Wednesday, May 16, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

அர்ச்சகர் பள்ளிகள் இடைக்கால தடைக்கு சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Posted: 16 May 2007 04:30 PM CDT

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி வழங்க தடை விதிக்கக் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

"அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்' என்று தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இதற்கு உதவும் வகையில் அனைத்து ஜாதியினரும் பயிற்சி பெற அர்ச்சகர்கள் பயிற்சிப் பள்ளிகள் திறக்கப்பட்டன. உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி ஆதி சைவ சிவாச்சாரியார் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்க செய்யப்பட்டது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து, அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Dinamalar

ச:பாட்னாவில் இரயிலைத் தள்ளிய பயணிகள்

Posted: 16 May 2007 11:41 AM CDT

பாட்னாவில் திடீரெனெ நின்ற மின்சார இரயிலை ஓட்டுநரின் வேண்டுகோளுக்கிணங்க நூற்றுக்கணக்கான பயணிகள் இறங்கி தள்ளினர்.

ஓடிக்கொண்டிருந்த இரயிலில் பயணி ஒருவர் அபாயச் சங்கிலியை பிடித்திழுத்ததில் இரயில் மின்சாரம் பெற இயலாத 'நியூற்றல் ஜோன்'ல் (Neutral Zone) நின்றது. அரைமணி நேரம் முயற்சித்து 12 அடிகள் தள்ளியபின் பயணம் தொடர்ந்தது.


Train passengers asked to get out and push Reuters

ச:திரை அரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி: புதிய படங்களுக்கு சிக்கல்

Posted: 16 May 2007 11:24 AM CDT

இனிமேல் புதிய படங்களை சதவீத அடிப்படையில் தான் திரையிடுவோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் போர்க்கொடி துõக்கியுள்ளது. இதனால் ரஜினியின் சிவாஜி, அஜீத்தின் கிரீடம், கமலின் தசாவதாரம் உள்ளிட்ட புதிய படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தினமலர்

ச:விஜயகாந்த் மண்டபம் இடிக்கும் பணி ஆரம்பித்தது

Posted: 16 May 2007 11:19 AM CDT

விஜயகாந்த் மனைவி பெயரில் இருக்கும் ஆண்டாள் அழகர் திருமணமண்டபம் மற்றும் தே.மு.தி.கவின் கட்சி அலுவலகமுமான கட்டிடம் மேம்பாலப் பணிகளுக்காக இடிக்கப்படவுள்ளது. கட்டிடத்தை இடிப்பதற்கான அளவுகள் இன்று எடுத்து குறிக்கப்பட்டன.

கட்டிட இடிப்பு பணிகள் நாளை காலை 8 மணிக்கு துவங்குகின்றன. இன்று நெடுஞ்சாலைத்துறை வேலை செய்யும்போது கட்சித் தொண்டர்கள் சிலர் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர் சிலர் மறியலில் ஈடுபட முயற்சித்தனர் அவர்களை விஜயகாந்தின் மைத்துனர் சதீஷ் பின்னர் கலைந்து போகச் சொன்னார்.

தினமலர்

ச: தென்மேற்கு பருவக் காற்று சீக்கிரம் வரும்

Posted: 16 May 2007 08:26 AM CDT

மும்பையில் ஜூன் 8 அன்று வரவேண்டிய தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு முன்கூட்டியே வரும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் வழக்கமான தேதியிலிருந்து ஒரு வார காலத்திற்கு முன்னதாக, அதாவது இம்மாதம் 24 ம் தேதியன்றே தென் மேற்கு பருவ மழை தொடங்கிவிட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமான் கடலில் கடந்த 10 ம் தேதியன்றே தென்மேற்கு பருவ மழை மையம் கொண்டு விட்டது.அதாவது வழக்கமான தேதியிலிருந்து 8 நாட்களுக்கு முன்னதாகவே இந்த மழை மையம் கொண்டு விட்டதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மேலும் மேற்கு கடலோரப் பகுதிகளில் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

உபி தோல்விக்கு அமைப்பு கோளாறே காரணம் - சோனியா.

Posted: 16 May 2007 08:08 AM CDT

அமைப்பு ரீதியான கோளாறுதான் உத்தர பிரதேச மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு காரணம் என அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
எனினும் குஜராத் மற்றும் கோவா மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல்களுக்கு தயாராகுமாறு கட்சியினரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் முதல்முறையாக அதுகுறித்து கருத்து தெரிவித்த சோனியா காந்தி, இந்தத் தேர்தலில் மதவாத சக்திகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், காங்கிரஸ் கட்சியின் நிலை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்றார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சிக் கூட்டத்தில் உரையாற்றிய சோனியா காந்தி, தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாகவும், மக்கள் மத்தியில் தங்கள் கட்சிக்கு நல்ல ஆதரவு இருந்த போதிலும் அதனை வாக்குகளாக மாற்றும் அளவுக்கு அமைப்பு பலமாக இருக்கவில்லை என்றும் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் கலந்து கொண்டனர்.

ச: லாவோஸில் பூகம்பம்: பாங்காக், ஹனாய் கட்டிடங்கள் பாதிப்பு

Posted: 16 May 2007 08:07 AM CDT

இன்று வடக்கு லாவோசில் 6.1 ரிச்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 800 கி.மீ தொலைவிலுள்ள பாங்காக் நகரிலும் ஹனாய் நகரிலும் கட்டிடங்கள் அதிர்ந்தன. கடைகளிலிருந்து மக்கள் வேகமாக வெளியேறினார்கள்; அலுவலக கட்டிடங்கள் காலி செய்யப் பட்டன. கிரீன்விச் நேரப்படி காலை 0856 ( இந்திய நேரம் 1426)க்கு லாவோசின் தலைநகர் லுஅங் ப்ரபாங்கிலிருந்து 148 கி.மீ தூரத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்க கணிப்பு மையம் தெரிவிக்கிறது.

Laos earthquake shakes Bangkok, Hanoi buildings

ச: இந்தோனேசியர்களை அடிமைகளாக வைத்திருந்த இந்திய குடும்பம்: US

Posted: 16 May 2007 07:40 AM CDT

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் பணக்காரப் பகுதியில் வசிக்கும் கோடீஸ்வர இந்தியக் கணவன் - மனைவி இரண்டு இந்தோனேசியர்களை அடிமைகளாக வைத்திருந்து துன்புறுத்தியதாக கைது செய்யப் பட்டுள்ளனர்.

மஹேந்தர் சபானி மற்றும் அவர் மனைவி வர்ஷா நறுமண வியாபாரம் செய்துவந்தனர். அவர்களின் பல்வேறு பணிகளைச் செய்ய இந்த அடிமைகலை வைத்திருந்ததாகவும் அவர்களை அடித்து துன்புறுத்தி வேலை வாங்கியதாகவும் குற்றம் சாடப்பட்டுள்ளனர்.

அடிமை வியாபாரம் தடைசெய்யப்பட்டுல்ள அமெரிக்காவில் அவர்களுக்கு குற்றம் நிரூபிக்கப் பட்டால் 17இலிருந்து 22 வருடம் வரை தண்டனை கிடைக்கலாம்.
DNA - World - Indian couple arrested for keeping 2 Indonesians as slaves - Daily News & Analysis

ச: உச்சநீதிமன்றம்: கல்லூரி ராகிங்க்கு தடை

Posted: 16 May 2007 07:25 AM CDT

இன்று உச்சநீதிமன்றம் கல்லூரிகளில் புது மாணவர்களை கலாய்க்கும் ராகிங் முறையை கட்டுப்படுத்தும் விதமாக கல்விநிலையங்கள் விதிமுறைகளை மீறுபவர்களை காவல்நிலையங்களில் குற்றம் பதிவு செய்கின்ற அளவிற்கு கண்டிப்புக் காட்டவேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது.

மேலும்...SC approves stringent anti-ragging measures- Hindustan Times

ச: நிக்கோலஸ் சார்கோசி பிரஞ்ச் அதிபராக பதவியேற்றார்

Posted: 16 May 2007 07:12 AM CDT


இன்று நடந்த ஒரு எளிய விழாவில் நிக்கோலஸ் சார்கோசி ஷாக் சிராக்கை அடுத்து பிரஞ்ச் நாட்டின் அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். சென்ற மாதத்தில் நடந்த தேர்தலில் தனக்குக் கிடைத்த மகத்தான வெற்றியை ஒட்டி எல்சி அரண்மனையில் அடுத்த ஐந்து வருடங்களை கழிக்க விருக்கும் சார்கோசி தனது ஏற்புரையில் பிரான்ஸின் ஒற்றுமைக்கு பாடுபடுவேன் என்றும் நாட்டின் பெருமையை மீட்பேன் என்றும் கூறினார்.

Nicolas Sarkozy takes over as France's president | U.S. | Reuters

ச: கிராமங்களில் தொலைதொடர்பு மேம்பாடே தன் முதல் முன்னுரிமை: இராஜா

Posted: 16 May 2007 03:33 AM CDT

தனது புதிய துறையின் பொறுப்பை இன்று புதனன்று எடுத்துக் கொண்ட இராஜா பத்திரிகையாளர்களிடம் பேசும் போது கிராமப்புற வளர்ச்சியே தனது தனிக்கவனத்தைப் பெறும் என்றார். தனக்கு முந்தைய அமைச்சர்கள் காலத்தில் தொலைதொடர்பு பெரும் வளர்ச்சியைக் கண்டிருந்தாலும் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு இன்னும் அவை சென்றடையவில்லை என்று கூறினார். அந்நிய முதலீடு பெருக்குவதும் தன் முன்னுரிமைகளில் ஒன்று என கூறினார்.

Raja to focus rural telephony, foreign investment - India

ச: காயத்திற்கு பின் மீண்டும் சானியா: மொரொக்கோவில் வெற்றியுடன் துவக்கம்

Posted: 16 May 2007 02:59 AM CDT


கடந்த பிப்ரவரியில் காயமடைந்ததால் கத்தார் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகிய சானியா மிர்சா உடல்நிலை தேறி மீண்டும் ஆடத் துவங்கியுள்ளார். நேற்று மொரொக்கோவில் நடந்த பெண்கள் இரட்டையர் ஆட்டத்தில் தன்னுடைய துணைவி அமெரிக்க வானியா கிங்குடன் சேர்ந்து ஆடி 6-3,5-7,10-8 என்ற கணக்கில் உருசிய,உக்ரைன் வீராங்கனைகளை வென்று நல்லதுவக்கத்தைப் பெற்றுள்ளார். இந்த ஆட்டத் தொடரில் ஒற்றையர் ஆட்டத்தில் அவர் முதல் வரிசையெண் பெற்றுள்ளார்.

ania makes winning return in Morocco : Tennis, Morocco Open, Sania Mirza, win, doubles, first round : IBNLive.com : CNN-IBN

ச: ராதிகா செல்வி மத்திய அமைச்சராகிறார்

Posted: 16 May 2007 12:50 AM CDT

தமிழ்நாட்டில் தி.மு.க. சார்பில் 7 பேர் மத்திய மந்திரிகளாக பதவி வகித்து வந்தனர். இதில் தயாநிதிமாறனின் ராஜி னாமாவை தொடர்ந்து மத்திய மந்திரிகளின் எண்ணிக்கை 6 ஆக குறைந்தது. மத்திய மந்திரிகள் ராசா, ரகுபதி ஆகி யோரின் இலாகாக்களும் மாற்றப்பட்டது.

முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிபாரிசை ஏற்று திருச் செந்தூர் தொகுதி தி.மு.க. எம்.பி. ராதிகா செல்வி புதிய மத்திய மந்திரியாக நியமிக்கப்பட இருக் கிறார். வருகிற 18-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு அவர் ஜனாதிபதி மாளிகையில் மத்திய இணை மந்திரியாக பதவி ஏற்க இருப்பதாக அறிவிக் கப்பட்டுள்ளது.

மத்திய மந்திரி பதவி கிடைத் தது பற்றி ராதிகாசெல்வியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

எனக்கு மந்திரி பதவி கிடைத்தது இன்பஅதிர்ச்சியாக உள்ளது. இவ்வளவு பெரிய பதவி கிடைக்கும் என்று கனவிலும் நான் நினைத்து பார்த்ததில்லை.

மத்திய மந்திரி பதவிக்கு என்னை தேர்வு செய்த தலைவர் கலைஞருக்கு பெருமை சேர்க் கும் வகையில் மக்களுக்கு சேவை செய்வேன். தமிழக மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

=மாலைமலர்

விமான கண்காணிப்பை பலப்படுத்த இராமநாதபுரத்தில் விமான ஓடுதளம்.

Posted: 16 May 2007 12:49 AM CDT

இராமநாதபுரத்தில் விமான ஓடுதளம் அமைக்கத் தேவையான நிலத்தை தரும்படி தமிழக அரசிடம் கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியக் கடற் பகுதியில் வான் வழி கண்காணிப்பு எளிதாகும் என்று இந்தியக் கடற்படையின் கிழக்கு பிராந்திய கமாண்டர் வைஸ்.அட்மிரல் ஆர்.பி. சுதன் நேற்று முன்தினம் தெரிவித்தார்.இது பற்றி சென்னையில் நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களிடம் அவர் கூறியதாவது:இலங்கையில் அந்நாட்டு இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் சண்டை நடந்து வருவதால் இந்தியக் கடல்பகுதியில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கப்பல், விமானம் மற்றும் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியக் கடற்படையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி இராமநாதபுரத்தில் விமான ஓடுதளத்தை விரிவுபடுத்த நிலம் தேவைப்படுகிறது. இங்கு விமான ஓடுதளம் அமைப்பதன் மூலம், வான் வழியாக எளிதில் கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளலாம். இதற்கான நிலத்தை ஒதுக்கித் தரும்படி மாநில அரசின் உதவி கோரப்பட்டுள்ளது. எண்ணூர் மற்றும் சென்னை துறைமுகத்தில் சில வசதிகள் தேவைப்படுகின்றன.இலங்கையில் நீடித்து வரும் சண்டையால் கடல் பகுதியில் ஆயுதம் போதைப் பொருள் கடத்தல் போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதைத் தவிர்க்க, இந்தியக்கடல் பகுதியில் தீவிர ரோந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள், அந்நாட்டு ராணுவம், விமானப்படை, கடற்படைக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகளால் தமிழகத்துக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை. இலங்கை கடற்படையுடன், தகவல் பரிமாற்றம் மட்டும் செய்து கொள்கிறோம். அவர்களும் நல்ல ஒத்துழைப்பு தருகின்றனர். இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் புலிகளை எளிதில் அடையாளம் காண்பதற்காக அங்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையுடன் கூட்டு ரோந்து இல்லை. விடுதலைப் புலிகளின் ஊடுருவலை தடுப்பதற்காக பாக்.ஜலசந்தி பகுதியில் கண்காணிப்பை அதிகரித்துள்ளோம். இந்தியா முழுக்க கடல் பாதுகாப்புக்காக 50 ரோந்து கடற்படை படகுகள், இதில் தமிழக கடல் பகுதிக்கு ஏழு கப்பல்கள் உள்ளன. இவற்றில் நான்கு படகுகள் பாக் ஜலசந்தி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. முன் இரண்டு கப்பல் மட்டுமே ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தன. மேலும் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், அப்பகுதியில் மீன்கள் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதியில் மீன்கள் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதியில் மீன்கள் அதிகமாக கிடைப்பதால் தமிழக மீனவர்கள் அங்கு செல்கின்றனர். அப்படி செல்பவர்களை தான் இலங்கை இராணுவத்தினர் சுடுகின்றனர். அப்படி செல்பவர்களை தான் இலங்கை இராணுவத்தினர் சுடுகின்றனர்.சமீபத்தில் இலங்கை இராணுவத்தினரிடம் பிடிப்பட்டுள்ள மீனவர்கள் பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை. இந்திய கடற் படைக்கு இராமநாதபுரத்தில் பெரிய விமான தளம் அமைக்க தமிழக அரசிடம் இடம் கேட்டுள்ளோம். அதுபோல தூத்துக்குடி,எண்ணூர் மற்றும் சென்னைத் துறைமுகங்களில் கடற்படைக்கு தேவையான இடவசதி செய்து தர மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். இவ்வாறு பிரேம் சுதன் கூறினார்.

நன்றி : வீரகேசரி

Links for 2007-05-15 [del.icio.us]

Posted: 16 May 2007 12:00 AM CDT