Satrumun Breaking News
Satrumun Breaking News |
ச:பெடரெர், பயிற்சியாளர் பிரிவு Posted: 12 May 2007 05:35 PM CDT டென்னிஸ் வீரர் ராஜர் பெடரெரும் அவரின் பயிற்சியாளர் டோனி ரோச்சும் பிரிந்தனர். ரோம் மாஸ்டர் தொடரில் பெடரெர் தோல்வி அடைந்ததை அடுத்து இந்த முடிவு 'பரஸ்பர ஒப்பந்தத்தோடு' நடைபெற்றதாகவும் எதிர்வரும் ப்ரெஞ்ச் ஓப்பனுக்கு முன்பாக இவ்வாறு நிகழ்ந்ததில் பெரெடர் அதிர்ச்சியில் இருப்பதாகவும் தெரிகிறது. Federer in shock split from coach BBC |
ச:கிரிக்கெட்:இந்தியா ஒருநாள் தொடரை வென்றது Posted: 12 May 2007 06:20 AM CDT இந்தியா 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டியை வென்று ஆட்டதொடரை கைப்பற்றியுள்ளது. 285 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய பங்களாதேசம் கொடுக்கப்பட்ட 49 ஓவர்களில் 238/9 ஓட்டங்களையே பெறமுடிந்தது. அந்த அணியின் அதிக ஓட்டங்களை எடுத்த பந்தாட்ட வீரர் பாஷர் 43 ஓட்டங்களே எடுத்தார். இந்திய அணியின் புதுமுகமாக இந்த ஆட்டத்தில் சேர்ந்த சாவ்லா தனது சுழல்பந்து வீச்சால் மூன்று விக்கெட்களை 37 ஓட்டங்கள் கொடுத்து வீழ்த்தியதும் துவக்க ஆட்டக்காரர் கம்பீரின் சதமும் இந்திய வெற்றிக்கு பின்கலமாக அமைந்தன. |
ச:விசாகப்பட்டிணம்: தவறான ஓடுபாதையில் தரையிறங்கியது விமானம் Posted: 12 May 2007 06:17 AM CDT பாரமௌன்ட் ஏர்வேஸின் விமானம் ஒன்று விசாகப்பட்டினம் விமானநிலையத்தில் இன்னும் பணிக்குவராத ஓடுதளத்தில் 70 பயணிகளுடன் தரையிறங்கியதில் விமான ஓட்டியால் கட்டுப்படுத்தமுடியாமல் ஓடுபாதையை தாண்டி புதர்களில் முட்டி நின்றது. அனைத்துப் பயணிகளும் நலமென்று ATC பட்டாபி கூறினார். இதனால் இந்தியன், ஏர்சஹாரா மற்றும் ஏர் டெக்கான் விமானசேவைகளும் பாதிக்கப் பட்டன. The Hindu News Update Service |
சற்றுமுன்: சென்னையில் 300 மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கைது Posted: 12 May 2007 05:48 AM CDT மதுரையில் அரசியல் ரவுடிகளால்.. படுகொலை செய்யப்பட்ட தினகரன் பத்திரிக்கை ஊழியர்களின் படுகொலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யக்கூறி.. தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பட்டம் நடத்தியது. மைலாப்பூர், கச்சேரி சாலை முழுவதும் காவல் துறையினரின் தலலகளே அதிகம் காணப்பட்டன. அந்த வழி போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சென்னை தினகரன் பத்திரிக்கை அலுவலகம் வாசலில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னூறுக்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டார்கள். கோஷம் போட்டுக்கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களை கைது செய்து நான்கிற்கும் மேற்பட்ட வண்டியில் அழைத்துச்செல்லப்பட்டனர். மந்தைவெளியில் இருக்கும் ஒரு கல்யாணமண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மாலையில் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. |
ச: உ.பி முதல்வராக மாயவதி தேர்ந்தெடுக்கப் பட்டார் Posted: 12 May 2007 06:03 AM CDT இன்று நடந்த தேர்ந்தெடுக்கப் பட்ட பிஎஸ்பி கட்சி எம் எல் ஏக்கள் கூட்டத்தில் மாயாவதி அக்கட்சியின் பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். அவரது பெயரை இந்திரஜித் சரோஜ் முன்மொழிய கட்சி மாநிலத்தலைவர் லால்ஜி வர்மா வழிமொழிந்தார். அவர் மாநில ஆளுநரை இன்று சந்தித்து நாளை பதவி ஏற்பார் என நம்பப்படுகிறது. The Hindu News Update Service |
ச: கராச்சி வன்முறையில் 14 பேர் மரணம் Posted: 12 May 2007 05:48 AM CDT பணிநீக்கம் செய்யப்பட்ட உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி சௌத்திரியின் ஆதரவாளர்களுக்கும் அதிபர் முஷ்ராப்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதல்களில் 14 பேர் வரை மரணித்திருக்கலாம் என பிடிஐ செய்தியொன்று கூறுகிறது. தலைமை நீதிபதி மக்கள் பேரணியை அடைந்தபோது இருதரப்பினரும் ஒருவரையொருவர் சுட்டுக் கொண்டதில் இவ்வாறு நிகழ்ந்துள்ளது. இது பாகிஸ்தானின் அரசியல் பிரச்சினையை மேலும் தீவிரமாக்குகிறது. ் Deccan Herald - 14 killed in clashes in Karachi |
Posted: 12 May 2007 05:28 AM CDT நடிகர் மம்முட்டி இதுவரை எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு தெரிவித்தது கிடையாது. ஆனால் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி டி.வி. சேனல் திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகர் மம்முட்டி அதன் சேர்மனாகவும் இருந்து வருகிறார். அதே சமயம் மம்முட்டியின் சகோதரர் முஸ்லிம் லீக்கட்சியின் முக்கிய பிரமுகர் ஆவார். இவர் தேர்தல்களில் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவர். இந்த நிலையில் நடிகர் மம்முட்டிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மேல்சபை எம்.பி. பதவி வழங்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் சென்னையில் மார்க்சிஸ்ட் கமயூனிஸ்டு கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாட்டில் கலந்து கொண்டு மம்முட்டி பேசிய போது குஜராத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இருந்திருந்தால் அங்கு இனக்கலவரம் நடந்திருக்காது என பேசினார். மம்முட்டியின் இந்த பேச்சுக்கு பாரதீய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பான யுவமோர்ச்சா தொண்டர்கள் மம்முட்டியின் உருவ பொம்மையை எரித்தனர். இப்பிரச்சினை இத்துடன் முடியாமல் நடிகர் மம்முட்டிக்கு ஆதரவாக ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தெருக்களில் ஊர்வலமாக வந்து அவருக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பினர். இது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாரதீய ஜனதா தொண்டர்கள் நடிகர் மம்முட்டிக்கு எதிராக செயல்பட்டு வரும் சூழ்நிலை யில் வருகிற ஜுலை மாதம் நடைபெற உள்ள மேல்சபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் மம்முட்டியை எம்.பி.யாக தேர்ந்தெடுக்க அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாலைமலர் |
ச: டென்னிஸ்:ரோம் மாஸ்டர்ஸ்: பயஸ்-தாம் ஜோடி அரையிறுதியில் Posted: 12 May 2007 02:59 AM CDT ரோம்மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் மூன்றாவதாக தரவரிசையில் உள்ள இந்திய-செக்கோஸ்லோவாகியா ஜோடியான பெயஸ் தாம் ஜோடி 6-4,6-3 என்ற கணக்கில் உரோமானிய அண்ட்ரே பாவல், ஜெர்மானிய அலெக்ஸாண்டர் வாஸ்கே ஜோடியை வென்று பொட்டியின் அரை இறுதிக்கு சென்றனர். இந்த சுற்றுவரை இந்த ஜோடி விளையாடாமலே போட்டியாளர்களின் விட்டுக் கொடுத்தலினால் வென்று வந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. விவரங்களுக்கு..The Hindu News Update Service |
ச: கிரிக்கெட்: பங்களாதேசத்திற்கு வெற்றி இலக்கு 285 Posted: 12 May 2007 02:30 AM CDT மழையினால் அரைமணிநேரம் தாமதமாக துவங்கிய இன்றைய ஆட்டத்தில் டாஸ் கெலித்து முதலில் ஆடத்துவங்கிய இந்தியா நிர்ணயிக்கப் பட்ட 49 ஓவர்களில் 284/8 ஓட்டங்கள் எடுத்தனர். 113 பந்துகளில் 101 ஓட்டங்கள் எடுத்து துவக்க ஆட்டக்காரர் கம்பீர் ஆட்டத்திற்கு நல்ல அடிக்கலிட்டார். அணித்தலைவர் ராகுல் திராவிட் 42 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இழந்தார். பங்களாதேசத்தின் ரஃபீக் மூன்று விக்கெட்களை 59 ஓட்டங்களைக் கொடுத்து வீழ்த்தினார். ரசல் இரண்டு விக்கெட்களையும் ரசாக் இரண்டு விக்கெட்களையும் மொர்டாசா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். |
ச: ஒரிசாவில் போஸ்கோ நிறுவனபிணைக்கைதிகளை விடுவித்தனர் Posted: 12 May 2007 02:27 AM CDT ஒரிசாவில் போஸ்கோ நிறுவனத்தின் அலுமினியம் தொழிற்சாலை அமைக்க நில கையகப்படுத்த சென்ற நிறுவன ஊழியர்களை நேற்று பிணையாக பிடித்து வைத்திருந்த கிராமத்தினர் இன்று அந்நிறுவனத்தின் தலைவரின் வாக்கை அடுத்து விடுவித்தனர். முன்னதாக மூவரில் பெண் ஊழியரை நேற்றே விடுதலை செய்து விட்டனர். போஸ்கோ தலைவர் கிம் 'இனி நாங்கள் அந்தக் கிராமத்திற்கு வரமாட்டோம'் என உறுதிமொழி கொடுத்ததாக போராட்ட சமிதியின் தலைவர் அபய் சாஹு கூறினார். POSCO officials released by agitators |
Links for 2007-05-11 [del.icio.us] Posted: 12 May 2007 12:00 AM CDT |
ச: திமுகவில் மோதல் வலுக்கிறது: Posted: 11 May 2007 10:52 PM CDT பேரவையில் 50 ஆண்டுகள் பணியாற்றியதற்காக முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் திமுக வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். ஆனால் கருணாநிதியின் பேரனான மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மட்டும் பங்கேற்கவில்லை. மாலையில் பிரதமரை வரவேற்க விமான நிலையத்துக்கு வந்திருந்த தயாநிதி மாறன் சென்னை தீவுத் திடலில் நடந்த பொன் விழா பொதுக்கூட்டத்துக்கும் வரவில்லை. மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தயாநிதி மாறனை நீக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியைத் திமுகவினர் சிலர் வலியுறுத்துவதாகத் தெரிகிறது. தயாநிதி மாறனின் மத்திய அமைச்சர் பதவி குறித்து அடுத்த வாரம் முதல்வர் கருணாநிதி முடிவு செய்வார் என்று திமுக தலைவர்கள் சிலர் தெரிவித்தனர். சென்னை தீவுத் திடலில் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவை நேரடியாக ஒளிபரப்பும் உரிமை சன் டிவிக்கு மறுக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் ராஜ் டிவிக்கு அந்த உரிமை வழங்கப்பட்டிருப்பதும் முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது. |
You are subscribed to email updates from சற்றுமுன்... To stop receiving these emails, you may unsubscribe now. | Email Delivery powered by FeedBurner |
Inbox too full? Subscribe to the feed version of சற்றுமுன்... in a feed reader. | |
If you prefer to unsubscribe via postal mail, write to: சற்றுமுன்..., c/o FeedBurner, 549 W Randolph, Chicago IL USA 60661 |