Satrumun Breaking News
Satrumun Breaking News |
அணுசக்தி உடன்பாடு - மேலும் பின்னடைவு Posted: 16 Aug 2007 03:56 PM CDT இந்தியா அமெரிக்காவிற்கிடையேயான அணுசக்தி உடன்பாட்டுக்கு இடதுசாரி கட்சிகளின் ஒப்புதலை வாங்குவதற்கு மன்மோகன்சிங் அரசு முயன்று வருகிறது. இந்த ஒப்பந்தம் அமலானால் இந்தியாவால் அணுகுண்டு தயாரிக்கும் சோதனைகள் செய்ய இயலாமல் போகும் எனும் கருத்தை இடதுசாரிகளும் முக்கிய எதிர் கட்சிகளும் வலியுறுத்திவந்தன. இதை... visit satrumun.com |
சிங்கப்பூரில் 'புதிய நிலா' 10ம் ஆண்டு விழா Posted: 16 Aug 2007 12:50 PM CDT சிங்கப்பூர்: சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் புதிய நிலா மாத இதழின் 10வது ஆண்டு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா வருகிற 19ம் தேதி நடைபெறவுள்ளது. மஸ்கட் தெருவில் (அரபு தெரு அருகில்) உள்ள சுல்தான் பள்ளிவாசல் இணை மண்டபத்தில் மாலை 5 மணிக்கு விழா நடைபெறுகிறது. தமிழறிஞர் டாக்டர் சுப.திண்ணப்பன் தலைமை... visit satrumun.com |
மானாவாரி நிலம் மேம்படுத்த திட்டம் Posted: 16 Aug 2007 11:40 AM CDT ஈரோடு, ஆக. 16- ஈரோடு மாவட்டத்தில் மானாவாரி நிலங்களை மேம்படுத்த நவப்ரா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் வெள்ளக்கோவில் வட்டாரத்தில் 2002 முதல் 2007ம் ஆண்டு வரை பச்சாம்பாளையம் கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு திருத்தியமைக்கப்பட்ட நவப்ரா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி... visit satrumun.com |
பீகாரில் தன்னார்வ தொண்டர்களின் சேவை! Posted: 16 Aug 2007 11:18 AM CDT பீகாரில் தொடர்ந்து பெய்த கன மழையால் வெள்ளம் ஏற்பட்டு ஏராளமான கிராமங்கள் மூழ்கியுள்ளன. வீடுகளை இழந்த மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேகுசராய் பகுதியில் அரசு முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக நூற்றுக்கணக்கில் பூரி சுட்டு அவற்றை பாக்கெட் போடுகின்றனர் தன்னார்வ... visit satrumun.com |
'தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு திட்டமில்லை'-மத்திய அரசு Posted: 16 Aug 2007 11:08 AM CDT தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு அமல்படுத்தும் வகையில் சட்டம் கொண்டு வரும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது, மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் இது தொடர்பாக கூறியதாவது: எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும்... visit satrumun.com |
குண்டு பல்புக்கு கல்தா! - அரியானா மக்கள் அசத்தல் - மாதம் ரூ.9 கோடி மிச்சம் Posted: 16 Aug 2007 10:44 AM CDT சண்டிகர், ஆக. 16- நாட்டில் குண்டு பல்பு ஒழிக்கப்பட்ட முதல் மாவட்டம் அரியானாவில் உருவாகியுள்ளது. இதன்மூலம் அரியானா மின்துறைக்கு மாதம் ரூ.9 கோடி மிச்சமாகியிருக்கிறது. குண்டு பல்பு எரியவிடுவதால், அதிக அளவு மின்சாரம் செலவாகிறது. அதிக வெப்பத்தையும் இது வெளியிடுவதால், சுற்றுப்புறம் வெப்பமாகிறது.... visit satrumun.com |
அமெரிக்கா இஸ்ரேேலுக்கு $30பில்லியன் இராணுவ உதவி Posted: 16 Aug 2007 10:39 AM CDT அமெரிக்கா இஸ் ரேலுக்கு $30 பில்லியன் அளவுக்கு இராணுவ உதவி வழங்கும் ஒப்பந்தத்தை இன்று செய்தது. சவுதி அரேபியாவுக்கு இதுபோன்ற உதவி வழங்கும் முடிவுடன் இந்த முடிவும் சேர்ந்து வருகிறது. முன்னதாக இஸ்ராயேல், சவுதிக்கு அமெரிக்கா உதவுவதில் தங்களுக்கு எதிர்ப்பு இல்லை எனத் தெரிவித்திருந்தது. "There is no... visit satrumun.com |
ஆந்திர அரசின் முடிவு;சுப்ரீம் கோர்ட் தடை Posted: 16 Aug 2007 10:29 AM CDT சுதந்திரப்ப் போராட்டத் துவக்கத்தின் 150வது நினைவுநாளை முன்னிட்டு ஆந்திர அரசு 1500 கைதிகளை அவர்களின் தண்டனைக்காலம் முடியும் முன்பே விடுதலை செய்யப் போவாதாக அறிவித்திருந்தது. இதற்கு எதிராக தொட்டரப்பட்ட பொது நல வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற பெஞ்ச் இந்த முடிவு மோசமான முன்னுதாரணம் என்று கூறி இதற்கு... visit satrumun.com |
ஹிமாச்சலில் வெள்ளம்: ஆறு சடலங்கள் மீட்பு, 52 பேர் காணவில்லை Posted: 16 Aug 2007 09:23 AM CDT இமாச்சல பிரதேசத்தில் நேற்று பெய்த பெருமழையில் சிம்லா மாவட்டத்தில் ஒரு கிராமமே திடீர் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போனது.அந்த இடிபாடுகளை இராணுவத்தினர் மற்றும் துணைராணுவத்தினர் உதவியுடன் அகற்றி பிழைத்தவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த முயற்சியில் இதுவரை ஆறுபேரின் உடல்களே கிடைத்திருக்கின்றன.... visit satrumun.com |
பெருவில் பூகம்பம்: 72 மரணம், 680 காயம் Posted: 16 Aug 2007 03:22 AM CDT தென்னமெரிக்க நாடான பெருவில் ரிக்டர் அளவுகோளில் 7.9 வலிமையுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டு 72 பேர் மரணமடைந்துள்ளனர்; 680 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் லிமாவில் உயர்ந்த கட்டிடங்கள் தொடர்ந்த இரு நில அதிர்வுஅலைகளால் ஆடின. அலுவலகத்திலிருந்து பணியாளர்கள் வெளியே ஓடினர்.கடலோர மாநிலமான இகாவில் கிருத்துவ... visit satrumun.com |
தென்காசி கொலைச் சம்பவம் மத மோதல் அல்ல! Posted: 16 Aug 2007 02:30 AM CDT தென்காசியில் நடந்த கொலைகள் மத ரீதியிலான மோதலால் ஏற்பட்டவை அல்ல என தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக மாநிலச் செயலர் ஜே.எஸ்.ரிஃபாயீ தெரிவித்தார். திருநெல்வேலியில் புதன்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தென்காசியில் நடந்த கொலைகள் மத ரீதியிலான சம்பவம் அல்ல. நீண்ட நாள்களாகப் பகையோடு... visit satrumun.com |
You are subscribed to email updates from சற்றுமுன்... To stop receiving these emails, you may unsubscribe now. | Email Delivery powered by FeedBurner |
Inbox too full? Subscribe to the feed version of சற்றுமுன்... in a feed reader. | |
If you prefer to unsubscribe via postal mail, write to: சற்றுமுன்..., c/o FeedBurner, 549 W Randolph, Chicago IL USA 60661 |