Saturday, March 31, 2007

Satrumun Breaking News 31 March 2007

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

சற்றுமுன்: இன்சமாம் குமுறல் பேட்டி- இந்தியா, பாக் வீரர்கள் பரிதாபம்

Posted: 31 Mar 2007 08:41 PM CDT

"விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். ஆனால் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும்தான் விளையாட்டு வீரர்கள் பீதியுடன் வாழ வேண்டிய அவலமான நிலை இருக்கிறது என்று இன்சமாம் உல் ஹக் கூறினார்.

லாகூரில் நிருபர்களிடம் நேற்று இன்சமாம் கூறியதாவது:

உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடுவோம் என்று நம்பினேன். ஆனால், தோற்று விட்டோம். எனக்கும் அதிர்ச்சிதான். கேப்டன் என்ற முறையில் தோல்விக்கு பொறுப்பேற்கிறேன். ஆனால், சோதனையான நேரத்தில் ஆதரவாக இருக்க வேண்டிய பத்திரிகைகளும், டிவி சேனல்களும், பாகிஸ்தான் அணியை கிழிகிழியென்று விமர்சிப்பது அநியாயம். இரண்டு போட்டிகளில் தோற்றதால் நாங்கள் பாகிஸ்தானியர் இல்லை என்று ஆகிவிடுமா? பாகிஸ்தான் கிரிக்கெட்டில் எது நடந்தாலும் அதற்கு இன்சமாம்தான் பொறுப்பு என்று பத்திரிகைகள் எழுதுவது வழக்கமாகிவிட்டது.

உலகக்கோப்பையில் தோற்றதால் பாகிஸ்தானில் கிரிக்கெட் அழிந்துவிடாது. திறமையான வீரர்கள் நிறைய இருக்கிறார்கள். மீண்டும் வலுவான அணியாக வரலாம்.

விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். உலகத்தில் எல்லா நாட்டு மக்களுக்கும் இது புரிகிறது. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மட்டும்தான் மக்களுக்கு தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை.

- தினகரன்

சற்றுமுன்: ரிசர்வ் வங்கி வட்டி அதிகரிப்பு -வங்கி கடன்கள் வட்டி எகிறும்

Posted: 31 Mar 2007 08:28 PM CDT

வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்க நினைப்பவருக்கு இன்றைய தேதி உண்மையிலேயே ஒரு ஏமாற்ற தினமாகத்தான் இருக்கக்கூடும். ஆம். ஒரே நேரத்தில் வங்கிகளின் ரெப்போ வட்டி விகிதத்தையும், ரொக்க கையிருப்பு விகிதத்தையும் (சிஆர்ஆர்) ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது.

ரிசர்வ் வங்கியிடம் ஒவ்வொரு வங்கியும் முதலீடு செய்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதம் சிஆர்ஆர். இதேபோல, வர்த்தகத்துக்காக ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் பெறும் கடன் தொகை மீதான வட்டி ரெப்போ விகிதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டையும் பொருளாதார சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்கும் அதிகாரம் ரிசர்வ் வங்கிக்கு உண்டு.

இந்த நிதி ஆண்டில் பணவீக்க விகிதத்தை 5 முதல் 5.5 சதவீதத்துக்குள் வைத்திருக்க ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், உணவுப் பொருட்கள், வீடு, மனை உட்பட பலவற்றின் விலை கடந்த சில மாதங்களாக கட்டுக்கு அடங்காமல் உயர்ந்து வருகின்றன. இதனால் பணவீக்க விகிதம் 6.46 சதவீதமாக உள்ளது.

எனவே, அதைக் கட்டுப்படுத்த வங்கிகளின் ரொக்க இருப்பதை அதிகரிக்கும் வகையில் சிஆர்ஆர் விகிதத்தை ரிசர்வ் வங்கி இப்போதுள்ள 6.25ல் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இது இந்த மாதம் 14 முதல் 28ம் தேதி வரை இரு கட்டங்களாக நடைமுறைக்கு வரும்.

இந்த நடவடிக்கையால் அதிர்ந்துள்ள வங்கிகளை மேலும் அதிரச் செய்யும் வகையில் ரெப்போ விகிதமும் கால் சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ரிசர்வ் வங்கிக்கு வங்கிகள் ஆயிரக்கணக்கான கோடி வட்டியை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.

அத்துடன், சிஆர்ஆர் அதிகரிப்பால் வங்கிகளின் ரூ.15,500 கோடி கூடுதல் வர்த்தக தொகை ரிசர்வ் வங்கி வசமாகி விடும். எனவே, அவற்றைக் கடனாக அளிப்பதன்மூலம் கிடைக்க வாய்ப்புள்ள ரூ.1,600 கோடி வட்டியை வங்கிகள் இழக்க நேரிடும். மொத்தமாக வங்கிகளிடம் இருந்து சுமார் 17,000 கோடி ரிசர்வ் வங்கிக்கு கைமாறும்.

இதனால், கடன் அளிப்பதற்கான வங்கிகளின் நிதி வரம்பு மேலும் கட்டுப்படுத்தப்படும். அதிக வருமானம் ஈட்ட வேறுவழியின்றி வீடு, வாகன, தனிநபர் கடன் வட்டிகளை வங்கிகள் மீண்டும் கடுமையாக உயர்த்தத் தொடங்கி விட்டன

- தினகரன்

சற்றுமுன்: ஷேன்வார்னே தனது மனைவியுடன் மீன்டும் சேர்ந்தார்

Posted: 31 Mar 2007 08:20 PM CDT


ஷேன்வார்னே பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டதாக கூறி பிரிந்து இருந்த அவருடைய மனைவி மீன்டும் அவர்களுடைய குழந்தைகளுடன் ஒன்றாக இனைந்தனர்.

ஷேன்வார்னே தனது குடும்பத்துடன் இங்கிலாந்தில் குடியேறப்போகிறார்.



"மேலும் செய்திக்கு"

சற்றுமுன்: அர்ஜுன் சிங் கார் மீது பாட்டில் வீச்சு

Posted: 31 Mar 2007 08:12 PM CDT

இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள் மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங் கார் மீது தண்ணீர் பாட்டில்களை வீசி ரகளை செய்தனர்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் முதலாம் சுதந்திர போராட்டத்தின் (1857) 150வது ஆண்டு விழாவை யட்டி நேற்று கருத்தரங்கு நடந்தது. அதில் சிறப்புரை ஆற்ற மத்திய அமைச்சர் அர்ஜுன்சிங் வந்தார். கருத்தரங்கில் அர்ஜுன்சிங் பேச தொடங்கியதும் 50 மாணவர்கள் எழுந்து அவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டினர். சமத்துவ இளைஞர்கள் என்ற அமைப்பை சேர்ந்த அவர்கள் கறுப்பு பாட்ஜ் அணிந்து இருந்தனர். "இடஒதுக்கீட்டை புகுத்தி மாணவர்களை பிரிக்காதே! அர்ஜுன்சிங்கே பதவியை ராஜினாமா செய்! என்று கோஷம் எழுப்பினர்.

நிகழ்ச்சி முடிந்து அர்ஜுன்சிங் காரில் ஏறி புறப்பட்ட போது அதே மாணவர்கள் கார் முன் திரண்டு ரகளை செய்தனர். இந்த சம்பவம் பற்றி அர்ஜுன்சிங்கிடம் கேட்டதற்கு, இளைஞர்களின் உணர்ச்சிகளை மதிக்கிறேன். அதே சமயம் நவீன இந்தியாவை உருவாக்குவதில் ஒவ்வொரு குடிமகனின் பங்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் முழுமையான சக்தியை இந்தியா பெற முடியும என்றார்.

தினகரன்

சற்றுமுன்: கண்துடைப்பு?- கருணாநிதி கண்டனம்

Posted: 31 Mar 2007 10:37 AM CDT

முதல்-அமைச்சர் கருணா நிதி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-

திராவிட இயக்கத்தின் ஆரம்பகாலக் கொள்கையாக இருந்து வருகிற இட ஒதுக்கீடு கொள்கைக்காக ஒரு அமைதி கிளர்ச்சியாக வேலை நிறுத்தம் செய்வதாக வேண்டுகோள் விடுத்து, அறிவிப்பு செய்துள்ளது வெறும் கண்துடைப்பு என்று ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்து, அது இட ஒதுக்கீடு எதிர்ப்பு ஏடுகளில் முதல் பக்கத்தை அலங்கரித்திருக்கிறது.

ஜெயலலிதாவின் வழியி லேயே அவரது சகோதரர் விடுத்துள்ள அறிக்கையிலே பொது வேலை நிறுத்தத்தை வேலை நாளில் அறிவிக்காமல் விடுமுறைநாளான சனிக் கிழமை நடத்துவது ஏமாற்று வேலை என்கிறார். சேராத இடம் தனில் சேர்ந்ததால் எப் படி பட்ட நிலைக்கு அவர் ஆளாகி விட்டார்ப சமூக நீதி உணர்வு குருதியோடு ஓடு பவர்களுக்கு எதிர்ப்பினை எவ்வளவு விரைவிலே காட்டவேண்டும் என்பதில் தான் எண்ணம் செல்லும். சனிக்கிழமைகளில் ரெயில்கள் ஒடுவதில்லையாப

நம்மை அவ மானப்படுத்தினாலும் நாட்டு நலனுக்காக மானத்தைக்கூட பெரிதுபடுத்தாமல் ஒத்துப் போவது நல்லது என்ற அடிப்படையில் நாம் அனுப் பிய அழைப்பைக்கூட லட்சி யம் செய்யாதவர்களுக்கு இந்தியாவில் உள்ள நம் மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளில் எக்கேடு கெட்டால் என்ன- ஆதிக்க புரியினர், அமோக வாழ்வு பெற்றால் அது ஒன்றே நமக்கு சொர்க்கம் என்று மனப்பால் குடித்துக் கொண்டு வாழுபவர் ஒன்றுகூடி நடத்தும் சதியில் வெற்றி பெறலாம் எனக் கனவு காண்கிறார்கள்.

கண்துடைப்பாம் கண் துடைப்பு! உடன்பிறப்பே இது கண்துடைப்பு அல்ல, கண்ணீர் உடைப்பு! இந்தக் கண்ணீர் அடக்கமுடியாமல் அடித்தட்டு மக்கள் புழுக் களாய்த் தேரைகளாய் பொட் டுப்பூச்சிகளாய் மடிந்து போகாமல்-புரட்சிக்குரல் எழுப்ப எழுந்திடும் உரிமைப் போர்ப்படையின் மீது காரி உமிழ்வது போல இந்தப் பெண் மணியார் கண்துடைப்பு என் கிறாரே, இதுவும் நாம் எதிர் பார்த்தது தான் நாகத்திடம் நச்சுப்பல்லையும், இவர் போன்றோரிடம் நாச காலச் சொல்லையும் தானே எதிர் பார்க்க முடியும்


"மேலும் செய்திக்கு மாலை மலர்"

சற்றுமுன்: சிவாஜி பட ரிலீஸ் பற்றி டி.ஆர் கருத்து

Posted: 31 Mar 2007 10:31 AM CDT

நெல்லையில் நடைபெற்ற தனது 'லட்சிய தி.மு.க கூட்டத்தில் பேசிய விஜய டி.ராஜேந்தர் 'சிவாஜி படத்துக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு.

அந்த பட ரிலீஸ் போது திரையரங்குகளில் டிக்கட்கள் அரசு நிர்ணயம் செய்ததைவிட அதிக விலைக்கு விற்கப்பட்டால் தன் கட்சி சார்பில் போராடுவோம் என்கிறார்.அத்துடன் காவிரி பிரச்சனையில் ராஜினி மௌனம் சாதித்ததையும் சாடுகிறார்.தமிழகத்தில் சம்பாதித்து கர்நாடகத்தில் சொத்து வாங்கும் அவர் படத்துக்கு டிக்கெட் விலை ஏற்றினால் நான் சும்மா இருக்க மாட்டேன்.அரசாங்க கொள்கைகளில் தனி மனிதர்களுக்கு விலக்கு அளிக்க முற்பட்டால் விடமாட்டேன் என்றும் கூறுகிறார்

சற்றுமுன்: திருநங்கைகளும் மனிதர்கள் - லிவிங் ஸ்மைல் வித்யா

Posted: 31 Mar 2007 10:23 AM CDT

தமிழக அரசு அண்மையில் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. திருநங்கைகள் எனப்படும் அரவாணிகள் பாலின மாற்று அறுவைச் சிகிச்சைகளை அரசு மருத்துவனனைகளிலேயே செய்து கொள்ளலாம்.அண்மையில் சென்னையில் நடந்த பாலின சிறுபான்மை மாநாட்டில் 'லிவிங் ஸ்மைல் வித்யாவால் வைக்கப் பட்ட கோரிக்கையும்,மதுரை உயர் நீதிமன்றத்தில்ல் 'சரவணன்' என்ற தன் பேரை லிவிங் ஸ்மைல் வித்யா' வாக மாற்ற போடப்பட்ட வழக்கும் அரசின் இந்த உத்தரவுக்கு காரணங்கள்.
தமிழக முதல்வருக்கு நன்றி சொன்ன வித்யா சொன்னவை:பாலின் மாற்று அறுவைச் சிகிச்சை எங்கள் மொழியில் நிர்வாணம் செய்வது எனப்படும்.
இதற்கு 15000 முதல் 20000வரை செலவாகும்.இந்த தொகையைச் சேமிக்கவே திருநங்கைகள் பிச்சை எடுப்பது,விபச்சாரம் போன்ற தொழில் செய்கின்றனர்.
நான் இதைச் செய்ய வேண்டி வடமாநிலங்களில் ஒருவருடம் பிச்சை எடுத்தேன்.இப்போது இந்த சிகிச்சையை இலவசமாக அரசு மருத்துவமானைகளில் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு சொல்லியிருக்கிறது.ஒரு திருநங்கை பேங்க் அக்காவுன்ட்,டிரைவிங் லைசன்ஸ்,ரேஷன் கார்டு,பாஸ்போர்ட்,வாக்காளர் அட்டை ,செல்போன் இணைப்புக் கூட வாங்க முடியாத நிலை இருக்கிறது.இந்த பிரச்சனைகள் தீரவும் அரசு ஆவன செய்ய வேண்டும்.அரசின் தற்போதைய உத்தரவில் பாலின அறுவைசிகிச்சையோடு வாய்ஸ் தெரபி,மார்பக வளர்ச்சி சிகிச்சையும் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.
மேலும் திருநங்கைகளும் மனிதர்கள் அவர்களை மதிப்போம் என்ற பிரச்சாரமும்,அவர்களின் பெற்றோருக்கு கவுன்ஸிலிங்கும் ,வீட்டைவிட்டுத் துரத்தும் பெற்றோருக்கு தண்டனையும் வழங்கப் பட வேண்டும். என்றும் கூறுகிறார் வித்யா

சற்றுமுன்: 2015ம் வருடத்துக்குள் 1.5 கோடி வேலைவாய்ப்பு

Posted: 30 Mar 2007 08:11 PM CDT

இந்தியாவில் அடுத்த 8 ஆண்டுகளில் புதிதாக 1.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகும் என எத்திராஜ் மகளிர் கல்லூரி நடத்திய வேலை வாய்ப்பு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி "வேலை வாய்ப்புகளை மேம்படுத்த கலை-அறிவியல் கல்லூரிகள் இணைந்து செயலாற்றுதல்" என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்தியது.
இதில் கல்லூரியின் முதல்வர் எம். தவமணி, "இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) அண்மையில் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, 2015-ம் ஆண்டில் இந்தியாவில் 1.3 முதல் 1.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக இருக்கின்றன. கலைக் கல்லூரி மாணவர்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.



- தினகரன்