Friday, May 11, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

போப்பாண்டவர் தற்போதைய கலாச்சாரத்தின் மீது கடும் விமர்சனம்

Posted: 11 May 2007 06:40 PM CDT

போப்பாண்டவர் பெனெடிக்ட் ப்ரேஸில் நாட்டில் உள்ள சாவோ பாலோ என்ற நகரத்திற்கு வந்துள்ளார். அந்நாட்டை சேர்ந்த பாதிரியார் ஒருவரை 'புனிதராக' அறிவிக்கும் ஒரு நிகழ்ச்சியில், தற்போதுள்ள கலாச்சாரத்தினை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். திருமணத்தையும் அதன் புனித்ததையும் கிண்டல் செய்யும் அனைத்து விஷயங்களையும் எதிற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

http://www.msnbc.msn.com/id/18611180/

வரலாறு காணாத உயர்வு: கறிக்கோழி கிலோ ஒன்றுக்கு கொள்முதல் விலை ரூ.47

Posted: 11 May 2007 03:32 PM CDT

நாமக்கல், மே 12: கோழிப் பண்ணை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு கறிக்கோழியின் பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.47 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1995-ம் ஆண்டுக்குப் பிறகு கிலோ ரூ.46 என்பதே உட்சபட்ச விலையாக இருந்தது. இந் நிலையில், பல்லடத்தில் வெள்ளிக்கிழமை (மே 11) கூடிய பிராய்லர்ஸ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலையை கிலோ ரூ.47 ஆக நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டது.

மீன்வரத்து குறைந்துள்ளதால் கேரளத்தில் நுகர்வு அதிகரித்துள்ளது. இனப் பெருக்கத்துக்காக கடலில் மீன்பிடிக்க தடை விதித்திருப்பதாலும் கறிக்கோழி விலை அபரிதமாக உயர்ந்துள்ளது. இது பண்ணையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

முட்டை விலை: முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையும் பண்ணை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ரூ.1.90 காசுகளாக உள்ளது. இது கோழிப் பண்ணைத் தொழிலுக்கே மிகுந்த வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

விமான நிலையத்தில் விதிகளை மீறிய அழகிரி

Posted: 11 May 2007 03:17 PM CDT

சென்னை, மே 12: மதுரையில் இருந்து சென்னை வந்த மு.க.அழகிரி, போலீஸ் பாதுகாப்புடன் வி.ஐ.பி. கேட் வழியாகச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங் வருகையையொட்டி விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த பல அடுக்கு பாதுகாப்பு வளையங்களை மீறி இச்சம்பவம் நடந்துள்ளது. சென்னை தீவுத்திடலில் முதல்வர் பொன் விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர். இதையொட்டி, சென்னை விமான நிலையத்தில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதற்கிடையில் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி, மதுரையில் இருந்து சென்னைக்கு பாரமவுன்ட் விமானத்தில் வெள்ளிக்கிழமை காலை வந்தார். அப்போது, பாரமவுன்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான கார் ஒன்று மு.க.அழகிரியை அழைத்துச் செல்ல விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டது. பின்னர், அவர் போலீஸ் பாதுகாப்புடன் வி.ஐ.பி. கேட் எண் 1-ல் வெளியேறினார்.

பிரதமர் வருகையையொட்டி அமைக்கப்பட்டிருந்த பல அடுக்கு பாதுகாப்பு வளையத்தை மீறி, மு.க.அழகிரி அழைத்து செல்லப்பட்டுள்ளார். தற்போது, இதற்கான அனுமதியை வழங்கியது யார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

இத்துடன் மு.க. அழகிரி, வி.ஐ.பி. கேட் வழியாக அனுமதிக்கப்பட வேண்டிய கட்டாயம் என்ன? என்பது பற்றியும் கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது, "மு.க.அழகிரியின் வேண்டுகோளுக்கு இணங்க பாரமவுன்ட் நிறுவனத்தினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் (சிஐஎஸ்எஃப்) அனுமதி பெற்று, வி.ஐ.பி. கேட் வழியாக அவரை அழைத்துச் சென்றனர்" என்று தெரிவித்தனர்.

Dinamani

மலேசியாவிடம் இந்தியா தோல்வி (2-1)

Posted: 11 May 2007 03:11 PM CDT

அஸ்லன்ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் மலேசியாவிடம் தோல்வியுற்று, இறுதிச் சுற்று வாய்ப்பை இழந்தது இந்திய அணி.

ஆட்டத்தின் 9-வது நிமிஷத்தில் மலேசிய அணி முன்னிலை பெற்றது. அடுத்த 2-வது நிமிஷத்தில் சிவேந்திர சிங் அடித்த கோலால் இந்தியா 1-1 என சமநிலை பெற்றது. ஆனால், அதுவே இந்தியாவுக்கு கடைசிக் கோலாக அமைந்தது. பிற்பாதியில் மலேசிய அணி மேலும் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.

தோல்வியுற்ற இந்திய அணி, 3-ம் இடத்துக்காக கொரியாவுடன் விளையாடுகிறது. கடந்த முறை போட்டியில் இந்தியா 3-ம் இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

கொரியா தோல்வி: முன்னதாக நடைபெற்ற ஆட்டத்தில் ஆசிய சாம்பியன் கொரியாவை 6-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது உலக சாம்பியன் ஆஸ்திரேலியா. தொடர்ச்சியாக 4-வது முறையாக ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ச:ஓரினச் சேர்க்கை திரைப்படம் தயாரித்த மாணவர்கள் - கேரளாவில் சர்ச்சை

Posted: 11 May 2007 01:30 PM CDT

கேரளா சங்கனசெரியில் கத்தோலிக்க திருச்சபை நடத்திவரும் புனித வளனார் ஊடகத்துறை கல்லூரியில் ஓரினச்சேர்க்கைபற்றிய திரைப்படம் எடுத்த மாணவர்கள் ஐந்துபேர் கல்லூரியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

'சீக்ரட் மைண்ட்ஸ்' எனும் தலைப்பில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் கல்லூரிகளுக்கிடையேயான போட்டிக்கான படைப்பு என அதை இயக்கிய மாணவர் ஜோ பேபி தெரிவித்துள்ளார்.

கல்லூரி நிர்வாகம் இந்தப் படம் எல்லைமீறியதாக உள்ளதாகவும், மாணவர்கள் கல்லூரி மற்றும் விடுதி வளாகங்களை தவறாகப் பயன்படுத்தி இதில் நிர்வாணமாக நடித்துள்ளனர் என்றும் கூறியுள்ளது.

ஆனால் மாணவர்கள் தரப்பில் படத்தில் பாதி நிர்வாணமே உள்ளதாகவும், பாடத்திட்டத்துக்குட்பட்டே படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


Students expelled for making film on homosexuality

தொடர்புள்ள இன்னொரு செய்தி

ச: அப்துல் கலாமுக்கு அமோக ஆதரவு

Posted: 11 May 2007 01:30 PM CDT

புதுடெல்லி, மே 11-

அப்துல் கலாமே மீண்டும் ஜனாதிபதி ஆகவேண்டும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் நடத்திய சர்வேயில் 72 சதவீதம் பேர் தெரிவித்திருக்கின்றனர்.
ஜனாதிபதி அப்துல் கலாமின் பதவிக்கலாம் வரும் ஜூலை 17-ம் தேதியுடன் முடிகிறது. விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. 750 எம்.பி.க்களும் மாநில சட்டசபை உறுப்பினர்கள் 5 ஆயிரம் பேரும் ஓட்டு போட்டு நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

நாட்டின் முக்கிய கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட உள்ள ஜனாதிபதி வேட்பாளர் பற்றி தினமும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், நாட்டின் முக்கிய நகரங்களில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் இந்த வாரத்தில் ஒரு சர்வே நடத்தியது. கலாமே மீண்டும் ஜனாதிபதியாவதை விரும்புகிறீர்களா? களத்தில் நிறுத்தப்பட இருப்பதாக கூறப்படும் மற்ற பிரபலங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இதுதான் சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகள்.

இதில் கலாமுக்கு 72 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் அவரை நெருங்கக்கூட முடியவில்லை. மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி ஆகியோர் தலா 7 சதவீத ஆதரவுடன் 2-ம் இடத்தில் உள்ளனர். மேற்குவங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு, பொருளாதார மேதை அமர்தியா சென்னுக்கு ஆதரவாக தலா 5 சதவீத ஓட்டு கிடைத்துள்ளது. துணை ஜனாதிபதி ஷெகாவத்துக்கு 4 சதவீதம் பேர் ஓட்டளித்துள்ளனர். அரசியல்வாதி அல்லாத ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டும் என்று கருத்து தெரிவித்திருப்பவர்கள் 74 சதவீதம் பேர்.
இன்டர்நெட் வழியாக டைம்ஸ் ஆப் இந்தியா நடத்திய சர்வேயில் கலாம் 53%, நாராயணமூர்த்தி 24%, ஷெகாவத் 14%, அமர்தியா சென், ஜோதிபாசு, சட்டர்ஜி தலா 3% ஓட்டு பெற்றுள்ளனர்.

இன்டர்நெட் பயன்படுத்தும் படித்த, மேல்தட்டு மக்களைவிட நடுத்தர மற்றும் ஏழை மக்களின் ஆதரவு கலாமுக்கு அதிகம் இருப்பதும் இந்த சர்வேயில் தெரியவந்துள்ளது.

மாலை முரசு

ச:புகைப்பழக்கத்தை நிறுத்த புகை பிடியுங்க

Posted: 11 May 2007 11:23 AM CDT

ஹாங்காங் கம்பெனி ஒன்று உருவாக்கியுள்ள இ-சிகரெட் புகைப்பழக்கத்தை கைவிட உதவுகிறது. புகையிலை இல்லாத இந்த சிகரட் பேட்டரிகொண்டு செயல்படுகிறது.

இதன் விலை தோராயமாக $208.

E-smoke, to kick the habit Reuters Video

ச:ஈரன், வட கொரியா முக்கிய சந்திப்பு

Posted: 11 May 2007 10:38 AM CDT

உலக அளவில் சர்ச்சைக்குரிய நாடுகளாகக் கருதப்படும் ஈரானும் வட கொரியாவும் முக்கிய சந்திப்பில் இருநாட்டு உறவுகளையும் வளர்க்க ஒப்பாந்தம் செய்துள்ளனர்.

இரு நாடுகளும் அமெரிக்க அதிபரால் 'தீமையின் மையப்புள்ளிகள்' என வர்ணிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல், பொருளாதார, கலாச்சார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாகவும் வடகொரியா ஈரானிடம் பெற்றுள்ள கடன் இரு நாடுகளுக்கிடையேயான உறவுக்குத் தடையாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

Iran, North Korea seek to boost cooperationReuters Canada, Canada
North Korea's debt to Iran obstacle for cooperation: Mottaki NewKerala.com

ச: காட்டலீனா தீவில்(Catalina Island) காட்டுத் தீ !

Posted: 11 May 2007 09:14 AM CDT

அமெரிக்காவில், கலிபோர்னியா(தெற்கு) மானிலத்தில் இருக்கும் காட்டலீனா தீவில் காட்டுத் தீ பரவியதால் சுமார் 4000 ஏக்கர் நிலம் சேதம். கிட்டதட்ட 3300 மக்கள் வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றபட்டார்கள்.

மேலும் படிக்க

http://abclocal.go.com/kabc/story?section=local&id=5295110

ச:சிடி விவகாரம் - பாஜக கண்டனம்

Posted: 11 May 2007 09:14 AM CDT

உ.பி தேர்தல் பிரச்சாரத்தின்போது பஜக சார்பில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய சிடி வெளியீட்டை பாஜக கண்டித்துள்ளது. தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதற்குஇணங்க இந்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிடி பாஜகவின் அதிகாரபூர்வ பிரச்சார சாதனமாக வெளியிடப்படவில்லை என்றும் கட்சியின் அடிமட்டத் தலைவர்களே இதை வெளியிட்டுள்ளனர் என்றும் பாஜக தெரிவித்தது.

BJP condemns 'communal' CDCNN-IBN, India
BJP studying EC's order Sahara Samay
EC asks BJP to condemn poll CD

ச:பஸ் கங்கையில் கவிழ்ந்தது - 22பேர் மரணம்

Posted: 11 May 2007 09:06 AM CDT

பாட்னா சென்றுகொண்டிருந்த பேருந்து பிகாரின் வைஷலியில் இருக்கும் மகாத்மாகாந்தி பாலத்திலிருந்து கங்கையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22பேர் பலியாயினர்.


22 killed as bus falls off bridge over GangaHindu
15 killed after bus falls off bridge Hindustan Times
22 die as bus plunges into Ganga India eNews.com

ச:முதல்வர் பொன்விழா 27 கைதிகள் விடுதலை

Posted: 11 May 2007 08:54 AM CDT

முதல்வர் கலைஞரின் சட்டசபை பொன்விஆவை முன்னிட்டு தமிழகமெங்குமுள்ள சிறைகளிலிருந்து ஒரு பெண் உட்பட்ட 27 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 27 பேரும் மே 11ல் 14 வருடம் சிறைத்தண்டனை முடித்தவர்கள். விதிகளின்படி ஆளுநரின் ஒப்புதலுடன் விடுவிக்கப்பட்டனர்.

தினமலர்

கலைஞரின் பொன்விழா கொண்டாட்டம்

Posted: 11 May 2007 07:36 AM CDT

நன்றி தினமலர் நாளிதழிற்குசரித்திரங்கள் கண்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டை இன்று தன்னகத்தே கொண்டிருக்கும் மாநிலசட்டசபையின் வரலாற்றில் புதிய சாதனைபடைத்து சரித்திரம் எழுதப்படுவதை கண்டது. தமிழக முதல்வரும் திமுக தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஐம்பது ஆண்டுகாலம் சட்டசபையில் பணியாற்றியமையை பாராட்டும் விதமாக நடந்த பொன்விழாவில் ஆளுநர் திரு பர்னாலா அவரின் அவைப் பணி மற்றவர்களுக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்வதை புகழ்ந்துரைத்தார்.

எதிர்கட்சிகளான அதிமுகவும் மதிமுகவும் புறக்கணித்த இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், முன்னாள் அவை உறுப்பினர்களும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப் பட்டிருந்தனர்.
ஆளுநரை தவிர பாட்டாளி மக்கள் கட்சியின் ஜிகே மணி, சிபிஎம்மின் கோவிந்தசாமி,சிபிஐயின் சிவபுண்ணியம், மற்றும் டிபிஐ யின் கே செல்வம் ஆகியோரும் சிறப்புரை ஆற்றினர்.

மேலும்..The Hindu News Update Service

படம் நன்றி; தினமலர் நாளிதழ் இணையப் பதிப்பு

ஊழலை ஒழிப்பேன்: மாயாவதி

Posted: 11 May 2007 08:12 AM CDT

பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு உபியில் தனியாட்சி காணும் மாயாவதி தனது அதிரடி வெற்றி தன்னுடைய கட்சியின் கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றியாக கருதுவதாக பத்திரிகையாளர் கூட்டமொன்றில் கூறினார். தனக்கு பெருமளவில் வாக்களித்த 'மேல்சாதி'யினருக்கும் முஸ்லிம்களுக்கும் நன்றி தெரிவித்தார். தனது வழிகாட்டியான கான்சிராமையும் அண்ணல் அம்பேத்கரையும் நினைவு கூர்ந்த அவர், தனது ஆட்சி ஊழல், குற்றம் இவற்றை ஒழித்து வளர்ச்சிக்கு அடிகோலும் எனத் தெரிவித்தார்.


Mayawati promises to root out corruption in UP - Daily News & Analysis

அமர்சிங்கின் நண்பர்கள் வருமானவரி ரைய்டில்

Posted: 11 May 2007 07:57 AM CDT

உபி தேர்தல்முடிவுகள் வெளியாவதற்கு முன்பே சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவர் அமர்சிங்கின் நண்பர்களாகக் கருதப்படும் அசோக் சதுர்வேதியின் Flex நிறுவனம், வினய் மாலூ வின் HFCL நிறுவனங்களின் மீது வருமானத்துறை தேடுதல்கள் நடத்தப் பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது.

மேலும்...The Times of India

ஒரிஸா சாலைவிபத்து: 10 பேர் மரணம்

Posted: 11 May 2007 07:48 AM CDT

ஒரிசாவின் மயூர்கஞ்ச் மாவட்டத்தில் இன்று ஒரு ஜீப் வண்டியும் எண்ணெய் லாரியும் மோதிக் கொண்டதில் பத்து பேர்வரை மரணமடைதுள்ளனர், மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.

Road accident kills 10 in Orissa- Hindustan Times

உ.பி தேர்தல்: நாங்கள் தோற்றதிற்கு தேர்தல் ஆணையமே காரணம்: முலாயம்

Posted: 11 May 2007 07:11 AM CDT

உத்திரப்பிரதேச முதல்வர் முலாயம்சிங் யாதவ் தங்களின் தோல்விக்கு தேர்தல் ஆணையத்தின் ஆட்சித் தலையீடே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் ஒரு இணை அரசை நடத்தியதற்கு காங்கிரஸ், பிஜேபியும் உடன் போனதாகவும் கூறியுள்ளார். ஆளுநரிடம் தனது பதவிவிலகல் கடிதத்தை கொடுத்தபின் நிருபர்களிடம் பேசும்போது இது தவறான ஜனநாயகப் போக்கு என்றும் தேர்தல் ஆணையத்தின் பங்கு குறித்து அனைத்துக் கட்சி கூட்டமொன்றை கூட்டப் போவதாகவும் தெரிவித்தார்.


DNA - India - Mulayam holds EC responsible for Samajwadi Party defeat in UP polls - Daily News & Analysis

உ.பி தேர்தல் முடிவுகள் - சற்றுமுன்

Posted: 11 May 2007 02:11 AM CDT

உத்தரப் பிரதேச மாநில தேர்தல் முடிவுகள் எல்லா கணிப்புகளையும் தாண்டி பிஎஸ்பி கட்சி தனியாகவே ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்கியிருக்கிறது. சமீபத்திய நிலவரங்களின்படி
அந்தக் கட்சி தனித்தே ஆட்சி அமைக்க முடியுமெனத் தோன்றுகிறது. 202 இடங்களில் அந்தக் கட்சி முன்னணியில் இருக்கிறது. அடுத்த இடத்தில் இருக்கும் சமாஜ்வாதி கட்சி 89 இடங்களிலும், பிஜேபி 58 இடங்களிலும் ம்ட்டுமே முன்னணி வகிக்க காங்கிரஸ் 25 இடங்களோடு திருப்திப்பட வேண்டியிருக்கும். மாயாவதியின் வீட்டின் முன்னால ஓரிருவரைத் தவிர பெரிய ஆர்ப்பாட்டங்க்ள் ஏதுமில்லை. முழுமையான முடிவுகள் தெரிந்த பின்னரே வேட்பாளர்கள் வெளியில் வந்து கொண்டாட்டங்களில் ஈடுப்டவேண்டும் என்று கட்சித்தலைவர் மாயாவதியிடமிருந்து கடுமையான உத்தரவு வந்ததே காரணமாம்.

கொசுறு தகவல்கள்:

** முலாயம் சிங் தான் போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்று விட்டார்
இன்று மாலை ஆளுநரைச் சந்தித்து தனது பத்விவிலகல் கடிதத்தை வழங்குவார்

** நாளை பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

** தேவைப்பட்டால் வெளியில் இருந்த் ஆதரவு தர காங்கிரஸ் முடிவு

** மாயாவதிக்கு யாருடைய ஆதர்வும் தேவையில்லை - சுஷ்மா ஸ்வராஜ் (பிஜேபி)

Links for 2007-05-10 [del.icio.us]

Posted: 11 May 2007 12:00 AM CDT

ச: உ.பி., தேர்தல் முடிவு : முன்னணி நிலவரம

Posted: 10 May 2007 11:54 PM CDT

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடந்தன. தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி காலை 7 மணி முதல் தொடங்கியது.

தற்போதைய முன்னணி நிலவரம்: பகுஜன் சமாஜ் 183 ; சமாஜ்வாடி 93 ; பா.ஜ.க., 64 ; காங்கிரஸ் 31 ; இதர கட்சிகள் 29 .

இன்று மாலைக்குள் முழு விபரமும் வெளியாகிவிடும்.