Satrumun Breaking News
Satrumun Breaking News |
ஒலிம்பிக் மாரத்தானில் பங்கேற்க விரும்பும் அமீரக தமிழ் இளைஞர் Posted: 02 Sep 2007 02:57 PM CDT ஒலிம்பிக் மாரத்தானில் பங்கேற்க விரும்பும் அமீரக தமிழ் இளைஞர் தமிழக அரசு உதவ முன்வருமா ? ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராம் துபாயில் உள்ள ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தின் ஒரு அங்கமாக விளங்கி வரும் ஜீனத் லேண்ட் டிரான்ஸ்போர்ட்டில் பணி புரிந்துவருபவர் யு. அஹமது சுலைமான் ( வயது 31 ). தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தைச் சேர்ந்த இவர் தற்பொழுது திருச்சியில் வசித்து வருகிறார். பள்ளி, கல்லூரிகளில் பயிலும் போதே பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்றதன் காரணமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிடுகிறார். கடந்த ஜனவரி மாதம் ஸ்டாண்டர்ட் வங்கி ஆதரவில் துபாயில் நடைபெற்ற சர்வதேச மாரத்தான் போட்டியில் ( 42.195 கிமீ ) முதல் முறையாக பங்குபெற்ற இவர் 372 வது இடத்தைப் பிடித்தார். இப்போட்டியில் சுமார் 4 ஆயிரத்து 800 பேர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதல் ராசல் கைமாவில் நடைபெற்ற அரை மாரத்தான் போட்டியில் பங்கேற்று 210 வது இடத்தைப் பிடித்தார். இதில் 6 ஆயிரம் பேர் பங்கேற்றனர். மேலும் அமீரக பாதுகாப்பு அமைச்சகம் நடத்திய அரை மாரத்தான் போட்டியில் பங்கேற்று 15 வது இடத்தைப் பெற்றார். இதன் காரணமாக எதிர்வரும் 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்குபெற்ற பிறந்த நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் எனும் ஆவலில் தற்பொழுது திருச்சி வருகை புரிந்துள்ள இவர் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை தொடர்பு கொண்டுள்ளார். இவரது முயற்சிக்கு இவர் பணிபுரிந்து வரும் நிறுவனமும், துபாய் இந்திய துணைத்தூதரக கன்சல் பி.எஸ். முபாரக், இந்திய முஸ்லிம் சங்கம், துபாய் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் ஆர்வமும், ஊக்கமும் அளித்து வருகின்றன. இவர் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தாயக தொடர்பு முகவரி : 138 பெரிய கடை வீதி திருச்சி 620 008 தொலைபேசி : 0431-270196/98 424 77828 E mail : ad_sulaiman4000@yahoo.com |
"அணு ஆயுதத் திட்ட்டத்தை கைவிட்டது வடகொரியா'' Posted: 02 Sep 2007 12:40 PM CDT வட கொரியா 2007 முடியும் முன்் தன் அணு ஆயுதத் திட்டம் குறித்து முழு விபரங்களையும் வெளியிட்டு ்வெளியிட்டு அத்திட்டத்தை கைவிட ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்காவின் தூதுவர் கிரிஸ்டோபர் ஹில் ஜெனீவாவில் தெரிவித்துள்ளார். North Korea 'to end nuclear work' - BBC |
ஊனமுற்றோர் இட ஒதுக்கீட்டில் சாதி உள் ஒதுக்கீட்டுக்கு நீதிமன்றம் மறுப்பு Posted: 02 Sep 2007 11:23 AM CDT மத்திய பிரதேசத்தில் பள்ளிக்கூட ஆசிரியர் பணியில் மூவர் சேர்த்துக் கொள்ளப்பட்டதை அந்த மாநில அரசு விலக்கம் செய்திருந்தது. உடல் ஊனமுற்றோருக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென உள் ஒதுக்கீடு செய்து இவர்கள் நியமிக்கப்பட்டது செல்லாது என்றும் அரசு அறிவித்தது. இதை எதிர்த்து 3 ஆசிரியர்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை உச்சநீதிமன்ற அமர்வொன்றின் நீதிபதிகள் எஸ்.பி. சின்கா, எச்.எஸ்.பெடி ஆகியோர் விசாரித்து தீர்ப்பு கூறினார்கள். அவர்கள் தங்கள் தீர்ப்பில் "உடல் ஊனமுற்றோருக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களில் சாதி அடிப்படையில் தனியாக உள் ஒதுக்கீடு அளிக்க முடியாது. பெண்களுக்கான கோட்டாவிலும் தனியாக சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்க முடியாது. 50 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. உடல் ஊனமுற்றோருக்கான இட ஒதுக்கீட்டில் எந்த பாதிப்பும் இப்போது ஏற்படவில்லைஎன்று கூறியுள்ளனர். மாலைமலர் |
மன்னாரில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியைக் கைப்பற்றியுள்ளதாக இலங்கை அரசு அறிவிப்பு Posted: 02 Sep 2007 11:06 AM CDT இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் மாவட்டத்தில் இருக்கும் சிலாவத்துறை எனும் பகுதியை விடுதலைப் புலிகளிடம் இருந்து இலங்கைப் படையினர் கைப்பற்றி விட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. அண்மையில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பகுதிகளை இலங்கைப் படையினர் கைப்பற்றியிருந்தனர். அதன் பின்னர் கடந்த சில நாட்களாக இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது இலங்கைப் படையினர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். "புலிகளிடமிருந்து கிழக்கு மாகாணத்தை மீட்டது போல் சிலாவத்துறையையும் மீட்டுள்ளோம்" என்றார் ஜனாதிபதி ராஜபக்ச. இப் பகுதிகளில் இருந்த விடுதலைப் புலிகளின் சில கடற்படைத் தளங்களையும் கைப்பற்றியுள்ளதாக இலங்கைப் படையினர் தெரிவித்துள்ளனர். இத் தாக்குதல்களின் போது விடுதலைப் புலிகள் பாரிய எதிர்ப்பு எதனையும் காட்டாது பின்வாங்கி விட்டனர் எனவும் படையினர் தெரிவித்திருந்தனர். இது இவ்வாறிருக்க, மன்னாரில் உள்ள முஸ்லிம் கிராமத்தில் வசிக்கும் 50 க்கு மேற்பட்ட முஸ்லிம் குடும்பத்தினரை மனிதக் கேடயங்களாகப்[human shields ] பயன்படுத்தி இலங்கை இராணுவம் இப் பகுதிகளில் நுழைந்திருக்கிறது என தமிழ்நெற் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை இராணுவத்தினரின் சிலாபத்துறை இராணுவ நடவடிக்கையால் பல தமிழ்மக்கள் தமது வீடுகளை விட்டு அகதிகளாக வெளியேற்றப்படுகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. இலங்கை இராணுவத்தினரின் தாக்குதல்களால் இடம்பெயர்ந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு தப்பிச் சென்ற மக்கள் மீது இலங்கைப் படையினரின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினர் கிளைமோர் தாக்குதல் நடாத்தியதில் 9 தமிழ் பொதுமக்கள், குழந்தைகள் உட்பட , கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத தாக்குதல்கள் பற்றி விடுதலைப் புலிகள் இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை. ஆதாரம் : BBC, Tamilnet, Reuters |
ஆசிய கோப்பை ஹாக்கி: நாளை இந்தியா-கொரியா மோதல் Posted: 02 Sep 2007 07:59 AM CDT 7-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. 2-வது ஆட்டத்தில் இந்திய அணி நேற்று பலவீனமான இலங்கையை எதிர்கொண்டது. இதில் இந்தியா கோல் மழை பொழிந்தது. 20-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆசிய கோப்பையில் அதிக கோல்கள் சாதனையை இந்தியா சமன் செய்தது. 1994 ஆண்டு ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணி 20-0 என்ற கணக்கில் தாய்லாந்தையும், மலேசியா 20-0 என்ற கணக்கில் தாய் லாந்தையும் வென்று இருந்ததே சாதனையாகும். இந்திய அணியில் பிரப் ஜோத்சிங் அதிகபட்சமாக 5 கோல்கள் (ஹாட்ரிக்) அடித் தார். எஸ்.வி.சுனில் (ஹாட்ரிக்), துஷார் சன்டேகர், ரகுநாத் ஆகியோர் தலா 3 கோல்களும், இக்னேஸ் திர்கே, சிவேந்திரா சிங் தலா 2 கோல்களும், பிரபோத் திர்கே, ராஜ் பால சிங் தலா ஒரு கோலும் அடித் தனர். பிரப்ஜோத்சிங் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்னொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் 1-3 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் தோற்றது. மற்ற ஆட்டங்களில் கொரியா 16-0 என்ற கணக்கில் தாய்லாந்தையும், மலேசியா 13-1 என்ற கணக்கில் ஆங்காங் கையும், சீனா 6-0 என்ற கணக் கில் வங்காள தேசத்தை தோற்கடித்தன. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் கொரியாவை நாளை சந்திக்கிறது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு நடக்கிறது. கொரியா அணி பலம் வாய்ந்தது. இதனால் அந்த அணியை சமாளிக்க இந்தியா மிகவும் கடுமையாக போராட வேண்டும். கொரியா 2 முறை ஆசிய கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இந்தியா ஒரு முறைதான் 2003-ல் ஆசிய கோப்பையை கைப்பற்றி இருந்தது. ஆசிய கோப்பையில் இரு அணிகளும் 6 போட்டியில் மோதியுள்ளன. இதில் இந்தியா 3 ஆட்டத்திலும், கொரியா 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 1 ஆட்டம் `சமன்' ஆனது. 1985ம் ஆண்டு இந்தியா 8-1 என்ற கணக்கிலும், 1989ம் ஆண்டு 5-0 என்ற கணக்கிலும், 2003-ம் ஆண்டு அரை இறுதியில் 4-2 என்ற கணக்கிலும் வெற்றி பெற்று இருந்தது. கொரியா 1994-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் 1999ம் ஆண்டு அரை இறுதியில் 5-4 என்ற கணக்கிலும் வென்று இருந்தது. 1994-ம் ஆண்டு இரு அணிகளும் மோதிய ஆட்டம் 1-1 என்ற கணக்கில் `சமன்' ஆனது. நாளை நடைபெறும் மற்ற ஆட்டங்களில் வங்காள தேசம்-இலங்கை (காலை 7.30) சீனா-தாய்லாந்து (9.30), ஜப்பான்- ஆங்காங் (மாலை 3 மணி), பாகிஸ்தான்- சிங்கப்பூர் (மாலை 5 மணி) அணிகள் மோதுகின்றன. நாளைய ஆட்டங்கள் அனைத் தும் எழும்பூர் மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடக்கிறது. மாலைமலர் |
தாகூரின் நோபல் பதக்கம் மீட்க இயலாது - சி.பி.ஐ Posted: 02 Sep 2007 08:06 AM CDT ரபிந்த்ரநாத் தாகூரின் நோபல் பரிச்சு பதக்கம் திருடப்பட்டதை அடுத்து சி.பி.ஐ விசாரணை நடத்தியது. மூன்றரை வருட விசாரணைக்குப்பின் பதக்கம் மீட்க்க இயலாதபடி 'நிரந்தரமாக' தொலைந்து போயிருக்கலாம் என்றும். 'இந்த விசாரணையில் இனி பலன் தரும் நடவடிக்கை எதுவும் எடுக்க இயலாது' என சி.பி.ஐ யின் அறிவிப்பு தெரிவித்தது. Rabindranath Tagore's Nobel medal lost foreveCNN-IBN CBI closes Tagore's medal theft case CBI shuts Nobel chapter after 3 years |
Posted: 02 Sep 2007 07:51 AM CDT அணுஆயுத ஒப்பந்தம் சம்பந்தமான பேச்சு வார்த்தை நடத்துவதற்கு பிரபல ஆலிவுட் நடிகர் அர்னால்டு நவம்பர் மாதம் டெல்லி வருகிறார். இவர் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு அமெரிக்க அரசியலில் அதிரடியாக குதித்தார். அரசியலில் அமோக வெற்றி அவருக்குக்கிடைத்தது. தற்போது இரண்டாவது முறையாக கலிபோர்னியா மாநில கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வரும் அர்னால்டு வருகிற நவம்பர் மாதம் தனது குடும்பத்தாருடன் இந்தியா வரத் திட்டமிட்டுள்ளார். நவம்பர் 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 5 நாட்கள் அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது அவர் டெல்லி, ஐதராபாத், மும்பை ஆகிய நகரங்களுக்கு செல்கிறார். அரசியல் நல்லெண்ண தூதராகவும், அணுஆயுத விவகாரம் சம்பந்தமாக இந்தியா- அமெரிக்காவிடையே சுமூக உறவை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் அவர் இந்தியா வருகிறார். எனவே அவர் டெல்லியில் முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்து இந்த ஒப்பந்தம் சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிற்கும் அமெரிக் காவிற்கும் தகவல் தொழில் நுட்பத்துறையில் நெருங்கிய தொடர்பு இருப்பதால் தகவல் தொழில் நுட்பத் துறையில் உள்ள முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து பேசுகிறார். பல்வேறு சமூக சேவை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். இந்தி திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களையும் அவர் சந்தித்து பேசுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மாலைமலர் |
இன்சாட் விண்ணேவல் ஒத்திவைக்கப்பட்டது Posted: 02 Sep 2007 07:53 AM CDT இன்சாட்4சிஆர் எனும் செயற்கைக்கோளை விண்ணேற்றும் பணி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வரும் செவ்வாய் கிழமைக்கு மாற்றிவைக்கப்பட்டுள்ளது. சற்றுமுன்னின் முந்தைய செய்தி: இன்சாட்4சி ஆர் இன்று விண்ணேவப்படுகிறது.The launch of GSLV delayed Daily News & Analysis Launch of GSLV rocket postponed due to technical snag GSLV launch delayed at Sriharikota |
அமெரிக்க ஓப்பன்: சில வெற்றி தோல்விகள். Posted: 02 Sep 2007 07:45 AM CDT அமெரிக்க ஓப்பன் கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனும், உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையுமான மரியாஷரபோவா(ரஷியா) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். போலந்தை சேர்ந்த அக்னீஸ்கா 6-4, 1-6, 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் ஷரபோவாவை வீழ்த்தி 4-வது சுற்றில் நுழைந்தார். இதே போல 7-ம் நிலை வீராங்கனையான நாடியா பெட்ரோவாவும் (ரஷியா) தோல்வி அடைந்தார். மேலும் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும் 16-வது இட வரிசையில் இருப்பவருமான மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) 6-3, 1-6, 0-6 என்ற கணக்கில் பெலாரசை சேர்ந்த விக்டோரியாவிடம் தோற்றார். இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சானியா மிர்சாவும் 3-வது சுற்றோடு வெளியேறினார். அவர் 2-6, 3-6 என்ற கணக்கில் 6-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீராங்கனை அனாவிடம் வீழ்ந்தார். உலகின் முதல் நிலை வீரரான ரோஜர்பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-7(4-7), 6-2, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவை சேர்ந்த ஜானை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் ரோட்டிக் (அமெரிக்கா), நிக்கோலி (ரஷியா), டோமி ஹால் (ஜெர்மனி) ஆகியோர் வெற்றி பெற்றனர். ஒற்றையர் பிரிவில் தோற்ற சானியா இரட்டையர் பிரிவில் ஏற்கனவே 3-வது சுற்றுக்கு முன்னேறி விட்டார். தற்போது கலப்பு இரட்டையர் பிரிவிலும் முன்னேறி உள்ளார். சானியாமிர்ஸா- மகேஷ்பூபதி இணை குளோவின் (பிரான்ஸ்)- பாப்பிரையன் (அமெரிக்கா) இணையை வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றது. இதே போல லியாண்டர் பெயஸ் (இந்தியா) -சுகுனசி (அமெரிக்கா) இணை 7-6, 6-3 என்ற கணக்கில் பெஸ்சாக்- மார்ட்டின் டாம் (செக்குடியரசு) இணையை வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆண்கள் இரட்டையர் ஆட்டத்தில் மகேஷ்பூபதி- ஜிமோன்ஜிக் (செர்பியா) இணை 2-வது சுற்றில் தோற்றுவிட்டது. |
மக்கள் தொலைக்காட்சி இரண்டாம் ஆண்டு துவக்க விழா Posted: 02 Sep 2007 07:42 AM CDT தன் முதலாண்டு வெற்றிப்பயணத்தை முடித்த மக்கள் தொலைக்காட்சியின் இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழா சென்னையில் நடைபெற உள்ளது. இடம் : காமராசர் அரங்கம்,தேனாம்பேட்டை,சென்னை-18 நாள் : 06.09.2007 நேரம் : மாலை 4.00 மணி கலை நிகழ்ச்சிகள் மாலை 4.00 மணிக்கு பாராட்டு விழா மாலை 6.00 மணிக்கு இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா இரவு 8.00 மணிக்கு... நிகழ்ச்சியில் தொலைக்காட்சி வெற்றிக்கு உழைத்தவர்களுக்குப் பாராட்டும்,பொறுப்பாளர்களுக்குப் தமிழக அமைச்சர்கள் மாண்புமிகுமு.க.ஸ்டாலின்,ஆர்க்க அழகின்சிரிப்பு என்னும் குறுந்தகடு வெளியிடப்படுகிறது. மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் நிறைவுரையாற்றுவார்கள். தொடர்புக்கு மின்னஞ்சல்: info@makkal.tv |
மீண்டும் உயருமா பெட்ரோல் டீசல் விலைகள்? Posted: 02 Sep 2007 07:30 AM CDT எண்ணெய் நிறுவனங்கள் கடன் பத்திரங்களை வெளியிட அனுமதிப்பதற்கு முன்பாக பெட்ரோல், டீசல், உள்ளிட்ட எரிபொருள்களின் விலைகளை உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்த அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் கடன் பத்திரங்கள் வெளியிடுதல் தொடர்பாக எந்த முன்நிபந்தனையும் இல்லை. நாள்தோறும் சந்தித்து வரும் நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் எரிபொருள் விலைகளை உயர்த்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களின் கோரிக்கையின் அடிப்படையில் இதன் விலைகளை உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் உத்தேசித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசு நிறுவனங்கள் கோரிக்கை: பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலைகளை உயர்த்தாமல் இருப்பதால் நாள்தோறும் ரூ.185 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. ஆனால், விலைகளை உயர்த்தி பொதுமக்களின் தலைகளில் சுமைகளை ஏற்ற வேண்டாம் என்று மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளதாகவும் அத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷேன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷேன் ஆகிய இரு நிறுவனங்கள் தங்கள் பங்குகளில் சில சதவீதத்தை விற்க முடிவு செய்துள்ள நிலையில் இவற்றில் இருந்து 5 சதவீத பங்குகளை அரசு சார்பில் பெற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனாலும் மத்திய நிதி அமைச்சகத்துக்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் இடையே இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு கருத்து வேற்பாடுகள் தொடர்ந்து வருகின்றன. நஷ்டக் கணக்குகள்: கடந்த பிப்ரவரியில் எண்ணெய் விலைகள் ஏற்றப்பட்டு மீண்டும் குறைக்கப்பட்டன. இதில், பெட்ரோலுக்கு ரூ.2-ம், டீசலுக்கு ரூ.1-ம் குறைக்கப்பட்டது. இதனால், எண்ணெய் நிறுவனங்கள் காட்டும் நஷ்டக் கணக்குகள் வருமாறு: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.5.88-ம், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.4.80-ம், எல்.பி.ஜி. சமையல் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.189.14-ம், மண்ணெண்ணெய் லிட்டர் ஒன்றுக்கு ரூ.14.63-ம் நஷ்டமாவதாக தெரிவித்துள்ளன. விலைகளை ஏற்ற தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் கோரி வருவதால் இதன் விலைகள் ஏற்றப்படுவது மத்திய அரசின் முடிவில் உள்ளது. விலையேற்றத்துக்கு இடதுசாரிகள், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு குரல் எழுப்பும். இதையும் மீறி அல்லது அனுசரித்தே தான் விலையேற்றங்கள் இருக்கலாம். தினமணி |
கடையடைப்புகளால் கேரளாவின் இழப்பு 4,500 கோடி Posted: 02 Sep 2007 07:27 AM CDT கடையடைப்புகள் மூலமாக கேரளாவுக்கு ஆண்டுக்கு நான்காயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக, பந்த் எதிர்ப்பு முன்னணி நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதனால், அரசுக்கு மட்டும் 750 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. கேரளாவில் மாநிலம் தழுவிய கடையடைப்பு ஆண்டுக்கு சராசரியாக ஏழு முறை நடத்தப்படுகிறது. "லோக்கல்' பந்த்கள் ஆண்டுக்கு 185 முதல் 200 வரை நடத்தப்படுகின்றன. இவற்றில் சிக்கி மருத்துவமனைக்கு செல்ல முடியாமலும், அடிதடியில் காயம் ஏற்பட்டும் பலர் இறந்து போகின்றனர். ஒவ்வொரு கடையடைப்பின் போதும் பலர் வேலையிழக்கின்றனர். பெரிய அளவில் வருமானமும் பாதிக்கிறது.நிலைமை இப்படியே நீடித்தால் முதலீடு செய்யவே முடியாத மாநிலம் என்ற நிலைக்கு கேரள மாநிலம் தள்ளப்பட்டு விடும் என்று இந்த முன்னணியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். தினமலர் |
கர்நாடக மாநில விருதை அப்துல்கலாம் புறக்கணிக்கக் கோரிக்கை Posted: 02 Sep 2007 07:24 AM CDT கர்நாடக மாநிலத்தின் விருதை முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் பெறக் கூடாது என்று புதுச்சேரி இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம் கூறியுள்ளது. இந்த மன்றத்தின் நிறுவனர் பெ. பராங்குசம் வெளியிட்ட அறிக்கை: கர்நாடக மாநில அரசின் உயரிய விருதான பசவாசிறீ விருதை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு வழங்க கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த விருதில் ரூ. 10 லட்சம் பணமும், நினைவுப் பரிசும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதை ஏற்க வேண்டும் என்று கர்நாடக அரசு அப்துல் கலாமுக்குக் கடிதம் எழுதியுள்ளது. அதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். அப்துல்கலாம் ஒரு தமிழர். குடியரசுத் தலைவராக இருந்தபோது இந்தியனாகவும், தேசியவாதியாகவும் இருந்தார். இவருக்குப் பிடித்த நூல் திருக்குறள். திருக்குறள் எழுதிய திருவள்ளுவரின் சிலை பெங்களூரில் பல ஆண்டுகளாக சாக்குப் பையால் கட்டப்பட்டு மூடப்பட்டுள்ளது. சிலை திறக்க முடியாமல் இருக்கிறது. கன்னடர்கள் சிலையைத் திறக்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அதனால் இந்த விருதை பெறுவதற்கு முன் திருவள்ளுவர் சிலையைத் திறக்க ஆவன செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் பராங்குசம். தினமணி |
கலைமாமணி விழாவில் கருணாநிதி பேச்சு. Posted: 02 Sep 2007 07:20 AM CDT 2006-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கும் விழா, சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. திரைப்படம், நாடகம், இசை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்று விளங்கும் 69 பேருக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன. கலைமாமணி விருதுகளை ஆளுநர் பர்னாலா வழங்க, பதக்கங்களை முதல்வர் கருணாநிதி அளித்தார். விழாவில், கருணாநிதி பேசியது: இந்த ஆண்டு சின்னத்திரை கலைஞர்களும் சிறப்பிக்கப்பட்டு இருக்கிறார்கள். முன்னதாக, அவர்களிடத்தில் ஒரு ஆதங்கம் இருந்தது. அவர்களுக்கும், விருது வழங்க வேண்டும் என்று. அதுகுறித்து என்னிடம் முறையிட்டார்கள். அதை நிறைவேற்றும் இடத்தில் நான் அப்போது இல்லை. தற்போது, நிறைவேறி இருக்கிறது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என்பது முன்பு, சங்கீத நாடக சபா என்று இருந்தது. அதற்கு, திமுக ஆட்சியில் தான் இயல் இசை நாடக மன்றம் என பெயர் மாற்றப்பட்டது. தமிழுக்கு தற்போது செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டு இருக்கிறது. செம்மொழி அஸ்தஸ்து குறித்து பெருமை பேச வேண்டுமானால் என்னைத் தான் (கருணாநிதி) பேச வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா கடிதம் அனுப்பினார். அதை, புதையலாகப் பாதுகாத்து வருகிறேன். இன்று தமிழைக் காப்பாற்ற, பாதுகாக்க வேண்டிய கட்டாயம் தமிழர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. தமிழைக் காப்பாற்றுகிறவர்கள் எனக் கூறுபவர்களைக் கண்டு ஏமாந்து விடக் கூடாது. நாமும் ஏமாற்றி விடக் கூடாது. கலைஞர் "டிவி'யை தமிழில் நடத்த வேண்டும் என அறிவுரை சொல்கிறார்கள். நன்றியோடு ஏற்றுக் கொள்கிறேன். கலைஞர் "டிவி'யில் தமிழ் வாழுமா எனக் கேட்கிறார்கள். கலைஞர் வாழ்கிறாரோ இல்லையோ? தமிழ் வாழும். அது, மற்றவர்களையும் வாழ வைக்கும். பகையைக் கக்கிக் கொண்டு தமிழைக் காப்பாற்ற முடியாது. உள்உணர்வுடன் அனைவரும் ஒருங்கிணைந்து தமிழைக் காப்போம் என்றார் கருணாநிதி. தினமணி |
எழும்பூரில் 9 ஏக்கர் பரப்பில் தேசிய புற்றுநோய் மையம் Posted: 02 Sep 2007 07:17 AM CDT இந்தியாவில் முதல் முறையாக, சென்னை எழும்பூரில் 9 ஏக்கர் பரப்பில் தேசிய புற்றுநோய் நிறுவனம் அமைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் இந்த புற்றுநோய் நிறுவனத்துக்கு, முதல் கட்டமாக ரூ. 300 கோடி வரை முதலீடு செய்யப்படும். இதற்கான பணிகள் 6 மாதத்துக்குள் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார். சென்னையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: சென்னை எழும்பூரில் உள்ள மத்திய அரசு மருந்து இருப்புக் கிடங்கில் தேசிய புற்றுநோய் நிறுவனம் அமைய இருக்கிறது. மருந்து இருப்புக் கிடங்கை மேம்படுத்தி, உலகத்தரம் வாய்ந்த கிடங்காக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.என்றார் அன்புமணி. தினமணி |
இன்சாட்4சி ஆர் இன்று விண்ணேவப்படுகிறது. Posted: 02 Sep 2007 07:07 AM CDT ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து "இன்சாட்4சிஆர்' செயற்கைக்கோளுடன், ஜி.எஸ்.எல்.வி., எப் 04 ராக்கெட் இன்று மாலை 4.21 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்திய விண்வெளி ஆய்வில் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஒரு மைல் கல்லாகவே விளங்குகிறது. 49 மீட்டர் நீளமுள்ள இந்த ராக்கெட் 414 டன் எடை கொண்டது. மூன்று அடுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் சுமந்து செல்லும் "இன்சாட்4சி ஆர்' செயற்கைக்கோள், இன்சாட்4 ரக செயற்கைக்கோளில் மூன்றாவது. இதற்கு முன் இன்சாட்4ஏ மற்றும் இன்சாட் 4பி ஆகிய செயற்கைக்கோள்கள் முறையே 2005ம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2006ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டன."இன்சாட்4சி ஆர்' செயற்கைக்கோளின் எடை இரண்டாயிரத்து 130 கிலோ. தகவல் தொடர்புக்கு முக்கியமானது. அதற்கு ஏற்றவகையில் 12 கேயூ பாண்ட் டிரான்ஸ்பான்டர்கள் இதில் உள்ளன. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். தினமலர் |
சென்னையில் குப்பைகளை அகற்றும் பணி - செய்தித் தொகுப்பு Posted: 02 Sep 2007 01:13 AM CDT 3,000 குப்பைத் தொட்டிகளை உடைத்தது அதிமுக அரசு: கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு ~0~ குப்பையை காவல்துறையினர் அகற்றியது அறிந்து கருணாநிதி அளவற்ற மகிழ்ச்சி ~0~ எக்ஸ்னோராவிடம் ஒப்படைக்க வேண்டுகோள்- எக்ஸ்னோரா தலைவர் எம்.பி. நிர்மல் ~0~ கருணாநிதி உத்தரவு எதிரொலி: சென்னையில் அசுர வேகத்தில் குப்பைகள் அகற்றும் பணி - ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் ஈடுபட்டனர் ~0~ நீல் மெட்டல் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்க :: மாநகராட்சி கவுன்சிலர்கள் வற்புறுத்தல் ~0~ முந்தைய சற்றுமுன்: The Hindu : Tamil Nadu / Chennai News : Garbage cleared with police assistance The Hindu : Tamil Nadu / Chennai News : Garbage issue generates heat at council meet |
யுஎஸ் ஓபன்: ஷரபோவா அதிர்ச்சி தோல்வி Posted: 01 Sep 2007 11:48 PM CDT அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் போட்டிகளில், தரப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளவரும் சென்ற வருடம் கோப்பையை வென்றவருமான மரியா ஷரபோவா தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார். நேற்று நடந்த இரண்டாவது சுற்று ஆட்டத்தில் போலந்து நாட்டின் ராட்வான்ஸ்கா (Agnieszka Radwanska)வை சந்தித்தார். ஒரு கட்டத்தில் எட்டு ஆட்டங்களைத் தொடர்ச்சியாக வென்று, மூன்றாவது செட்டில் சர்வை முறியடித்து முன்னணியில் இருந்த ஷரபோவா, கடைசி ஆறு ஆட்டங்களையும் தவறவிட்டு 4-6, 6-1, 2-6 என்று பதினெட்டு வயதான போலந்து வீராங்கனையிடம் தோல்வி கண்டார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் போட்டிகளில் முன்னணி வீரர்கள் லெய்டன் ஹூவிட், மாரட் சஃபீன் ஆகியோரும் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளனர். SI.com - 2007 US Open - Radwanska stuns Sharapova at U.S. Open Sharapova Is Dethroned at U.S. Open - washingtonpost.com |
You are subscribed to email updates from சற்றுமுன்... To stop receiving these emails, you may unsubscribe now. | Email Delivery powered by FeedBurner |
If you prefer to unsubscribe via postal mail, write to: சற்றுமுன்..., c/o FeedBurner, 549 W Randolph, Chicago IL USA 60661 |
No comments:
Post a Comment