமடைந்தனர். MSN Tamil |
குடும்பத்துடன் இணைந்த 11 மீனவர்கள். Posted: 21 May 2007 09:01 AM CDT இலங்கையிலிருந்து மீண்டு தமிழகம் திரும்பிய குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்களும் நேற்று தங்களது சொந்த ஊருக்குச் சென்றனர். அவர்களை கண்ணீர் மல்க குடும்பத்தினர் வரவேற்றனர். . . .மேலும் |
கேபிள் டிவி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு Posted: 21 May 2007 08:56 AM CDT கோவை அருகே பேரூரில் உள்ள டிசிவி என்ற கேபிள் நிறுவனத்தின் மீது அதிகாலை 2.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இந்த சம்பவத்தில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. இதில் அலுவலகத்தில் இருந்த எலக்ரானிக்ஸ் உபகரணங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் முழுவதுமாக சேதமடைந்தன. தாக்குதலுக்கு உள்ளான டிசிவி கேபிள் டிவி நிறுவனம், திருப்பூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சிவசாமிக்கு சொந்தமானது. எம்.எஸ்.என் |
திருப்பதி கோவிலின் புதிய டிவி சேனல்: அக்டோபர் முதல் ஒளிபரப்பு Posted: 21 May 2007 08:48 AM CDT திருப்பதி கோவிலின் சார்பில் புதிய டிவி சேனலை ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள பிரம்மோற்சவத்தின்போது இந்த ஒளிப்பரப்பை ஆரம்பிக்கவுள்ளது. இந்த சேனலில் கோவிலில் நடைபெறும் சேவைகள், முக்கிய நிகழ்ச்சிகள், பெருமாளின் பெருமைகள் பற்றிய நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகும். மேலும் ஒரு வயதுக்குட்பட்ட கைக் குழந்தைகளுடன் தரிசனத்திற்கு வரும் தாய்மார்களுக்கு திருமலை பிரதான வாயில் வழியாக சிறப்பு அனுமதி அளிக்க தேவஸ்தான வாரியம் முடிவு செய்துள்ளது. |
950 மார்க்குகள் எடுத்தும் மேல் படிப்புக்கு வழியில்லை - துயரத்தில் மாணவி தற்கொலை Posted: 21 May 2007 08:10 AM CDT மதுரை, உசிலம்பட்டி அருகே உள்ள நல்லுத்தேவன் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆடு மேய்க்கும் தொழிலாளியான பாலு. இவரது மனைவி முத்துப் பிள்ளை. இவர்களுக்கு கண்ணன் என்கிற மகனும், அனுராதா, செருவச் செல்வம் (18) ஆகிய மகள்களும் உள்ளனர். கண்ணனும், அனுராதாவும் வேலை பார்க்கின்றனர். செருவச் செல்வம் பிளஸ்டூ படித்துள்ளார். சமீபத்தில் வெளியான தேர்வு முடிவுகளில் செருவச் செல்வம் 950 மதிப்பெண்கள் பெற்றார். பி.எஸ்.சி நர்சிங் படிப்பு படிக்க விரும்பிய செருவச் செல்வம் அம்மாவிடம் விண்ணப்பம் வாங்க அனுமதி கேட்டார். ஆனால் குடும்ப பொருளாதாரம் திருப்திகரமாக இல்லை. இதில் நீ எப்படி மேல் படிப்பு படிக்க முடியும் என தாயார் கூறவே வேதனை அடைந்த அவர் பூச்சி மருந்து குடித்து விட்டார். சிகிச்சை பலனளிக்காமல் செருவச் செல்வம் இறந்தார். |
மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் :சஞ்சய் தத்துக்கு சம்மன். Posted: 21 May 2007 07:06 AM CDT நடிகர் சஞ்சய்தத் மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக வரும் 25ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக நடிகர் சஞ்சய் தத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில், நடிகர் சஞ்சய்தத் உள்ளிட்ட 100 பேர் குற்றவாளிகள் என தடா நீதிமன்றம் அறிவித்தது. இவர்களுக்கான தண்டனை விவரம் கடந்த 18ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆயுதங்களை கடத்த உதவியதாக 5 பேருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் தொடர்புடைய 4 போலீசாருக்கு இன்று தண்டனை அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில், வரும் 25ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக நடிகர் சஞ்சய் தத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. |
மும்பை குண்டுவெடிப்பு : நால்வருக்கு கடுங்காவல். Posted: 21 May 2007 06:44 AM CDT மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் போலீசார் நான்கு பேருக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து தடா நீதிமன்றம் உத்தரவிட்டது.கடந்த 1993 ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில், 100 பேர் குற்றவாளிகள் என மும்பை தடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிடி கோடே அறிவித்திருந்தார்.இவர்களது தண்டனைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் குற்றவாளிகளுக்கு, ஒவ்வொரு கட்டமாக தண்டனை வழங்கப்படுகிறது. இன்றைய தீர்ப்பில், வெடிகுண்டுகள் போன்ற பயங்கர வெடி பொருட்களையும், ஆயுதங்களையும் பாதுகாக்க உதவிய அப்போதைய போலீஸ் கான்ஸ்டபிள்கள் அசோக் முனேஸ்வர், எஸ.ஒய் பல்சிகார், ஆர்.மாலி மற்றும் பி.மகாதிக் ஆகியோருக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தும், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். |
ச: தேவர் சிலை- கமுதியில் மீண்டும் பதற்றம் Posted: 21 May 2007 04:44 AM CDT மே 21, 2007 ராமநாதபுரம்: கமுதி அருகே அனுமதியின்றி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலை நிறுவப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. ராமாநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கழுத்தறுவான் கிராம் மற்றும் இடிவிலகி கிராமத்தினர் முடிவு செய்து அங்கு கடந்த வாரம் அனுமதியின்றி மணி மண்டபம் கட்டி 9 அடி வெங்கல சிலையை நிறுவனர். அதற்கு திறப்பு விழா நடத்தவும் ஏற்பாடுகள் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்துறை துறை அதிகாரிகள், தாசில்தார் மற்றும் அதிகாரிகள் போலீஸாருடன் அங்கு விரைந்து வந்து அனுமதியின்றி நிறுவிய தேவர் சிலை மணி மண்டபத்துக்கு பூட்டுப் போட்டு சீல் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு அப்பகுதியினர் அதிகாரிகளுடனும், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வன்முறை மூளும் அபாயம் நிலவியது. இதனால் அங்கு துப்பாக்கிய ஏந்திய போலீஸார் குவிக்கப்பட்டனர். எனவே சில நாட்களாக அங்கு பதற்றம் குறைந்தது. இந் நிலையில் இன்று முக்கியஸ்தர்களை வைத்து தேவர் சிலையை திறக்கப் போவதாக தகவல் பரவியது. இதனால் மீண்டும் அப்பகுதியில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது. இதையடுத்து துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நன்றி : தட்ஸ் தமிழ் |
மது விலக்கை கொண்டு வருவது பற்றி கருணாநிதியுடன் ராமதாஸ் சந்திப்பு. Posted: 21 May 2007 12:02 AM CDT தமிழகத்தில் மது விலக்கை படிப்படியாக அமல் படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதியை நேரில் சந்தித்து பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் நேற்று இந்த சந்திப்பு நடந்தது. சுமார் அரைமணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது பாமக தலைவர் கோ.க. மணியும் உடனிருந்தார்.முதலமைச்சரை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்ததாகவும், தமிழகத்தில் மது விலக்கை கொண்டு வருவது பற்றி அப்போது விவாதித்ததாகவும் குறிப்பிட்டார்.மது பார்களை மூடவும், டாஸ்மாக் மதுக் கடைகளை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே திறக்கச் செய்ய வேண்டும் என்று கருணாநிதியிடம் தான் வலியுறுத்தியதாக அவர் கூறினார்.இந்திய விமான ஆணையம் மூலமே விமான நிலைய விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று யோசனை தெரிவித்ததாகச் சொன்ன ராமதாஸ், நவீன வசதிகளுடன் கூடிய புதிய விமான நிலையங்களை (கிரீன் பீல்ட்) சென்னை புறநகர் பகுதியான ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் பகுதியில் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகக் குறிப்பிட்டார்.இதுதவிர சில்லரை வர்த்தகத்தில் பெரிய நிறுவனங்கள் நுழைந்திருப்பது, நதிநீர் இணைப்பு விவகாரம், காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு பிரச்சனை உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக இருவரும் விவாதித்ததாக ராமதாஸ் தெரிவித்தார். |
You are subscribed to email updates from சற்றுமுன்... To stop receiving these emails, you may unsubscribe now. | Email Delivery powered by FeedBurner |
Inbox too full? Subscribe to the feed version of சற்றுமுன்... in a feed reader. | |
If you prefer to unsubscribe via postal mail, write to: சற்றுமுன்..., c/o FeedBurner, 549 W Randolph, Chicago IL USA 60661 |