Saturday, May 26, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

கனிமொழி பளீர் பேட்டி - வீடியோ

Posted: 26 May 2007 06:38 PM CDT

உலக வங்கி நியமனங்கள்: யு.எஸ்ஸுக்கு தெ.ஆஃப்ரிக்கா வலியுறுத்தல்

Posted: 26 May 2007 12:53 PM CDT

உலக வங்கியின் தலைவர் பொறுப்பு, சர்வதேச நிதியத்தின் இயக்குனர் உள்ளிட்ட நியமனங்களில், 20 பொருளாதார வல்லரசுகளும் ஒப்புக்கொள்ளும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெளிப்படையான, கட்புலனாகும் (Transparent) வகையில் அமைய வேண்டும் என்று ஐக்கிய அமெரிக்க நாடுகளை தெ.ஆஃப்ரிக்கா வலியுறுத்தியுள்ளது. ராய்ட்டர் செய்தி

கருணாநிதி பற்றி படம் -கனிமொழி தயாரிக்கிறார்

Posted: 26 May 2007 11:50 AM CDT

சென்னை, மே 26:

முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் டாக்குமெண்டரி திரைப்படம் இன்னும் இரு மாதங்களில் வெளி வரும்.

இந்தப் படத்தைத் தயாரிக்கும் பணியில் கடந்த 3 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள அவருடைய மகள் கனிமொழி, தற்போது படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் ஈடுபட்டு உள்ளார். இன்னும் இரண்டு மாதங் களில் இப்படம் வெளியாகும் என்றார் அவர். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் உள்பட முக்கிய பிரமுகர்களை இப்படத் துக்காக பேட்டி கண்டிருக்கிறார் கனிமொழி.

துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ உள்பட மூத்த பத்திரிகையாளர்களையும் சந்தித்து, கருணாநிதி பற்றிய அவர்களின் கருத்துகளை இப்படத்தில் சேர்த்திருக்கிறார்.


மேலும் செய்திக்கு "மாலைச்சுடர்"

செல்போனில் இடி இறங்கி 2 பேர் பலி

Posted: 26 May 2007 11:24 AM CDT

அவிநாசி, மே 26-
கோவை அருகே செல்போன் பேசிக்கொண்டிருந்த கட்டடத் தொழிலாளி மீது இடி இறங்கியதில் கட்டட காண்டிராக்டர் உள்பட இருவர் பலியாயினர். மேலும் இருவர் காயம் அடைந்தனர்.
அவிநாசி தாலுகா செம்பியநல்லூர் கிராமம் மொண்டிநாதம்பாளையம் பிரிவில் கோழிப்பண்ணை கட்டும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியில் காவலாளி அறை கட்டும் பணி நேற்று நடந்தது. இதில், 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். பிற்பகல் 3 மணியளவில் அப்பகுதியில் இடியுடன் கூடிய மழை துவங்கியது.
அப்போது, திடீரென ஒரு இடி இறங்கியது. அப்போது கட்டடத் தொழிலாளி ஜெய்சங்கர் செல்போன் பேசிக்கொண்டிருந்தார். செல்போன் வழியாக இடி இறங்கியதால் ஜெய்சங்கர் பலத்த தாக்குதலுக்கு ஆளாகி அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறந்தார். அருகில் இருந்த கட்டட கான்ட்ராக்டர் சேகர் (35) என்பவரும் இறந்தார்.

அவினாசி அருகே தனியார் கோழி பண்ணை மீது இடி தாக்கி 2 பேர் இறந்தனர். இடி தாக்கிய கட்டிடத்தை பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தனர்.

- நன்றி: "மாலை முரசு"

ச: செல்பேசி கட்டணம் செலுத்தாததால் பாஹ்ரைனை விட்டு வெளிவரமுடியாத இந்தியர்

Posted: 26 May 2007 10:32 AM CDT

மொஹம்மது கருப்பன் என்ற இந்தியர் பஹ்ரைன் தொலைபேசிக்கு இரண்டு இலட்ச ரூபாய் பில்லை கட்ட முடியாததால் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்று அந்நாட்டு குடியுரிமை, தகவுச்சீட்டு பொது இயக்ககம் கூறியுள்ளது. கடந்த 28 வருடங்களாக அங்கேயே வாழும் அவர் இந்தக் கடனை அடைக்க முடியாமல் அங்கேயே வாழ்நாளைக் கழிக்க வேண்டியதுதானோ என்று கவலைப் படுகிறார்.

DNA - World - Indian stranded in Bahrain over unpaid phone bill - Daily News & Analysis

ச: மும்பை மெகா பிளாக்: ஊரக இரயில்வண்டிகள் பாதிப்பு

Posted: 26 May 2007 10:23 AM CDT

மும்பையின் நாடிகளில் ஒன்றான மேற்கு இரயில்வேயின் தண்டவாளங்களை அதிகரிக்கும் பணிக்காக சனி,ஞாயிறு அன்று உள்ளூர் இரயில்வண்டிகள் 25%க்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மும்பைகாரர்கள் இன்று வெளியே செல்வதையே தவிர்த்தனர். போரிவலி- விரார் இடையே நான்கு தண்டவாளங்களாக்கும் பணி நடைபெறுகிறது. வரவிருக்கும் வசதிக்காக இந்த சங்கடத்தை பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று துணை பொது மேலாளர் விவேக் சஹாய் கூறினார். சில வெளியூர் இரயில்களும் மும்பை சென்ட்ரலிற்கு பதிலாக மும்பை CST யிலிருந்தோ வாசாய் ரோடிலிருந்தோ இயக்கப் படுவதாகக் கூறினார்.


DNA - Mumbai - Mega block: Trains services in Western section affected - Daily News & Analysis

கனிமொழிக்கு ராஜ்ய சபா எம்.பி., பதவி : தி.மு.க., முடிவு

Posted: 26 May 2007 10:13 AM CDT

கனிமொழிக்கு ராஜ்ய சபா எம்.பி., பதவி : தி.மு.க., முடிவு

- தினமலர்

ச: சிபிஎம் பொலிட்பீரோவிலிருந்து கேரள முதல்வரும் மாநில செயலரும் தற்காலிக நீக்கம்

Posted: 26 May 2007 09:53 AM CDT

கட்சியின் கட்டுப்பாட்டை முன்னிறுதும் வகையில் சிபிஎம் தனது கட்சி கொள்கைகளை தீர்மானிக்கும் தலைமையகத்திலிருந்து கேரள முதல்வரான அச்சுதானந்தனையும் கேரள மாநில செயலர் பினயாரி விஜயனையும் தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளது. அவர்கள் இருவரும் பொது ஊடகங்களில் ஒருவரையொருவர் குறைகூறியதை தீவிரமாக எடுத்துக் கொண்டு கட்சியின் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் எவராயினும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று தொண்டர்களுக்கு கூறும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆயினும் அவர்கள் தங்கள் பதவிகளில் நீடிப்பதில் ஒரு தடங்கலுமில்லை.

CPM suspends Kerala CM, secy from Politburo

மதுரை மேற்கு சட்டசபை இடைத் தேர்தல்.

Posted: 26 May 2007 09:16 AM CDT

மதுரை மேற்கு சட்டசபைத் தொகுதிக்கு ஜூன் 26ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மதுரை மேற்கு தொகுதியில், அதிமுக சார்பில் எஸ்.வி.சண்முகம் தேர்வு செய்யப்பட்டிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் சண்முகம் திடீர் மரணம் அடைந்தார். இதையடுத்து இத்தொகுதி காலியானது. மதுரை மேற்குத் தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழ்நிலை உருவானது. இந்த நிலையில் தற்போது இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ஜூன் 1ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும். வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 8ம் தேதியாகும். மனுக்கள் 9ம் தேதி பரிசீலனை செய்யப்படும். 11ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெற வேண்டும். ஜூன் 26ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 29ம் தேதி நடைபெறும். இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன என்று கூறியுள்ளார் நரேஷ்குப்தா. மதுரை மேற்குத் தொகுதியில் புகைப்பட வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ச: கிரிக்கெட்: இந்தியா 610/3; பங்களா 58/5

Posted: 26 May 2007 07:17 AM CDT

இரண்டாம் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இந்தியர்களுக்கு நல்ல வேட்டையாக அமைந்தது. திராவிட் தனது சதத்தை அடித்து வெளியேறியவுடன் கார்த்திக் தனது முந்தைய நாள் ஆட்டத்தைத் தொடர்ந்து தனது சதத்தை நிரைவு செய்தார். சச்சின் டெண்டுல்கரும் தனது பங்காக சதமடித்து திராவிட் திரும்ப அழைக்கும்வரை ஆட்டமிழக்காமல் ஆடினார். காங்குலி மட்டுமே குறைந்த ஓட்டங்களில் (15) ஆட்டமிழந்தார். ஆட்டத்தை முடித்துக் கொள்ளும் சமயம் தோனி 51 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பல சாதனைகள் பதிவான இந்த டெஸ்டில் ஆட்டநேர முடிவில் பங்களாதேசம் ஐந்து விக்கெட்களை இழந்து 58 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. ஜாகீர்கான் மூன்று விக்கெட்களையும் ஆர்பி சிங்கும் கும்ப்லேயும் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.



2nd Test, Bangladesh v India - Cricket Scores on Yahoo! India

குவஹாத்தி: மற்றொரு குண்டு வெடிப்பு!

Posted: 26 May 2007 05:39 AM CDT

அஸ்ஸாமின் குவுஹாத்தியில் இன்று மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் இறப்பு-7, காயம்-15.
இம்மாதத்தில் இது அங்கு ஐந்தாம் தடவை. மேலும் படிக்க:டைம்ஸ் நவ்.டிவி

தமிழறிஞர் படைப்புகள் நாட்டுடமை.

Posted: 26 May 2007 05:18 AM CDT

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் படி
இருபது தமிழறிஞர்கள்; படைப்பாளிகளின் ஆக்கங்கள் நாட்டுடமையாக்கப்படுகின்றன.
இதற்காக அவர்களின் மரபுரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ. ஒரு கோடியே எண்பது இலட்சம் பரிவுத்தொகையாக வழங்கப்பட தமிழக முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த அரசு, இதற்கு முன்னரும் பதினாறு தமிழறிஞர் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டு ஒரு கோடியே, இருபத்து மூன்று இலட்சம் ரூபாய் மரபுரிமையர்களுக்கு வழங்கியுள்ளது.

இச்சமயம் நாட்டுடமையாக்கப்பட்ட தமிழறிஞர்களில், கி.வா.ஜ, பேராசிரியர் அ.ச.ஞா, கி.ஆ.பெ, திருக்குறள் முனுசாமி, கவிஞர் சுரதா, கவிஞர் மருதகாசி, குன்றக்குடி அடிகளார், சாவி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

மாலைமலர்

ஜெலட்டின் மூடைகளுடன் சென்ற இருவர் கைது.

Posted: 26 May 2007 03:20 AM CDT

ஜெலட்டின் மற்றும் டெட்டனேட்டர்களை மூட்டைகளாக கட்டிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை போலீஸார் கைது செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நல்லூர் மேட்டுகாடு பகுதியில் சந்திரசேகரன் (28) என்ற விவசாயி, தன்னுடைய மோட்டார் சைக்கிளில் 55 டெட்டனேட்டர் மற்றும் 110 ஜெலட்டின் குச்சிகள் அடங்கிய மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்தார். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் புதுரோட்டை சேர்ந்த பழனிச்சாமி (48) என்பவர், ராமபட்டினத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் தோட்டத்திற்கு அந்த வெடிபொருட்களை கொடுத்து அனுப்பியதாக தெரிவித்தார். இதையடுத்து சந்திரசேகரன், பழனிச்சாமி ஆகியோரை போலீஸார் கைது செய்து, உரிமம் இல்லாமல் வெடிபொருட்கள் வைத்திருந்ததாகவும், கடத்தியதாகவும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பி.ஜே.பி யின் போஸ்டருக்கு எதிர்ப்பு!

Posted: 26 May 2007 02:37 AM CDT

பி.ஜே.பி.யின் போஸ்டர் ஒன்றுக்கு, பி.ஜே.பியின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கின் மனைவி ஷீதல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, இன்னமும் பதிவு செய்யப்படாத புகார் ஒன்றையும் அவர் காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பி.ஜே.பி.யின் மூன்றாண்டு ஆட்சி நிறைவையொட்டி கடந்த ஏப்ரல் 15 ம் தேதி அதன் எம்.எல்.ஏ சூர்யகாந்த் வியாஸ் என்பவரால் வெளியிடப்பட்ட போஸ்டரில் வாஜ்பேய், அத்வானி, ராஜ்நாத் ஆகியோரை முறையே பிரம்மா, விஷ்ணு, சிவனாகவும் மேலும் மாநில முதல்வர் தொடங்கி மூத்த அமைச்சர்கள் பலரும் தேவ தேவதைகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனராம்.

இது தன்னுடைய மற்றும் கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக ஷீதல்குமாரின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

மேலும் விபரங்களுக்கு: டைம்ஸ் ஆஃப் இந்தியா

ச: விலைவாசி விகிதம் குறைந்தது

Posted: 26 May 2007 01:36 AM CDT

நமக்கெல்லாம் தெரியாமல் நான்காவது தொடர்ந்த வாரமாக மே 12 வரை முடிந்த வாரத்திற்கான விலைவாசி விகிதம் 5.27 சதவீதமாக குறைந்துள்ளது. ஐந்து மாதங்களில் மிகக்குறைந்த இந்த விகிதம் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய கட்டாயமின்றி சற்று நிம்மதி கொடுத்திருக்கும். மிதக்கும் வட்டி விகிதத்தில் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கும் வயிற்றில் பால் வார்க்கும். கடந்த வருடம் இதே வாரத்தில் 4.63 ஆக இந்த விகிதம் இருந்தது.

முழுமையான தகவலுக்கு..The Hindu News Update Service

இராக் போர் - 100 பில்லியன் டாலர் நிதி!

Posted: 26 May 2007 01:21 AM CDT

இராக் போருக்கான $100 பில்லியன் நிதியுதவி மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ். W. புஷ் வெள்ளியன்று கைச்சாத்திட்டுள்ளார்.

முன்னதாக, ஒக்டோபர் 1 முதல் அமெரிக்கப் படைகளை இராக்கிலிருந்து விலக்கிக்கொள்ளும் கோரிக்கையை தனது 'வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்தி அவர் விலக்கினார்.

ராய்ட்டர்

ஐ டி சிறப்பு பொருளாதார மண்டலம் - சென்னை அருகில்!!

Posted: 26 May 2007 12:57 AM CDT

சென்னை அருகே, காஞ்சி மாவட்டத்தில் ரூ. 3750 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவுடன் கூடிய சிறப்பு பொருளாதார மையத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.

துபாயைச் சேர்ந்த ஈடிஏ அஸ்கான் நிறுவனம் உலகப் புகழ் பெற்ற கட்டுமான நிறுவனமாகும். இந்த நிறுவனத்துடன் இணைந்த ஈடிஏ ஸ்டார் பிராப்பர்டி டெவலப்பர்ஸ் நிறுவனமும், தமிழக அரசின் தொழில் வளர்ச்சிக் கழகமும் இணைந்து சென்னை அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில், புதிய சிறப்புப் பொருளாதார மண்டலத்தை ஏற்படுத்தவுள்ளன. ரூ.3750 கோடியில் உருவாகும் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா, நகரியம் உள்ளிட்டவை அமைக்கப்படும்.

இதுதொடர்பான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தானது. ஈடிஏ அஸ்கான் குழும தலைவர் சையத் சலாஹுதீன், டிட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராமசுந்தரம் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

தட்ஸ்தமிழ்

குடியரசுத் தலைவர் புதுச்சேரி வருகை.

Posted: 26 May 2007 12:00 AM CDT

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட ஏனாம் பகுதிக்கு விஜயம் செய்கிறார்.

அங்கு கட்டப்பட்ட உள்ள ஈபிள் டவர் போன்ற கோபுரத்திற்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
இதனை புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்த புதுச்சேரி சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், இந்த கோபுரத்தை கட்டுவதற்கான முழு செலவையும் ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறினார்.
தனது பயணத்தின் போது அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து செயல்படுத்தப்படும் சுகாதார காப்பீட்டு திட்டத்தையும் கலாம் தொடங்கி வைக்கிறார். ஏனாம் பகுதியில் உள்ள 10 ஆயிரம் வீடுகளுக்கு மரக்கன்றுகள் அளிக்கும் பசுமை ஏனாம் திட்டத்தையும் அவர் துவக்கிவைக்கிறார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் நான்கு தென் மாநிலங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாவணவர்களுடன் கலாம் உரையாட இருப்பதாகவும் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்தார்.

இன்று மன்மோகனை சந்திக்கிறார் மாயாவதி.

Posted: 25 May 2007 11:51 PM CDT

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஆலோசிக்க உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி, பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று நேரில் சந்தித்து பேசுகிறார். முதல்வர் பதவியேற்றபின் முதன்முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள மாயாவதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அழைப்பின் பேரில் புதுடெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணிநேரம் நடந்த இந்தச் சந்திப்பில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிலை குறித்து அவர் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனாதிபதி தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிலை குறித்து, கட்சி எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய பின்னரே முடிவு செய்யப்படும். மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு தரும், என்றார். இந்நிலையில்,மாயாவதி பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று நேரில் சந்தித்து பேசுகிறார்.