Thursday, March 29, 2007

Satrumun Breaking News 29 March 2007

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

சற்றுமுன்:கோவையில் ஆடம்பர குடியிருப்புகளுக்கு அமோக வரவேற்பு

Posted: 29 Mar 2007 01:46 PM CDT

தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைகளை அளிக்கும் நிறுவனங்கள் கோயம்புத்தூரில் அதிகரித்து வருகின்றன. இதனையடுத்து `ஜவுளி நகரம்' கோயம்புத்தூரில் ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்கள் சிறப்பான செயல்பாட்டினைக் கண்டு வருகின்றன.

கோவையில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் நவீன தனி இல்லங்களுக்கான தேவைப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செலவிடும் பணத்திற்கு தகுந்த மதிப்பு உள்ளதால் இவற்றில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டுவதில்லை என்று இத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

"கடந்த இரண்டு ஆண்டுகளாக, உயர்தர குடியிருப்புகளை நிறுவுவதில் கோவை மாநகரம் சென்னை அண்ணா நகருக்கு இணையான வளர்ச்சியைக் கண்டு வருகிறது'' என்று பிரசீடியம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஹரி ஹேம்சந்த் குறிப்பிட்டார்.

தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, ஆபரணம், வார்ப்படம், பம்ப் செட் தொழிற்பிரிவுகள், இலகு ரக பொறியியல் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் மத்தியிலும், வங்கியாளர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியிலும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நல்ல தேவைப்பாடு உள்ளதாக கோவை ரியல் எஸ்டேட் துறையினர் கருத்து தெரிவித்தனர்.

- தினதந்தி, The Economic Times

சற்றுமுன்: இலங்கை கடற்படை தாக்குதல்: 4 மீனவர் பலி

Posted: 29 Mar 2007 01:34 PM CDT

இலங்கை கடற்படையினர் இன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 மீனவர்கள் பலியாகினர். 2 பேர் காயம் அடைந்தனர்.

இலங்கை கடல்எல்லையில் இந்திய மீனவர்கள் 6 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் 4 பேர் பலியாகினர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக கன்னியாகுமரிக்கு கொண்டுவரப்பட்டனர்.

இலங்கை கடற்படையினர் எவ்வித முன்எச்சரிக்கையும் விடுக்காமல், திடீர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

"Yahoo-Tamil"

சற்றுமுன்: எஐஐஎம்எஸ் வேணுகோபாலுக்கு எதிராக ஐகோர்ட் தீர்ப்பு

Posted: 29 Mar 2007 01:20 PM CDT

அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தின் (எஐஐஎம்எஸ்) இயக்குனர் வேணுகோபால் ஒரேநேரத்தில் இரு பதவிகளை வகிக்க முடியாது என்று டெல்லி ஐகோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது.

வேணுகோபால் எஐஐஎம்எஸ்-ன் இயக்குனராகவும், இருதய மருத்துவத்துறையின் பேராசிரியராகவும் ஒரே நேரத்தில் இரு பதவிகளை வகித்து வந்தார்.

இது தொடர்பான மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி சுவதந்திர குமார் மற்றும் நீதிபதி எச்.ஆர்.மல்ஹோத்ரா அடங்கியோர் பெஞ்ச், கல்வி நிறுவனத்தின் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டபின், இரு பதவிகளை வகிக்க முடியாது என்றும், பேராசிரியர் பதவியில் இருந்து வேணுகோபால் நீக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.


"Yahoo-Tamil"

சற்றுமுன்: FTVக்கு இந்திய அரசு தடை

Posted: 29 Mar 2007 10:24 AM CDT

ஆட்சேபத்துக்குரிய நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்காக F-TVயை இந்தியாவில் ஒளிபரப்புவதற்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடைவிதித்திருக்கிறது. இந்த தடை வரும் ஏப்ரல் 1 முதல் மே 31ம் தேதிவரை நீடிக்கும். இரண்டு மாதத்திற்கு முன்பு மற்றொரு ஆங்கில சேனலான AXNனும் இதே காரணத்திற்காக தடை செய்யப்பட்டு பின்னர் அந்த சேனல் மன்னிப்பு கேட்டபின் தடை விலக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

சற்றுமுன்: இரான், இங்கிலாந்து பிரச்சனை வலுக்கிறது

Posted: 29 Mar 2007 10:07 AM CDT

15 இங்கிலாந்து கடற்படை வீரர்கள் இரானால் கைது செய்யப்பட்டுள்ளது குறித்தான பிரச்சனை மேலும் மேலும் வலுக்கிறது.

நேற்று இங்கிலாந்து கடற்படை வீரர்கள் இரானின் கடல் எல்லைக்குள் நுழழயவில்லை என தன் பக்க ஆதாரங்களை அறிவித்தது. அதே நேரம் இரான் கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணை தொலைக் காட்சி பேட்டியில் காண்பித்தது அப்போது அவர் தாங்கள் ககது செய்யப்படும்போது இரானின் கடல் எல்லைக்குள் இருந்ததாக ஒப்புக்கொண்டார்.

இந்தப் பேட்டிக்கு இங்கிலாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இருப்பினும் இந்தப் பெண்கைதி விடுவிக்கப் படுவார் என எதிர் பார்ப்பிருந்தது. இன்று செய்தியின்படி இரான் கைதிகளை விடுவிப்பதை தள்ளிப்போட்டுள்ளது.

இங்கிலாந்து இரானை தனிமைப்படுத்தும்படி உலக நாடுகளுக்கு இன்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

தொடர்புள்ள சுட்டிகள்

Full story: Google news
சற்றுமுன்:15 இங்கிலாந்து கடற்படை வீரர்களை ஈரான் கைதுசெய்துள்ளது
Iran delays sailor's release, UK seeks support
Iran says may not release British woman
Britons entered Iranian waters several times-Iran
Britain seeks UN condemnation of Iran
Iran says stop making 'fuss'
Pressure from London will hinder release of female sailor

ஒரகடத்தில் டிரக் தொழிற்சாலை :ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Posted: 29 Mar 2007 09:31 AM CDT

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும் புதூர் அருகே ஒரகடத்தில் 60 ஏக்கர் பரப்பில் ரூ.75 கோடி முதலீட்டில் உயர்ரக டிரக்குகளை தயாரிக்கும் புதிய கனரக வாகன தொழிற்சாலை ஒன்றை அமைத்துள்ளது.

இந்த தொழிற்சாலையின் செயல்பாடுகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதனை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் பல்வேறு தொழிற் சாலைகளை தொடங்க முதலமைச்சர் அனுமதி வழங்கி மாநிலத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்கிறார். இதுவரை 10 பெரிய நிறுவனங்கள் தொழில் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் போக்குவரத்து உள்ளிட்ட எல்லா உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. இதன் காரணமாக பல்வேறு புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படுகிறது.


"மாலைச் சுடர்"

சட்டசபைக்கு செல்லாதது ஏன்? ஜெயலலிதா

Posted: 29 Mar 2007 09:18 AM CDT

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் பட்ஜெட் விவாதம் குறித்து எனது கருத்தை சட்டசபையில் பேச வேண்டும் என்று விருப்பம் இருந்தது. ஆனால் சபாநாயகர் அதற்கு நேரம் ஒதுக்கி எனது பேச்சுக்கு இடையே இடையுறு செய்யாமல் பார்த்துக் கொண்டால், முதல்-அமைச்சரின் பதிலை வாங்கி தருவதாக இருந்தால் பேசலாம்.

அ.தி.மு.க. ஆட்சியின் போது அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் போதிய நேரம் ஒதுக்கப்பட்டது. சபை விதிகள்படி அவர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டன.இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் அ.தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச போதுமான நேரம் ஒதுக்கவில்லை.

நான் பேச வந்தாலும் இதுதான் நடக்கும். இடையுறு செய்வார்கள், அவ மதிப்பார்கள், மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவார்கள்.எனவேதான் நான் சட்டசபையில் பட்ஜெட் உரையில் பேசவில்லை. அதே நேரத்தில் நான் பேச வேண்டிய கருத்துக்களை இந்த அறிக்கை மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி கொள்கிறேன்.

- மாலை மலர்

பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு ஏப். 1ல் பாராட்டு விழா

Posted: 29 Mar 2007 09:09 AM CDT


விழா ஒருங்கிணைப்பு குழு தலைவர் வில்லியம் மோசஸ், உறுப்பினர்கள் ஜர்னெய்ல் சிங், பஷீர் அகமது ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

தொழிலதிபர் மகாலிங்கத்துக்கு பத்மபூஷன் விருது அளித்து கவுரவித்து உள்ளது. இவருக்கு பாராட்டு விழா கோவை அவிநாசி சாலை எஸ்.என்.ஆர் கலையரங்கில் ஏப்ரல் 1ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடக்கிறது.

இந்த விழாவில் மதநல்லிணக்கத்தை பேணும் விதமாக அனைத்து மதத்தினர் பங்கேற்கின்றனர். தொழில், வர்த்தகம், கல்வித்துறையினர் பலர் பங்கேற்கின்றனர்.


- மாலை முரசு

உலக ஒற்றுமைக்கு வன கிராம கோயில்களில் பொங்கல்

Posted: 29 Mar 2007 09:00 AM CDT

தொண்டாமுத்தூர், மார்ச் 29-


கோவையை அடுத்த சிறுவாணி அடிவாரம் சாடிவயல்பதி உச்சி மாரியம்மன் கோயில், முள்ளாங்காடு மாரியம்மன் கோயில்களில் பங்குனி மாதத் திருவிழா கொண்டாடப்பட்டது. சீங்கப்பதி, தொட்டப்பதி, வெள்ளப்பதி, சர்க்கார் போரேட்டி, ஜாகீர்போரேட்டி, கல்கொத்திபதி, தானிகண்டி ஆகிய வனக்கிராமங்களை சேர்ந்த மலைவாசிகள் கலந்து கொண்டனர்.

அம்மனுக்கு கிடா வெட்டி பொங்கல் வைத்தனர்.அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது. விழாவையட்டி தினமும் மாலை மலைவாசிகளின் ஆடல், பாடல் நடனம் நடந்தது.

மழை வேண்டியும், உடல் நலன் ஆரோக்கியமாக இருக்கவும், உலக ஒற்றுமை வலியுறுத்தியும், வனவிலங்குகளிடம் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவும் இந்த விழா நடத்தப்படுகிறது. இன்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. மலைவாசிகள் மஞ்சள் நீராடினர்.

திருமண மண்டபத்தை இடிக்க 5 மாத அவகாசம் வேணும்:விஜயகாந்த் மனைவி

Posted: 29 Mar 2007 08:48 AM CDT

ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தின் நிர்வாக இயக்குனரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோயம்பேட்டில் மேம்பாலம் அமைக்க எங்களுக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தை மத்திய அரசு ஆர்ஜிதம் செய்துள்ளது. இதை எதிர்த்து நாங்கள் தொடர்ந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டது.

மண்டபத்தை காலி செய்து மார்ச் 26-ம் தேதி தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோர்ட் கெடு விதித்தது. இந்த கெடுவை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். திருமண நிகழ்ச்சிக்கு எங்கள் மண்டத்தில் பலர் பணம் கொடுத்து முன்பதிவு செய்துள்ளனர். எனவே, ஆகஸ்ட் வரை கெடுவை நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் பிரேமலதா கூறியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி முருகேசன் ஆகியோர் முன் நாளை விசாரணைக்கு வருகிறது. இதில் மத்திய அரசு சார்பாக உதவி சொலிசிட்டர் ஜெனரல் வில்சன் ஆஜராகிறார்.

- மாலை முரசு

கட்டாய தமிழ் சுமையாக இருக்காது

Posted: 29 Mar 2007 08:37 AM CDT

தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் தமிழை கட்டாயமாக சொல்லி தரவேண்டும் என தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் விடுதலை ஆஜரானார். ஒன்றாம் வகுப்பு முதல் கட்டாய தமிழ் கொண்டு வருவது மாணவர்களுக்கு சுமையாக இருக்காது. கர்நாடகாவில் 3ம் வகுப்பில் இருந்தும், மகாராஷ்டிராவில் 5ம் வகுப்பில் இருந்தும் தாய்மொழி கட்டாய பாடமாக வைக்கப்பட்டுள்ளது. அது சரியானது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

- மாலை முரசு

கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது

Posted: 29 Mar 2007 08:10 AM CDT


சினிமா மற்றும் கலைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பான எப்.ஐ.சி.சி.ஐ வழங்கியது. மும்பையில் நேற்று இரவு நடந்த நிகழ்ச்சியில் விருதுடன் நடிகர் கமல்ஹாசன், இந்தி நடிகை ரேகா.

இராமநாதபுரத்தில் 8 ராடர்கள்:முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா அமைத்தது.

Posted: 29 Mar 2007 06:54 AM CDT

கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் முதலாவதாக நடத்திய விமானத் தாக்குதலையடுத்து வான் பரப்பை கண்காணிப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 8 ராடர்களை இந்திய விமானப் படையினர் பொருத்தியுள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு: www.thinakural.com

சற்றுமுன்: 27 இடஒதுக்கீடுக்கு இடைக்காலத் தடை

Posted: 29 Mar 2007 03:02 AM CDT

டெல்லி: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
எனவே நாட்டில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கணக்கு குறித்து உரிய ஆவணங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அதைத் தாக்கல் செய்த பின்னரே இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிக்கப்படும். அதுவரை இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தங்களது இடைக்கால உத்தரவில் தெரிவித்திருந்தனர்.

மேலதிக தகவல்களுக்கு

Links for 2007-03-28 [del.icio.us]

Posted: 29 Mar 2007 12:00 AM CDT

பள்ளிப் பேருந்து மனிலாவில் பிணை - சுபம்

Posted: 28 Mar 2007 09:11 PM CDT

மணிலாவில் 33 சிறார்களையும் இரு ஆசிரியர்களையும் பிணையாக வைத்திருந்த சம்பவம், எவ்வித அசம்பாவிதமும் இன்றி முடிவுக்கு வந்தது. ஏழை மாணவர்களுக்கு கல்வி கோரி, இதை அரங்கேற்றியதாக 56 வயது யூன் (Jun Ducat) தெரிவித்தார்.

The Standard - China's Business Newspaper: "A man who took a busload of children and teachers hostage from his day-care center in Manila Wednesday freed them after a 10-hour standoff during which he denounced corruption and demanded better lives for poor children."