Satrumun Breaking News
Satrumun Breaking News |
யாழ்ப்பாணத்தை மீட்க புலிகள் திட்டம் Posted: 28 May 2007 02:56 PM CDT கொழும்பு, மே 28: யாழ்ப்பாணத்தை முழுவதுமாக தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர ராணுவத்திற்கு எதிராக மிகப்பெரிய தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருக்கும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. முழு செய்திக்கு "மாலைச் சுடர்" |
மாறன் இல்ல நிகழ்ச்சி: முதல்வர் குடும்பம் புறக்கணிப்பு Posted: 28 May 2007 10:48 AM CDT சென்னை, மே 28: முரசொலி மாறன் மகள் டாக்டர் அன்புக்கரசியின் வளைகாப்பு சென்னையில் இன்று நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. முதல்வர் குடும்பத்தினர் யாரும் இந் நிகழ்ச்சி யில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். முழு செய்திக்கு "மாலைச் சுடர்" |
இந்திய சரோட் இசை மேதைக்கு அங்கிகாரம். Posted: 28 May 2007 10:08 AM CDT சரோட் இசை வல்லுனர் ஆஷிஷ் கானுக்கு Fellow of the Royal Asiatic Society of Great Britain and Ireland என்கிற உயரிய கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வங்கிகாரம் பெறும் முதல் இந்திய இசைக்கலைஞர் இவர். இது ஐக்கிய இராச்சியத்திலேயே (UK) ஆசிய கலைகளுக்கான மிக உயர் பீடமாகும். இவ்வுயர் அங்கிகாரம் பெற்றவர்களில் கவிமேதை ரவீந்தரநாத் தாகூர், வரலாற்றறிஞர் சர். ஜாதுநாத் சர்க்கார் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். சரோட் இசை மேதை அலி அக்பர் கானுடைய மகனாகிய ஆஷிஷ் கான், தனது தந்தைக்கு இணையாக கிராமி விருதுகள் பெற்றுள்ளவராவார். இந்திய இசையை மேற்கில் பரவச்செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர். The Hindu News Update Service-லிருந்து |
ச: நிலவு செல்லும் திட்டத்திற்கு இயந்திரஜீவி : ஐஐடி கான்பூர் தயாரித்தது Posted: 28 May 2007 09:56 AM CDT இந்தியா நிலவிற்கு மனிதரை 2011இல் அனுப்பும் திட்டத்திற்கு உறுதுணையாக அங்குள்ள நிலத்தில் செல்லவும் படங்கள், நிகழ்படங்களை் எடுக்கவும் ஏதுவான ஒரு இயந்திரஜீவியை ஐஐடி கான்பூர் மாணவர்களும் பேராசிரியர்களும் தயாரித்திருக்கிறார்கள். இரண்டுகால்களுடன் கூடிய இந்த இயந்திரஜீவி அதிநவீன காமிராக்களின் மூலமும் லேசர் விளக்குகள் மூலமும் தகவல் சேகரிக்க முடியும். மேலும் அறிய..Robot for India's moon mission - Sify.com |
Posted: 28 May 2007 07:37 AM CDT ஜப்பானின் விவசாய அமைச்சர் டோஷிகட்சு மட்சோகா இன்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு வயது 62. வெறும் 236,000 டாலருக்கும் சற்றே அதிகமான செலவு கணக்கு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடுமையான கேள்விக்கணைகளுக்கு உள்ளான அவர், மானத்துக்கு பயந்து இந்த முடிவு கண்டதாக கூறப்படுகிறது. பாராளுமன்ற கமிட்டி ஒன்றின் விசாரணைக்கு சில மணி நேரங்கள் முன்னதாக இம்முடிவை அவர் எய்தியுள்ளார். முன்னதாக, எதிர்கட்சிகள் அவருடைய பதவி விலகலை கோரி வந்திருந்தன. பதவியேற்றிருந்த மூன்றே நாளில், அரசியல் நன்கொடைகளின்பால் செலவிடப்பட்டிருந்த 8,500 டாலர் தொகைக்காக அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. பி.கு: தொழிற்மயப்பட்ட நாடுகளில் ஜப்பானில் தான் தற்கொலைகள் அதிகம். சி.என்.என். செய்தி |
ச:கேரளாவில் பருவமழை துவங்கியது Posted: 28 May 2007 06:01 AM CDT பொருளாதார நிபுணர்களிலிருந்து பங்கு வணிகர் வரை எதிர்பார்க்கும் இந்தியாவின் பருவ மழை கேரளத்தில் இன்று எட்டியதாக தெரிகிறது. திருவனந்தபுரம், மலப்புரம், கொல்லம், கோட்டயம், ஆலப்புழா என எல்லா மாவட்டங்களிலும் கடந்த 24 மணிநேரத்தில் கனத்த மழை பெய்துள்ளது. கேரள வானிலை அதிகாரிகள் இது பருவமழைதானா என நிச்சயிக்காவிடினும் தில்லி வானிலை நிலையம் இது பருவமழையே யாகும் என உறுதி செய்துள்ளது. NDTV.com: Monsoon hits Kerala coast |
சோனியாவை சந்தித்தார் கருணாநிதி. Posted: 28 May 2007 05:29 AM CDT தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது அவர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்தும், இதில் திமுக கூட்டணிக் கட்சிகளின் நிலை குறித்தும் ஆலோசனை நடத்தினார்.மேலும், டெல்லிக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள அவர், ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்துப் பேசவுள்ளார். இதனிடையே, டெல்லியில் இன்று நடைபெறவுள்ள தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும் அவர், தமிழகத்துக்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்கள், மத்திய அரசு வழங்கவேண்டிய உதவிகள் குறித்து விவரிப்பார் எனத் தெரிகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளில் திமுக பிரதானக் கட்சியாகத் திகழ்வதால், சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் உடனான கருணாநிதியின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. |
அஸ்ஸாம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு Posted: 28 May 2007 03:52 AM CDT ஒருசேர நிகழ்ந்த இரு முழு அடைப்புகளால் அஸ்ஸாமின் இயல்பு வாழ்க்கை இன்று பாதிப்படைந்தது. 29 வணிக அமைப்புகள் சேர்ந்து 24 மணி நேர முழு அடைப்புக்கு காம்ரூப் மாவட்டத்திலும், அஸ்ஸாம் கன பரிஷத் குவஹாத்தி நகரில் 12 மணி நேர முழுஅடைப்புக்கும் அழைப்பு விடுத்திருந்தன. மாநிலத்தில் நிகழ்ந்துவரும் குண்டு வெடிப்புகளை கண்டித்து, உல்ஃபா தீவிரவாதத்துக்கு எதிராக இந்த முழு அடைப்புகள் நிகழ்த்தப்பட்டன. மற்ற அரசியல் கட்சிகளும் ஆதரவளித்தன. The Hindu News Update Service |
மதுரை மேற்கு: அ தி மு க வேட்பாளர் யார்? Posted: 28 May 2007 02:07 AM CDT மதுரை மேற்கு இடைத்தேர்தலில் அ தி மு க வேட்பாளராக டேவிட் காளிமுத்து நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது. மாலைமலர் |
Posted: 28 May 2007 01:50 AM CDT கணவனை கொல்ல முயன்றதாக, பஞ்சாபைச் சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியப்பெண்மணி பல்விந்தர் அவர் மகளுடனும், மகளின் காதலனுடனும் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டிஷின் கொவென்ட்ரி நகரில் இது நடந்துள்ளது தனக்கிருக்கும் கடன் தொல்லையிலிருந்து மீள, கணவன் பெயரில் ஆயுள் காப்பீடு எடுத்து, பின்னர் கணவரையே கொல்ல முயன்றுள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்ட மூவருக்கும் முறையே பத்து, எட்டு, ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது! டைம்ஸ் ஓஃப் இந்தியா |
துபாய்-ஆளுமைத்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம். Posted: 28 May 2007 01:39 AM CDT துபாயில் இந்திய முஸ்லீம் சங்கத்தின் சார்பில் ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் வரும் ஜூன் 8ம் தேதி நடைபெறவுள்ளது. அல்-கிஸஸ் சென்ட்ரல் பள்ளியில் காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த முகாம் நடக்கிறது. முகாமில் ஆண்கள், பெண்கள் இரு பாலரும் கலந்து கொள்ளலாம். இதற்கான கட்டணம் முன் பதிவு 15 தினார் ஆகும். இந்த பயிற்சிக்கு முன் பதிவு செய்யும் முதல் 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். முன் பதிவு செய்ய 050 51 96433 மற்றும் 050 47 53052 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் iman1976@emirates.net.ae அல்லது unarvaiunnai@yahoo.comஎன்ற இ-மெயில் முகவரிகள் மூலமும் முன் பதிவு செய்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும். source: thats thamil |
டெல்லி புறப்பட்டுச் சென்றார்:முதல்வர் கருணாநிதி. Posted: 27 May 2007 11:55 PM CDT அன்பழகனுக்கு பதவியா? முதல்வர் கருணாநிதி 2 நாள் பயணமாக இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் நாளை தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் கருணாநிதி இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். காலை 6.40 மணிக்கு டெல்லி சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் முதல்வர் சென்றார். அவருடன் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், மத்திய அமைச்சர் ராஜா ஆகியோரும் சென்றனர். உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் முதல்வரை வழியனுப்பி வைத்தனர். தனது டெல்லி பயணத்தின்போது குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளர்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் கருணாநிதி. இன்று காலை 10.30 மணிக்கு தமிழ்நாடு இல்லத்தில் முதல்வரை, விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் சந்தித்துப் பேசுகிறார். 11 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பிரகாஷ் காரத் சந்திக்கிறார். 12 மணிக்கு சோனியா காந்தியை அவரது இல்லத்தில் கருணாநிதி சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் வேட்பாளர்கள் குறித்து முக்கிய விவாதம் நடக்கிறது. குடியரசுத் துணைத் தலைவர் பதவியை திமுகவுக்கு அளிக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. அப்பொறுப்புக்கு அமைச்சர் அன்பழகனை திமுக நிறுத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதுகுறித்து இன்று முடிவு செய்யப்படும். மாலை 5.30 மணிக்கு மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் முதல்வரை சந்திக்கிறார். இரவு 7 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங்கை கருணாநிதி சந்தித்துப் பேசுகிறார். இரவு 8 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் ஏ.பி.பர்தான் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இதையடுத்து நாளை தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்று தமிழகத் திட்டங்கள் குறித்து பேசுகிறார். அதே போல உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் விபி சிங்கையும் சந்திக்கிறார். இதைத் தொடர்ந்து நாளையே தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு கருணாநிதி சென்னை திரும்புகிறார். |
Posted: 27 May 2007 10:40 PM CDT திருமண மண்டபத்தில், சினிமாவை மிஞ்சும் சம்பவம் நடந்து இருக்கிறது. "வேறு பெண்ணை கர்ப்பம் ஆக்கியவருடன் குடும்பம் நடத்த மாட்டேன்'' என்று கூறி, காலையில் கட்டிய தாலியை, மதியம் கழற்றி வீசினார், புது மணப்பெண். முழு செய்திக்கு "தினத்தந்தி்" |
அடக்குமுறைகள் தொடர்கின்றன: திருமாவளவன் Posted: 27 May 2007 10:45 PM CDT ஆளும் கூட்டணியில் இருந்தாலும் காவல்துறையினர் பொய் வழக்கு போடுவதும், அடக்குமுறைகளும் தொடர்கின்றன என்றார் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலர் தொல் திருமாவளவன். கொத்தடிமைகள் திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் கல்குவாரிகள், தறிப் பட்டறைகளில் தலித் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர். அரசு இதனைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி மாநகரில் சிறுத்தைகள் அமைப்பின் நிர்வாகிகள் மீது காவல்துறையினர் பொய் வழக்குகள் போடுகின்றனர். இதுதொடர்பாக மண்டல காவல் துறைத் தலைவரையும் மாநகர் காவல் ஆணையரையும் சந்திப்பேன். கரூர் மாவட்டம், தம்மாநாயக்கன்பட்டியில் தலித் மக்கள் நடைபாதையாக இருந்த பகுதி, பள்ளிக்கூடத்துக்கு சுற்றுச்சுவர் எழுப்புகிறோம் என்ற பெயரில் அடைக்கப்பட்டுள்ளது. தினமணி |
Posted: 27 May 2007 09:43 PM CDT அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 7ம் மாநாடு-2007 கடந்த 25ம் தேதி தொடங்கியது. அதன் நிறைவு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. இதில், முதல்வர் கருணாநிதிக்கு, உமறுபுலவர் விருது வழங்கப்பட்டது. மேடையில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவுடன் முதல்வர் பேசிக் கொண்டிருக்கிறார். நன்றி: "தினகரன்", "தினத்தந்தி" |
மலையாள மனோரமா பத்திரிகைக்கு சுற்றுச்சூழல் விருது Posted: 27 May 2007 10:31 PM CDT மலையாள மனோரமா பத்திரிகைக்கு 2004-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட உள்ளது. 2004-ம் ஆண்டு கேரளத்தில் கடும் வறட்சி நிலவியது. அப்போது நீர் சேகரிப்பு குறித்து 'பல துளி' என்ற பிரசாரத்தை மாநிலம் முழுவதும் மலையாள மனோரமா பத்திரிகை மேற்கொண்டது. இதை பாராட்டும் விதத்தில்தான் அப் பத்திரிகைக்கு இந்திரா காந்தி பர்யாவரண் (சுற்றுச்சூழல்) விருது மத்திய அரசினால் வழங்கப்பட உள்ளது. இந்த விருது சர்வதேச சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ம் தேதி வழங்கப்படும். தினமணி |
கலைஞர் டிவிக்கு "சிவாஜி' பட உரிமை Posted: 27 May 2007 10:23 PM CDT புதிதாக தொடங்கப்பட உள்ள 'கலைஞர் டிவி'க்கு, ரஜினி நடித்து வெளிவர உள்ள 'சிவாஜி' படத்தின் உரிமை வழங்கப்பட்டுள்ளது. 600-க்கும் மேற்பட்ட பிரிண்ட்கள்:'சிவாஜி' படத்தை தமிழகம் முழுவதும் திரையிட வசதியாக 600-க்கும் மேற்பட்ட பிரிண்ட்கள் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஜூன் 3-ம் தேதி 'கலைஞர் டிவி'க்கான அறிவிப்பு வெளியாகும் என்றும், ஆகஸ்ட் 15-ம் தேதி "டிவி' தொடங்கப்படும் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். 'டிவி' தொடக்க நாளான ஆகஸ்ட் 15-ம் தேதி, 'சிவாஜி' படம் "கலைஞர் டிவி'யில் ஒளிபரப்பாகும். தினமணி |
Posted: 27 May 2007 09:48 PM CDT நேற்று ஐஸ் வியாபாரி இன்று கோடீஸ்வரர் - உழைப்பால் உயர்ந்த சிங்கம் லூதியானா. மே 28: வெளிநாட்டில் வேலை வாய்ப்பை தேடி அலைவதே இன்றைய இளைஞர்கள் பலரின் லட்சியமாக உள்ளது. ஆனால், எந்த வேலை செய்தாலும், அதை தாயகத்தில் செய்து முன்னுக்கு வரவேண்டும் என்பதை பஞ்சாபி ஒருவர் நிருபித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் ராஜேந்தர் சிங் பசந்த். இன்று இவர் மிகப் பெரும் கோடீஸ்வரர். ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன் இவர், சைக்கிளில் ஐஸ் விற்ற வியாபாரி. இவரால் எப்படி கோடீஸ்வராக முடிந்தது? அவரே சொல்கிறார்: என் தந்தை, குல்பி ஐஸ் விற்கும் ஏழை வியாபாரியாக இருந்தார். என்னை படிக்க வைக்க கூட அவருக்கு வசதியில்லை. அதனால், குல்பி ஐஸ் விற்கும் தொழிலையே எனக்கும் கற்று கொடுத்தார். 1980ம் ஆண்டில் என் தந்தை இறந்தார். அது முதல் குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பும் என் மீது விழுந்தது. இதனால் முழு மூச்சில் குல்பி ஐஸ் தயாரித்து விற்கும் தொழிலில் ஈடுபட்டேன். அப்போது பஞ்சாபில் தீவிரவாதம் தலைவிரித்தாடிய காலம். லூதியானாவில் எப்போது ஊரடங்கு உத்தரவு இல்லாத நேரம் என்று கூற முடியாத நிலை. இரவு 8 மணிக்கு மேல் கடைகள் திறக்கப்படமாட்டாது. என்னை போல் சிறு வியாபாரிகள், எந்த வியாபாரமும் செய்ய முடியாது. ஒருநாள், சைக்கிளில் குல்பி ஐஸ் பெட்டியை வைத்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது, தினமும் என்னிடம் காசு கொடுக்காமல் மிரட்டி ஐஸ் வாங்கி சாப்பிடும் போலீஸ்காரர் ஒருவர் எதிரில் வந்தார். என்னிடம் ஐஸ் கொடுக்கும்படி கேட்டார். ஆனால், என்னிடம் ஐஸ் இல்லை. கோபம் தலைக்கேறிய நிலையில், அந்த போலீஸ்காரர், என் கண்ணத்தில் அறைந்துவிட்டு சென்று விட்டார். மன வேதனையுடன் வீட்டுக்கு திரும்பினேன். அப்போது வழியில், அதே போலீஸ்காரர், ஒரு அரசியல்வாதியிடம் மிகவும் பவ்யமாக, காலில் விழாத குறையாக வணக்கம் செலுத்துவதை பார்த்தேன். வாழ்க்கையில் பணமும் பதவியும் இருந்தால்தான் மதிப்புÕ என்பதை புரிந்துக் கொண்டேன். கடுமையாக உழைத்து வாழ்க்கையில் பணக்காரனாக வேண்டும் என்று உறுதி கொண்டேன். ஒய்வு என்று ஒரு நாள் கூட நான் இருந்ததில்லை. அதேநேரத்தில் பசந்த் குல்பி ஐஸ் தரமான ஐஸ் என்பதில் எந்த குறைவும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டேன். 24 மணி நேரமும் ஐஸ் வியாபாரம்தான் எனது பணியாக இருந்தது. படிப்படியாக பஞ்சாபின் பல பகுதிகளில் எனது ஐஸ் கம்பெனியின் கிளைகளை திறந்தேன். சைக்களில் ஐஸ் விற்க ஆரம்பித்த நான், பின்னர், வேன்களில் விற்க ஆரம்பித்தேன். இன்று வட மாநிலங்களில் எனது நிறுவனத்தின் கிளைகள் இல்லாத இடமே இல்லை. ஏன்? லண்டனில் கூட பசந்த் குல்பி ஐஸ் கடை திறந்துள்ளேன். இத்துடன் பஞ்சாபில் பல பகுதிகளில் ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் எனக்கு சொந்தம். சாதாரண ஐஸ் வியாபாரியாக இருந்த நான், இன்று கோடீஸ்வரனாக இருப்பதற்கு காரணம் கடும் உழைப்பை தவிர வேறு எதுவும் இல்லை. கடும் உழைப்பை என் தந்தை எனக்கு கற்று கொடுத்தார். இன்று என் குழந்தைகளுக்கு அதைதான் நான் சொல்லிக் கொடுக்கிறேன். இன்று இளைஞர்கள் பலருக்கு வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்பது கனவாக உள்ளது. பலர் வெளிநாடு செல்கிறார்கள். ஆனால், சாதிக்க முடிவதில்லை. கடும் உழைப்பை நம்பி எந்த தொழில் செய்தாலும் வெற்றிதான். அதில் நிச்சயம் தாயகத்திலேயே சாதிக்க முடியும் என்பதுதான் இளைஞர்களுக்கு என்னுடைய அறிவுரை. வாழ்க்கையில் முன்னுக்கு வர கனவு காணுங்கள். அதற்கு உழைப்பை மட்டும் நம்புங்கள். அதே நேரத்தில் எந்த சூழ்நிலையிலும் நேர்மையையும் ஓழுக்கத்தையும் கைவிட்டுவிடக் கூடாது. எந்த தொழில் செய்தாலும் நிச்சயம் முன்னுக்கு வர முடியும். நாமும் முன்னேறலாம். நாடும் முன்னேறும் என்று கூறுகிறார் ராஜேந்தர் சிங் பசந்த். நன்றி: "தினகரன்" |
You are subscribed to email updates from சற்றுமுன்... To stop receiving these emails, you may unsubscribe now. | Email Delivery powered by FeedBurner |
Inbox too full? Subscribe to the feed version of சற்றுமுன்... in a feed reader. | |
If you prefer to unsubscribe via postal mail, write to: சற்றுமுன்..., c/o FeedBurner, 549 W Randolph, Chicago IL USA 60661 |