Satrumun Breaking News 30 March 2007
Satrumun Breaking News |
கண்டிப்பான ஆசிரியைக்கு 1.4 மில்லியன் டாலர்!Posted: 30 Mar 2007 07:42 PM CDTஅமெரிக்காவில் இருக்கும் லூசியான மாஹாணத்தை சேர்ந்த பாலா பெயின் (Paula Payne) என்ற ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியை, தன்னிடம் பயின்ற எழுபது சதவிகித மாணவர்களுக்கு மிகுந்த குறைவான மதிபெண்களை கொடுத்துள்ளார். இதை அடுத்து இந்த உயர் நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர் கொடுத்திருக்கும் மதிப்பெண்களை திருத்துமாறு கேட்டு மிகவும் துன்புறுத்தியுள்ளார். பாலா பெயின் அதற்கு சம்மதிக்காமல் போகவே அவரை கீழ்நிலை ஆசிரியராக மாற்றி பின்னர் தற்காலிக வேலை நீக்கமும் செய்திருக்கிரார். இந்த வழக்கு நீதிமன்றம் சென்று இப்பொழுது இந்த ஆசிரியருக்கு அவர் வேலை செய்துகொண்டிருந்த லூசியானா பள்ளி நிர்வாகம், 1.4 மில்லியன் டாலர்(அவரை மன ரீதியாக துன்புறுதியதற்காகவும், மற்ற சேதங்களுக்காகவும்) வழங்கவேண்டும் என்று ஆணை பிறப்பித்து உள்ளது. மேலும் படிக்க http://www.msnbc.msn.com/id/17874261/?GT1=9145 |
சற்றுமுன்: முழு அடைப்புக்கு விஜயகாந்த் ஆதரவுPosted: 30 Mar 2007 08:06 PM CDTஉயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தொடர்பாக, தமிழகத்தில் நடக்கும் முழு அடைப்பு போராட்டத்துக்கு, தே.மு.தி.க. ஆதரவு தெரிவிக்கும் என்று, அதன் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். சமவாய்ப்பு கிடைக்கும் வகையில், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள மக்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அவசியம் என்பதை அனைவரும் அறிவோம். மத்திய அரசு இட ஒதுக்கீடு சம்பந்தமாக சரியான விவரத்தை, உச்ச நீதிமன்றத்துக்கு தராததால்தான், இத்தகைய விளைவு. அனைத்துக் கட்சி கூட்டத்தை, தி.மு.க. கூட்டி முழு அடைப்பு சம்பந்தமாக பேசியிருக்கலாம். இருந்தாலும், சமுதாயத்தின் அடித்தள மக்களின் நலன் கருதி, இந்த முழு அடைப்புக்கு தே.மு.தி.க. முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். - தினகரன் |
சற்றுமுன்:தமிழகம் முழுவதும் 2-ந் தேதி கோர்ட்டுகள் புறக்கணிப்பு :வக்கீல்கள் சங்கம் முடிவுPosted: 30 Mar 2007 07:25 PM CDTநேற்று காலையில் சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க கூட்டம், சங்க தலைவர் பால்கனகராஜ் தலைமையில், செயலாளர் ஜி.மோகனகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை கண்டித்து ஏராளமான வக்கீல்கள் பேசினார்கள். இதன்பிறகு கூட்டத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 29-ந் தேதி இடைக்கால தடை விதித்துள்ளது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒருமனதாக இயற்றிய இந்த சட்டத்திற்கு, ஓட்டு வங்கிக்காக இயற்றப்பட்ட சட்டம் என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து கூறியிருப்பது வழக்கறிஞர்கள் சமுதாயத்திற்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. பெரும்பாலான மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் வரும் 2-ந் தேதி (திங்கட்கிழமை) தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்வது என்று இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழகத்திலுள்ள அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களும் இந்த நீதிமன்ற புறக்கணிப்பை கடைபிடித்து ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடப்படுகிறது. - தினதந்தி |
சற்றுமுன்: சுப்புடு உடலுக்கு கலாம் அஞ்சலிPosted: 30 Mar 2007 05:55 PM CDTபுதுடில்லி:பரபல கர்நாடக இசை விமர்சகர் சுப்புடு, டில்லியில் காலமானார். ஜனாதிபதி அப்துல் கலாம் நேரில் சென்று சுப்புடுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கர்நாடக இசை விமர்சகராக புகழ் பெற்றவர் சுப்புடு என்ற சுப்ரமணியம். கர்நாடக இசையில் இந்துஸ்தானி இசை கலப்பதை கடுமையாக எதிர்த்தவர் சுப்புடு. இவரது விமர்சனங்கள் காரசாரமாகவும், தவறை சுட்டிக் காட்டுவதில் சுவையாகவும் அமைந்திருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருந்த அவர், நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு தெற்கு டில்லியில் காலாமானார். அவருக்கு வயது 91. ஜனாதிபதி அப்துல் கலாம் நேரில் சென்று சுப்புடுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நேற்று காலை 11.30 மணிக்கு சுப்புடுவின் உடல் தகனம் செய்யப்பட்டது. - தினமலர் |
சற்றுமுன்: போப் இரண்டாம் ஜான் பாலின் மகிமைPosted: 30 Mar 2007 02:31 PM CDTபிரென்ஞ் கன்னியாஸ்திரி மேரி சைமன் பெரே என்பவர் ஓரிரவு பிராத்தனையின் பின் தனக்கு இருந்த நோய் குணம் அடைந்துவிட்டதாகவும் அதை வாடிகன் போப் இரண்டாம் ஜான் பாலின் மகிமை என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் செய்திக்கு.."FORBES.COM" |
சற்றுமுன்: இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் US $ 142.7 பில்லியனPosted: 30 Mar 2007 08:23 AM CDTகடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான கணக்குப்படி, இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 6.2 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 142.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்த கணக்கின்படி 135.5 பில்லியன் டாலர் (ரூ.6,27,112 கோடி) ஆக இருந்த வெளிநாட்டுக் கடன், கடந்த ஆண்டு டிசம்பர் 31-ல் முடிவடைந்த கணக்கின்படி 142.7 பில்லியன் டாலர் (ரூ.6,32,051) ஆக உயர்ந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. "Yahoo-Tamil" |
சற்றுமுன்: ஷேவாக் தந்தை ஆவேசம்Posted: 30 Mar 2007 09:39 AM CDTஉலகக் கோப்பை தோல்விக்கு சச்சின் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் மோசமாக ஆடியதே காரணம் என்று வீரேந்திர ஷேவாக்கின் தந்தை ஆவேச மாக கூறியுள்ளார். உலகக் கோப்பை தோல்விக்கு தன்னுடைய மகன் மட்டுமா காரணம் என்று கேள்வி எழுப் பிய அவர், டெண்டுல்கர், திராவிட் ஆகிய முன்னணி வீரர்கள் படுமோசமாக ஆடிய தாக கூறினார். ஷேவாக் துவக்க வீரராக ஆட அனுமதிக்கப்பட்டிருந்தால் மேலும் அதிரடியாக ஆடி இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்திருப்பார் என்று அவர் தெரிவித்தார். ஷேவாக்கின் ஆட்டம் தனக்கு திருப்தி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். "மாலைச் சுடர்" |
சற்றுமுன்:பாமகவுக்கு துக்கநாள் - ராமதாஸ்Posted: 30 Mar 2007 09:30 AM CDTகல்வியில் பிற்படுத்தப்பட்டவர்க ளுக்கான 27 சதவிகித இடஒதுக்கீட் டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடை நீக்கப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தீர்ப்பு திருத்தப்படும் வரை பாமகவினருக்கு துக்கநாள்தான் என்றும் அவர் கூறினார். மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை அமல்படுத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கண்டித்து பாமக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் மெமோரியல் ஹால் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காலை 11 மணியளவில் தொடங்கி வைத்தார். கட்சித் தலைவர் ஜி.கே. மணி, பாமக எம்எல்ஏக்கள் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற அனைவரும் கறுப்பு பேட்ஜ் மற்றும் கருப்பு சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். "நாடாளுமன்ற அதிகாரத்தில் உச்சநீதிமன்றமே தலையிடாதே', "உயிர் போனாலும் இடஒதுக்கீட்டுக்கு உயிர் கொடுப்போம்', "உயிரை கொடுத்தாவது இட ஒதுக்கீட்டை காப்போம்', "விடமாட்டோம் விடமாட்டோம் இடஒதுக்கீடு பறிபோக விடமாட்டோம்' போன்ற முழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் எழுப்பினார்கள். "மாலைச் சுடர்" |
சற்றுமுன்: பந்த்-கேலிக்கூத்து,கண்துடைப்பு நாடகம் : ஜெயலலிதாPosted: 30 Mar 2007 09:18 AM CDTஉச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கை உரிய முறையில் சந்தித்து நல்ல தீர்ப்பை பெற முயற்சிக்க வேண்டுமே தவிர, அதைவிடுத்து பொது வேலை நிறுத்தம் என்பது கண்துடைப்பு நாடகமாகவே கருதப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். இப்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு ஆளும் கூட்டணி கட்சிகளே பொறுப்பு என்றும் அவர் கூறியிருக்கிறார். நீதிமன்றத்தில் கோட்டை விட்டவர்கள் இங்கே பொது வேலை நிறுத்தம் என்று அறிவித்திருப்பது கேலிக்கூத்து என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். "மாலைச் சுடர்" |
சற்றுமுன்: முஷாரப்பிற்கு அமெரிக்கா பாராட்டுPosted: 30 Mar 2007 08:55 AM CDTபாகிஸ்தானில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த அதிபர் முஷாரப் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் சீன் மெக்கர்மாக் நிருபர்களிடம் கூறியதாவது: பயங்கரவாதம் அதிபர் முஷாரப்பிற்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதோடு மட்டுமல்லாமல், பாகிஸ்தானின் நட்பு நாடுகள் மற்றும் அண்டை நாடுகளுக்கும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளன. பயங்கரவாதத்தை நசுக்க அதிபர் முஷாரப் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் கண்டிப்பாக ஆதரவு தெரிவிப்போம். இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள அதிபர் தேர்தல் தொடர்பாக பல்வேறு வாக்குறுதிகளை முஷாரப் வழங்கியுள்ளார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என நாங்கள் நம்புகிறோம். 2001 ஆகஸ்டில் இருந்ததை விட பாகிஸ்தானில் தற்போது நிலைமை மாறியுள்ளது.இவ்வாறு சீன் மெக்கர்மாக் கூறினார். - தினமலர் |
சற்றுமுன்: தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றிPosted: 30 Mar 2007 08:47 AM CDTசந்திப்பூர் (ஒரிசா) : கடற்படை கப்பலில் இருந்து பாய்ந்து சென்று 150 கி.மீ., துõரத்தில் உள்ள எதிரி கப்பலை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட "தனுஷ்' ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஒரிசா சந்திப்பூர் அருகே கடற்படை கப்பலில் இருந்து ஏவுகணை செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. - தினமலர் |
சற்றுமுன்: பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு பதில் அளிக்க உத்தரவு!Posted: 30 Mar 2007 08:41 AM CDTசெவ்வாய், 27 மார்ச் 2007 (10:53 ஐளுகூ) குளிர்பானங்களில் கலந்துள்ள பூச்சி கொல்லி மருந்தின் அளவு குறித்து 6 வாரங்களில் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று பெப்சி, கோககோலா நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குளிர்பானங்களில் பூச்சி கொல்லி மருந்து ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்கக் கூடாது; அவ்வாறு இருந்தால் குளிர்பானங்களை அதிக அளவில் அருந்துபவர்களின் எலும்புகள் பாதிக்கப்படும். சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகும். சிறு குழந்தைகளின் எடை அதிகரிக்கும் என்று பாராளுமன்றத்தின் நிபுணர் குழு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதைத் தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பாக 2004-ம் ஆண்டு என்.கே.கங்குலி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.குழு தனது அறிக்கையை கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் பெப்சி, கோககோலா நிறுவனங்களில் தயாரிக்கப்படும் குளிர்பானங்களில் பூச்சிக் கொல்லி மருந்து அதிக அளவில் உள்ளதாகவும் இது மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் இதுதொடர்பாக தன்னார்வ அமைப்பு தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.தக்கர் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. தங்கள் நிறுவன குளிர்பானங்களில் கலந்துள்ள பூச்சி கொல்லி மருந்தின் அளவு குறித்து 6 வாரத்துக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று பெப்சி, கோககோலா ஆகிய குளிர்பான நிறுவனங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். "வெப் உலகம்" |
சற்றுமுன்: நேதாஜி தொடர்பான கடிதங்களை அளிக்க உத்தரவு!Posted: 30 Mar 2007 08:30 AM CDTஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தலையாய பங்காற்றிய முக்கியத் தலைவர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் "காணாமல் போனது" தொடர்பாக ரஷ்ய அரசுடன் இந்திய அரசு நடத்திய கடிதப் போக்குவரத்து விவரங்களை அவருடைய மறைவு குறித்து ஆய்வு செய்துவரும் அமைப்பிற்கு அளிக்குமாறு அயலுறவு அமைச்சகத்திற்கு தலைமைத் தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்! மிஷன் நேதாஜி (www.missionnetaji.org) எனும் அமைப்பு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய அரசு கூறுவது போல 1945 ஆம் ஆண்டு நடந்ததாக ஜப்பானிய அரசு கூறும் விமான விபத்தில் இறந்தாரா? அல்லது அவர் தப்பிவிட்டாரா? அவர் எங்கு சென்றார்? என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. "வெப் உலகம்" |
சற்றுமுன்:'இட ஒதுக்கீடு :பார்லி.யை உடனடியாக கூட்டவேண்டும்'Posted: 30 Mar 2007 08:18 AM CDT27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது தொடர்பாக விவாதிக்க, பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் உடனடியாக கூட்டவேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்த இந்த தீர்மானத்தில்,உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதாவுக்கு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த தடை,பாராளுமன்றத்தின் உரிமையை பாதிப்பதாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தீர்ப்பு ,சமூக மற்றும் கல்வி ரீதியாக நசுக்கப்பட்ட மக்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "Yahoo-Tamil" |
சற்றுமுன்: நாளை தமிழகம் முழுவதும் பந்த்Posted: 30 Mar 2007 06:31 AM CDTநாளை முழு அடைப்பு: பஸ்-ஆட்டோ-லாரிகள் ஓடாது சென்னை, மார்ச். 30- உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப் பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக் கீடுஅளிக்க வகை செய்யும் சட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று இடைக்கால தடை விதித்தது. அதோடு வரும் கல்வி யாண்டில் இந்த இட ஒதுக்கீடு அமலுக்கு வராது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு இட ஒதுக்கீடு ஆதரவு அமைப் புகள், மற்றும் அரசியல் கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்தன. தமிழ்நாட்டில் எல்லாக் கட்சிகளும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக மேலும் எதிர்ப்பை தெரிவிக்க தி.மு.க. கூட்டணி கட்சிகளின் அவசரக் கூட்டம் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் நேற்றிரவு நடந்தது. தமிழ் நாட்டில் நாளை (சனிக் கிழமை) பொது வேலை நிறுத்தம் (முழு அடைப்பு) நடத்தி இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க தீர்மானிக்கப்பட்டது. முழு அடைப்பு காரணமாக தமிழ்நாடு முழுவதும் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பஸ்கள், ஆட்டோக்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடாது. பால் வினியோகம், மருந்து சப்ளை உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகங்களில் மொத்தம் 17,500 பஸ்கள் உள்ளன. இந்த பஸ்கள் அனைத்தும் நாளை ஓடாது. நீண்ட தூரம் செல்லும் அரசு விரைவு பஸ்களும் நாளை ஓடாது. நாளை காலை 6 மணிக்குள் விரைவு பஸ்கள் சென்றடையும் வகையில் இன்று மாலை பஸ்கள் முன்கூட்டியே புறப்படும். சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நாகர் கோவில், மார்த்தாண்டம், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை ஆகிய தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் புறப்பட்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகிய வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பஸ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விரைவு பஸ்களுக்கு முன் பதிவு செய்த பயணிகள் முன் கூட்டியே வந்தால் வேறு பஸ்களில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். சென்னையில் வழக்க மாக 2600 பஸ்கள் இயக்கப் படுகின்றன. அனைத்து பஸ் களும் நாளை ஓடாது. மாலை 6 மணிக்கு பிறகு பஸ்கள் இயக்கப்படும். டேங்கர், சரக்கு லாரிகள், எல்.பி.ஜி. லாரிகளும் இயக்கப் படவில்லை என்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் பி.எஸ்.ஏ.செங்கோடன் கூறினார். அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் லாரிகளை தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கும் இயக்க மாட்டோம் என்றார். தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் லாரிகள் உள்ளன. அவை அனைத்தும் நாளை ஓடாது. பகல் நேரத்தில் ஓடக்கூடிய ஆம்னி பஸ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. நாளை பெரும்பாலான பள்ளிகளில் இறுதி தேர்வு நடைபெற உள்ளது. அவை திட்டமிட்டப்படி நடைபெறும். நாளை நடக்கும் முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழ்நாட்டில் உள்ள முக் கிய பல்வேறு தொழிற் சங்கங்கள் ஆதரவு தெரிவித் துள்ளன. எனவே பெரிய தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் நாளை இயங் காது. கடைகளும் மூடப்பட்டு இருக்கும். ரெயில், விமான சேவை களும் நாளை இயங்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்த் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ் நாடு முழுவதும் உள்ள பஸ் நிலையங்கள், ரெயில் நிலை யங்கள் மற்றும் பஸ் டெப் போக்கள் முன்பு பாதுகாப் புக்காக போலீசார் நிறுத்தப் படுவார்கள். இது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. முகர்ஜியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 86 ஆயிரம் போலீசார் உள்ளனர். இவர்களில் உத்தர பிரதேச மாநில தேர்தல் பாது காப்புக்காக 6 கம்பெனி போலீசாரும், பீகாருக்கு 6 கம்பெனி போலீசாரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வெளி மாநில பாதுகாப்புக் காக சென்றுள்ள இந்த 1200 போலீசார் தவிர மீதியுள்ள அனைத்து போலீசாரும் நாளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். சென்னையில் அனைத்து துணை கமிஷனர்கள் மேற்பார் வையில் பாதுகாப்பு ஏற்பாடு களை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படு வார் கள் என்று போலீஸ் கமிஷ னர் லத்திகாசரண் தெரிவித்தார். =========== மாலைமலர் |
You are subscribed to email updates from சற்றுமுன்... To stop receiving these emails, you may unsubscribe now. | Email Delivery powered by FeedBurner |
Inbox too full? Subscribe to the feed version of சற்றுமுன்... in a feed reader. | |
If you prefer to unsubscribe via postal mail, write to: சற்றுமுன்..., c/o FeedBurner, 549 W Randolph, Chicago IL USA 60661 |