Satrumun Breaking News
Satrumun Breaking News |
ஃப்ளிக்கர்.காம் பின்னூட்டங்களை யாஹு தணிக்கை செய்தது Posted: 18 May 2007 05:26 PM CDT புகைப்படங்களுக்கான ஃப்ளிக்கர்.காம் வலையகத்தில் யாஹூ தணிக்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தன்னுடைய அனுமதியில்லாமல், இணைய கண்காட்சியொன்றில் ஏழு நிழற்படங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை ரெபெக்கா (Rebekka Gudleifsdóttir) கடந்த மாதம் கவனித்தார். இதைப் பிறரின் கவனத்துக்கு கொண்டு செல்ல ஃப்ளிக்கரில் பதிவிட்டார். புகைப்படமும் அதன் தொடர்பான எதிர்வினைகளும் தற்போது நீக்கப்பட்டுள்ளது. புகைப்பட விற்பனையில் சம்பந்தப்படாத யாஹு, இதற்காக மன்னிப்புக் கோரியுள்ளது. 'பிறரை புண்படுத்தும் விதத்தில் அமைந்திருப்பதால்' 450 சொச்ச பின்னூட்டங்களையும் ஃப்ளிக்கர் கழற்றி விட்டதோடு நில்லாமல், ரெபக்காவின் பதிவை முடக்குவோம் என்று மிரட்டவும் செய்ததாக பாதிக்கப்பட்டவர் குற்றஞ்சாட்டியுள்ளார். BBC NEWS | Technology | Yahoo 'censored' Flickr comments: "Yahoo has been accused of censorship on its popular photo website Flickr, in a row that has highlighted the issue of copyright in the online age." |
பிகார்: ரயில்வே அதிகாரியால் ரயிலிலிருந்து தூக்கி வீசப்பட்ட பயணி Posted: 18 May 2007 05:03 PM CDT பாட்னா, மே 19: பிகார் மாநிலம் சோனேபூரில் ரயில்வேப் பாதுகாப்புப் படை அதிகாரியால் ஓடும் ரயிலிலிருந்து தலித் பயணி ஒருவர் வியாழக்கிழமை தூக்கி வீசப்பட்டார். அமர்பலி எக்ஸ்பிரஸில் டிக்கட் பரிசோதனையின்போது ரயில்வேப் பாதுகாப்புப் படை அதிகாரிக்கும், பயணிகளுக்கும் இடையே பிரச்சினை நடந்துள்ளது. இதில் ராகேஷ் குமார் பாஸ்வான் என்ற தலித் பயணியை ஓடும் ரயிலிலிருந்து சோனேபூர் ரயில்வே பாலம் அருகே பாதுகாப்புப் படை அதிகாரி தூக்கி வீசியதாக மத்திய கிழக்கு ரயில்வே துணை பொது மேலாளர் கே. சந்திரா தெரிவித்தார். பாஸ்வான் சாபூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் சோனேபூர் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயம் அடைந்துள்ளார் பாஸ்வான். Dinamani |
ராகிங் தேவையா- சர்வே முடிவுகள் Posted: 18 May 2007 03:45 PM CDT |
'சிவாஜி' ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைப்பு Posted: 18 May 2007 02:37 PM CDT 'சிவாஜி' படம் உலகம் முழுவதும் ஏப்.14-ம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் மே 31-ம் தேதி வெளியாகும் என ஏவி.எம். நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது 'சிவாஜி' படம் ஜூன் 15-ம் தேதிதான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'சிவாஜி' படத்தை புதன்கிழமை சென்சார் போர்டு அதிகாரிகள் பார்த்தனர். அப்படத்துக்கு அனைத்து வயதினரும் காணத்தக்க வகையிலான 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 'சிவாஜி'யில் ஆட்சேபகரமான காட்சிகளோ, வசனங்களோ இடம்பெறவில்லை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்துப் பார்க்கலாம் என படத்தைப் பார்த்த அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். சிவாஜி'க்கு புதிய சிக்கல்: 'சிவாஜி' படத்தைத் திரையரங்குகளில் வெளியிட வேண்டுமானால் படத்தின் வசூலில் 40 சதவீதத்தைத் தரவேண்டும் என புதிய படங்களைத் திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் புதிய நிபந்தனை விதித்துள்ளனர். சாய்மீரா, ரிலையன்ஸ் ஆட்லேப், சன்நெட்வொர்க் போன்ற பெரிய நிறுவனங்கள் படத்தை வாங்கி வெளியிட முன்வந்தன. ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை இப்படத்தை ஏவி.எம். நிறுவனமே அனைத்து ஏரியாக்களிலும் நேரடியாக வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்: தமிழ்த் திரைப்படத் துறையில் தற்போதுள்ள எம்.ஜி. (மினிமம் கியாரண்டி) மற்றும் எஃப்.எச் (ஃபிக்சட் ஹயர் எனப்படும் நிரந்தர வாடகை) முறைகளால் திரையரங்குகளுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே இனி வரும் காலங்களில் சதவீத அடிப்படையில் வசூலில் பங்கு வேண்டும் என ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசாணை 1240-ன்படி திரையரங்குகளின் நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பல இடங்களில் அந்த அரசாணை நிறைவேற்றப்படவில்லை. எனவே அரசாணையில் அறிவித்துள்ளபடி அதிகபட்ச கட்டணம் ரூ.50, குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 என விண்ணப்பம் செய்யும் திரையரங்குகளுக்கு மாவட்ட ஆணையர்களே அனுமதி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 'சிவாஜி' படத்தைக் குறி வைத்துதான் இந்த திடீர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதா என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு சங்கத்தின் தலைவர் மு.அண்ணாமலை கூறியதாவது: எம்.ஜி., எஃப்.எச் முறையில் திரையரங்குகள் நஷ்டத்தை சந்தித்து வருவதால்தான் இந்த முடிவை எடுத்துள்ளோம். சதவீத அடிப்படையில் என்றால் பெரிய படங்களைப் பொருத்தவரை, முதல் மூன்று வாரங்களுக்கு விநியோகஸ்தர்களுக்கு 60 சதவீதமும், திரையரங்குகளுக்கு 40 சதவீதமும் பங்கிடப்படும். அடுத்த வாரத்திலிருந்து இரு தரப்பும் தலா 50 சதவீதம் பிரித்துக்கொள்ள வேண்டும். இதற்கு முன்பு திரையரங்கு உரிமையாளர்கள் நஷ்டம் அடைந்தபோது ஜீ.வி., ரஜினிகாந்த், மணிரத்னம் போன்ற சிலர் மட்டுமே பணத்தைத் திருப்பித் தந்தனர். இதை எல்லாரிடமும் எதிர்பார்க்கமுடியாது என்றார். (தினமணி) |
'குரு', 'வெயில்' உள்பட கேன்ஸ் திரைப்பட விழாவில் 7 இந்திய திரைப்படங்கள் Posted: 18 May 2007 02:24 PM CDT பிரான்ஸில் நடைபெற்று வரும் கேன்ஸ் உலக திரைப்பட விழாவில் திரையிட மணிரத்னம் இயக்கிய 'குரு', வசந்தபாலன் இயக்கிய 'வெயில்' உள்பட 7 இந்திய திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மலையாள படமான 'சைரா' மே 19-ம் தேதி திரையிடப்படுகிறது. ஹோமியோபதி மருத்துவராக இருந்து பின் திரையுலகுக்கு வந்த பிஜு குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். முன்னதாக பாவனா தல்வாரின் 'தரம்' படமும், மிரிதுல் துளசிதாஸ் மற்றும் வினய் சுப்பிரமணியன் இணைந்து இயக்கிய 'மிஸ்டு கால்' திரைப்படமும் திரையிடப்படுகிறது. ஹிந்தியில் ராஜ் குமார் ஹிரானியின் 'லகே ரகோ முன்னாபாய்' மற்றும் மணி ரத்னம் இயக்கிய 'குரு' திரைப்படமும் திரையிடப்பட உள்ளன. கோல்கத்தா இயக்குநர் ரிதுபர்னா கோஸின் 'தோஸார்' படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழில் வசந்தபாலன் இயக்கிய 'வெயில்' படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய செய்தி: சற்றுமுன்...: வெய்யில்: கேரளாவில் விருது, கான் திரைப்படவிழாவிற்கு தேர்வு Dinamani NDTV: 'Director Wong Kar-wai's My Blueberry Nights starring Norah Jones and Jude Law, was the first screening in an 11-day fete of cinema, parties and deal making. Movies on Cannes' lineup range from Ocean's Thirteen to Michael Moore's Sicko, to films from Russia to Mexico to South Korea. For a feature-length homage to the movies, it commissioned 35 shorts from directors including Wong, Roman Polanski (The Pianist), Alejandro Gonzalez Inarritu (Babel), the Coens (Fargo) and Wim Wenders (Wings of Desire.) Oscar-winning director Martin Scorsese has been enlisted to give a master class on moviemaking. DiCaprio brings his environmental documentary The 11th Hour.' |
உள்நாட்டு விமானங்களில் மது பரிமாற அனுமதி? Posted: 18 May 2007 02:20 PM CDT உள்நாட்டு விமானங்களில் மது அருந்துவதும் மதுவகைகள் பரிமாறப்படுவதும் தடை செய்யப்பட்டிருந்தது. வெளிநாட்டு விமானங்களிலும் இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியாவின் சர்வதேச விமானங்களிலும் மட்டும்தான் மதுவகைகள் பரிமாறப்பட்டு வந்தன. தனியார் விமானப் போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்டபோது, அப்போதிருந்த மோடி லுஃப்த் விமான நிறுவனம், தனது உள்நாட்டு விமானங்களில் மதுவகைகளை இலவசமாக வழங்க முற்பட்டது. நாடாளுமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் கிளம்பிய எதிர்ப்புகள், அரசைத் தலையிட வைத்து, விமானங்களில் 'பார்' நடத்துவதற்கு முற்றுப்புள்ளி வைத்தன. கடந்த பத்து ஆண்டுகளாக ஓரங்கட்டப்பட்டு வைத்திருந்த விஷயத்துக்கு இப்போது புத்துயிர் அளித்திருக்கிறார் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரஃபுல் படேல். சமீபத்தில் பிரிட்டனின் மிகப்பெரிய மதுபான நிறுவனமான ஒயிட் அண்ட் மேக்கே மதுபான ஆலையை, ரூ. 4,819 கோடிக்கு வாங்கியிருக்கும் யுனைடெட் ப்ருவரீஸ் நிறுவனத்தின் நிர்பந்தத்திற்கு உட்பட்டு, இந்த விதி சில நிறுவனங்களின் சேவைக்கு தளர்த்தப்படலாம் என்றார். - தினமணி 1. Booze on your DEL-MUM flight? 2. Kingfisher Airlines: Soaring ambition |
Posted: 18 May 2007 12:30 PM CDT சிதம்பரம், மே 18: சிதம்பரம் நடராஜர்ஆலய திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரத் திருமுறைப்பாடல்களை பாட ஊர்வலமாகச் சென்ற சிவனடியார் உ.ஆறுமுகசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 8 பெண்கள் உள்ளிட்ட 79 பேரை நகரப் போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் நடராஜர்ஆலய திருச்சிற்றம்பல மேடையில் சிவனடியார் ஆறுமுகசாமி தமிழில் தேவாரத்திருமுறைப் பாடல்களை பாட தடை விதித்து மயிலாடுதுறை இணைஆணையர் 12-12-04-ல் உத்தரவு பிறப்பித்தார். இந் நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு சிவனடியார் ஆறுமுகசாமி மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் பாமக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் ஆதரவுடன் தடையை மீறி பாடச்சென்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து பல்வேறு தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் ஆலய பொது தீட்சிதர்கள் சிற்றம்பலமேடையில் பாடக்கூடாது என சிதம்பரம் முன்சீப் கோர்ட்டில் நிரந்தரத்தடை பெற்றனர். அதன் தொடர்ச்சியாக - சற்றுமுன்...: நடராஜர் ஆலய சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் பாடலாம்: அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு இதனையடுத்து சிவனடியார் ஆறுமுகசாமி வியாழக்கிழமை காலை சிற்றம்பலமேடையில் பாட, மேலவீதி பெரியார்சிலை அருகேயிருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டார். Dinamani.com |
ச:டிக்சனரியில் தவறு - கர்நாடகா எதிர்ப்பு Posted: 18 May 2007 09:12 AM CDT ஆக்ஸ்ஃபோர்ட் அருஞ்சொற்பொருள் அகராதியில் பெங்களூரின் வரலாற்றை குறிப்பிடுகையில் அது அதிகமாக பெங்காலி மொழி பேசும் மக்களைக்கொண்டது எனத் தவறாகக் கூறிப்பிடப்பட்டதால் கர்நாடக அரசு ஆக்ஸ்ஃபோர்ட் நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தவறை திருத்த கடிதம் எழுதியுள்ளது. இந்த அகராதி கர்நாடகா பற்றி மேலும் சில தவறான செய்திகளைக் கொண்டுள்ளது எனத் தெரிகிறது. Karnataka irked over dictionary containing 'misleading' details The Hindu Update Oxford University Press suspends sale of its dictionary Zee News |
ஹைதராபாத் குண்டுவெடிப்பு : சோனியா இரங்கல். Posted: 18 May 2007 09:28 AM CDT ஹைதராபாத் மசூதி குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியான குடும்பங்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா இரங்கல் தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் சார்மினார் அருகேயுள்ள மெக்கா மசூதியில் இன்று மதியம் சக்திவாய்ந்த குண்டு வெடித்து இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலியானர்கள். இந்த சம்பவத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பலியானவர்களுக்கு இரங்கலும், பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலும் தெரிவித்தார். இதற்கிடையே பலியான ஒவ்வொருக்கும் தலா ரூ. 5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும், என மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டி அறிவித்துள்ளார்.ஹைதராபாத் சம்பவத்தைத் தொடர்ந்து தலைநகர் டெல்லி மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. |
மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பு. Posted: 18 May 2007 05:15 AM CDT மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளிகள் ஐந்து பேருக்கு தலா மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. இருபத்திஐந்தாயிரம் அபராதமும் விதித்து மும்பை சிறப்பு தடா நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. கடந்த 93 ஆண்டு நிகழ்ந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 23 பேரை தவிர, குற்றவாளிகள் 100 பேருக்குமான தண்டனை இன்று அறிவிக்கப்படும் என மும்பை தடா நீதிமன்ற சிறப்பு நீதிபதி பிரமோத் கோடே ஏற்கெனவே தனது தெரிவித்திருந்தார். அதன்படி, குற்றவாளிகள் 100 பேரில் 5 பேருக்கான தண்டனையை இன்று சிறப்பு நீதிபதி பிரமோத் கோடே அறிவித்தார். யாஷ்வாந்த்ராவ் போயின்கர், அப்பாஸ் தாவுத் ஷைகேந்தர், ஷாஜாகான் ஷைகேந்தர், ரஷித் உமர் ஆல்வரே மற்றும் ஷெரிப் கான் ஆதிகாரி ஆகிய ஐந்து மீனவர்களே இந்தத் தண்டனையை பெறுபவர்கள் ஆவர். இவ்வழக்கில் குற்றாவாளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளதால், முதலில் 5 பேருக்கான தண்டனை அறிவிக்கப்படும் என்றும், பின்னர் 8 முதல் 10 நாட்களுக்குள் தண்டனை அறிவிப்புகள் நிறைவடையும் என்றும் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகிம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இந்த வழக்கிலிருந்து நன்னடத்தைக் காரணமாக தங்களை விடுவிக்குமாறு சஞ்சய் தத் மற்றும் அவரது நண்பர்களான யூசுப் நுல்லாவா, ருசி முல்லா மற்றும் கேர்ஸி அடேஜினியா ஆகியோர் சில மாதங்களுக்கு முன் மனு ஒன்றை அளித்திருந்தனர். அந்த மனுவை பரிசீலிக்கும் மும்பை தடா நீதிமன்றம், சஞ்சய் தத் மற்றும் அவரது நண்பர்களுக்கு சிறைத் தண்டனை வழங்குமா அல்லது அவர்களை நன்னடத்தை காரணமாக விடுவிக்குமா என்பதும் விரைவில் தெரியவரும் |
ஹைதராபாத் மசூதியில் குண்டு வெடிப்பு . Posted: 18 May 2007 04:46 AM CDT ஆந்திரத் தலைநகர் ஹைத்ராபாத்தில் இன்று நிகழ்ந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.பழைய ஹைத்ராபாத்தில் நெரிசல் மிகுந்த சார்மினார் பகுதியில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.சார்மினாரில் இருந்து பத்து மீட்டர் தொலைவில் உள்ள மெக்கா மசூதி அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகத் தெரிகிறது. எனினும், குண்டு வெடித்த இடம் பற்றிய உறுதியாகத் தெரியவில்லை.விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் நகரில் உள்ள ஒஸ்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புது டெல்லியில் உள்ள முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி, குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து உடனடியாகக் கேட்டறிந்தார்.மாநில அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், நிலைமையை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.விபத்து பற்றிய முழு விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. |
மத்திய அமைச்சராக பதவியேற்றார் ராதிகா செல்வி! Posted: 18 May 2007 02:18 AM CDT திமுக மக்களவை உறுப்பினரும், திருச்செந்தூர் தொகுதியில் இருந்து முதல்முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டவருமான வி. ராதிகா செல்வி இன்று மத்திய இணையமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.குடியரசுத் தலைவர் மாளிகையின் அசோகா மண்டபத்தில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் ராதிகா செல்விக்கு குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ள அவரது இலாகா விவரம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. அநேகமாக அவர் உள்துறை இணையமைச்சராகக் கூடும் என்று தெரிகிறது.பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் மற்றும் ராதிகா செல்வியின் உறவினர்கள் பலர் பங்கேற்றனர்.மத்திய அமைச்சரவையில் இருந்து தயாநிதி மாறன் பதவி விலகியதைத் தொடர்ந்து, திமுகவில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களின் அடிப்படையில் ராதிகா செல்வி மத்திய அமைச்சராகியுள்ளார். |
Links for 2007-05-17 [del.icio.us] Posted: 18 May 2007 12:00 AM CDT
|
பிலிப்பைன்ஸ் தேர்தலில் 121 பேர் பலி Posted: 17 May 2007 09:08 PM CDT பிலிப்பைன்ஸில் திங்களன்று நடந்து முடிந்த தேர்தலில் 75 சதவிகித வாக்கு பதிவாகியது. கடந்த முறை நிகழ்ந்த வன்முறை போலவே இந்த தடவையும் குண்டுவெடிப்பு போன்றவற்றில் 121 பேர் இறந்தார்கள். ஆங்காங்கே முறைகேடு நடந்ததற்கான குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன. 1. Elections in South-East Asia | Voting for more of the same | Economist.com 2. Deaths and Fraud Reports Mar Philippine Vote - New York Times |
தென் கொரியாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையே ரயில் Posted: 17 May 2007 08:56 PM CDT கொரியா மீண்டும் இணையலாம் என்னும் எண்ணத்தை விதைக்குமாறு, வட கொரியாவில் இருந்து தென் கொரியாவிற்கு இரயில் விடப்பட்டுள்ளது. எண்பது மில்லியன் டாலர் செலவில் 56 வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக உறவிற்கு பாலம் வகுக்கும் வகையில் டிரெயின், எல்லைகளைக் கடந்தது. BBC NEWS | Asia-Pacific | South Korea's reconciliation gamble |
ச:சக மாணவியை அச்சுறுத்திய பெண்ணிற்கு அவள் தாயே தண்டனை! Posted: 17 May 2007 08:32 PM CDT மியாஷா வில்லியம்ஸ் என்கிற பனிரெண்டு வயது சிறுமி தன்னுடன் படிக்கும் சக மாணவியை அச்சுறுத்தியதால் அவளுடையெ தாயே தண்டித்தாள்.எப்படி? ஒரு வாரத்திற்கு மியாஷாவின் கழுத்தில், ' நான் என்னுடன் படிக்கும் பெண்ணை துன்புறுத்தினேன் இதனால் பள்ளியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டேன். நீங்கள் யாரும் என்னை போல் இருக்காதீர்கள்" என்கிற அவளால் கைபட எழுதிய ஒரு அட்டையை மாட்டி பள்ளிக்கு செல்ல வைத்தாள்! மேலும் படிக்க http://www.latimes.com/news/local/la-me-bully18may18,1,1010624.story?track=rss |
ச: உயர் சாதியினருக்கும் இட ஒதுக்கீடு- பிரதமர் மன்மோகம்சிங் ஆதரவு Posted: 17 May 2007 07:47 PM CDT ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாடு' தொடர்பான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு, டில்லியில் நேற்று துவங்கியது. பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: ஜாதி வித்தியாசமின்றி ஏழை குழந்தைகளின் பிரச்னைகள் தீர்வுக்கு யோசனைகள், திட்டங்கள் இருந்தால், அதை நிறைவேற்றுவதில் எந்த தயக்கமும் இல்லை. இந்த கருத்தரங்கின் மூலம், எல்லா பிரிவினரும் சமுதாய ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேறுவதற்கான, சிறப்பான ஆலோசனைகள் கிடைக்கும் என்று நம்புகிறேன். ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் , சிறுபான்மையினர், பெண்களின் மேம்பாட்டில் எங்கள் அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். பின்தங்கியுள்ள பகுதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம். அத்வானி பேசியதாவது: உயர் ஜாதியைச் சேர்ந்த ஏழைகளுக்கும், பிற்பட்ட நிலையில் உள்ள முஸ்லிம்களையும் சமுதாயத்தில் மேம்படுத்த சிறப்பு திட்டங்கள் அவசியம். வரலாற்றுப் பின்னணியின் காரணமாக இந்திய சமுதாயத்தில் மிகப்பெரிய அளவில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. இன்று உயர் ஜாதியினர் என்று அழைக்கப்படுபவர்கள் படும் ஏழ்மையையும் சேர்ந்து ஆராயாவிட்டால், சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை அகற்றுவது என்பது முழுமை பெறாது. - தினமலர் இது சம்பந்தமாக "தி இந்து நாளிதழில் வந்த செய்தி " |
You are subscribed to email updates from சற்றுமுன்... To stop receiving these emails, you may unsubscribe now. | Email Delivery powered by FeedBurner |
Inbox too full? Subscribe to the feed version of சற்றுமுன்... in a feed reader. | |
If you prefer to unsubscribe via postal mail, write to: சற்றுமுன்..., c/o FeedBurner, 549 W Randolph, Chicago IL USA 60661 |
No comments:
Post a Comment