Satrumun Breaking News
Satrumun Breaking News |
சந்திரபாபு நாயுடு மகன் பாலகிருஷ்ணா மகளை மணந்தார் Posted: 26 Aug 2007 06:43 PM CDT ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷின் திருமணம் ஹைதராபாத்தில் நடந்தது. தனது மாமாவும், நடிகருமான பாலகிருஷ்ணாவின் மகள் பிராமிணியை அவர் மணந்தார். எளிமையாக நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் திரைத்துறை பிரபலங்கள் நடிகர் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, நாகேஷ்வர ராவ், ஜெயசுதா, கிருஷ்ணம் ராஜூ உள்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர். உள்ளூர் தொலைக்காட்சி சேனலில் திருமண நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. பிற பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் முதல்வர் ராஜசேகர ரெட்டி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அவரது சார்பில் சபாநாயகர் கே.ஆர். சுரேஷ் ரெட்டி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பாலகிருஷ்ணா, தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், தெலுங்கு சினிமா உலகில் நீங்கா இடம் பெற்ற, மறைந்த என்.டி. ராமராவின் மகன் ஆவார். தினமணி |
அன்னை தெரசாவின் 97-வது பிறந்த நாள் Posted: 26 Aug 2007 06:24 PM CDT Nuns Mark Mother Teresa's Birthday - washingtonpost.com கோல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை 97-வது பிறந்த நாளையொட்டி அன்னை தெரசாவின் கல்லறையில் அஞ்சலி செலுத்துகிறார் "மிஷனரி ஆப் சாரிட்டிஸ்' தலைவி சகோதரி நிர்மலா. Japanese PM's wife visits Mother Teresa's home: "Mother Teresa's legacy lives on" Sister Nirmala :: On September 5, it will be ten years since the death of Mother Teresa |
ஜெர்மானிய பெண்ணுக்கு 53 லட்சம் நஷ்டஈடு Posted: 26 Aug 2007 06:07 PM CDT 11 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் கையை இழந்த ஜெர்மனியைச் சேர்ந்த பெண்ணுக்கு ரூ.53 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996-ம் ஆண்டு ஜெர்மன் நாட்டை சேர்ந்த குந்தா நீயுபர் (Gunda Neubauer) ,53 என்ற பெண் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தார். பஸ்ஸில் அவர், உதய்பூரில் இருந்து மவுண்ட் அபுவிற்கு சென்ற போது பஸ் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் நீயுபர் தனது வலது கையை இழந்தார். இதனால் அவர் ஜெர்மனியில் பார்த்து வந்த வேலையை இழக்க நேரிட்டது. இதனையடுத்து ரூ.11.67 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டுமென கோரி தில்லியில் உள்ள ஜெர்மன் துதரகத்தின் மூலம் நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடுத்தார். இதற்கான நஷ்டஈடு தொகையை வழங்குவதற்கு பஸ்சை விபத்துக்குள்ளாக்கிய டிரைவரும், கண்டக்டரும் தான் பொறுப்பு. எனினும் அவர்களுக்கு பதிலாக பஸ் காப்பீடு செய்யப்பட்டுள்ள நிறுவனம் அந்த பெண்ணுக்கு ஒரு மாதத்திற்குள் ரூ. 53 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. தினமணி The Hindu News :: German national gets Rs 53 lakhs for loss of limb in accident |
பழநியில் ரோப் கார் பெட்டி அறுந்து விழுந்து 4 பேர் பலி Posted: 26 Aug 2007 04:11 PM CDT |
இந்திய தடகள அணியின் மேலாளராக காவல் அதிகாரி சைலேந்திர பாபு Posted: 26 Aug 2007 12:06 PM CDT இந்திய தடகள அணியின் மேலாளராக காவல் அதிகாரி சைலேந்திர பாபு Webdunia ஜப்பானில் நடைபெற உள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் மேலாளராக தமிழக காவல்துறையின் தலைமை ஆய்வாளராக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார். ஜப்பானின் ஒசாகா நகரில் நாளை முதல் செப்டம்பர் 2ஆம் தேதி உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. 190 நாடுகளைச் சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொள்ளும் இப்போட்டிகளில் 12 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது. இந்திய அணியின் மேலாளராக தமிழ்நாடு தடகள சங்கத்தின் துணைத் தலைவராகவும், தமிழ்நாடு காகித ஆலையின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாகவும்ட உள்ள் சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார். இது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. நமது அணியில் சில சிறந்த வீரர்களும், வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் சிறப்பாக சாதித்து பதக்கங்களுடன் திரும்புவார்கள் என்று நம்பிக்கையுடன் உள்ளேன் என்று தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பு குறித்து சைலேந்திர பாபு கூறியுள்ளார். |
செவ்வாய்க்கிழமை சந்திர கிரகணம் Posted: 26 Aug 2007 12:04 PM CDT செவ்வாய்க்கிழமை சந்திர கிரகணம் ஞாயிறு, 26 ஆகஸ்ட் 2007( 13:40 IST ) Webdunia ஆகஸ்ட் 28ஆம் தேதி ஏற்பட உள்ள முழுச் சந்திர கிரகணம் பிற்பகல் 2.21 முதல் 5.54 வரை நிகழ்கிறது. ஆனால் அதனை 16 நிமிடங்களுக்கு மட்டுமே இந்தியாவில் காண முடியும். அந்த 16 நிமிடங்களும் அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் மட்டுமேத் தெரியும். |
Posted: 26 Aug 2007 11:59 AM CDT தமிழகம் முழுவதும் உஷார் நிலை முன்னெச்சரிக்கையாக 700 பேர் கைது ஆகஸ்ட் 26, 2007 சென்னை: ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து தலைநகர் சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கோயம்பேடு பஸ் நிலையம், சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வட மாநிலங்களிலிருந்து வரும் ரயில்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. இதேபோல கோவையிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நகர மற்றும் மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது. மேலும் தமிழத்தின் இதர பகுதிகளில் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்ள், கோவில்கள், பஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இடங்களிலும் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜாமீனில் வெளியே இருக்கும் குற்றவாளிகள் உட்பட 700க்கும் மேற்பட்டோர் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர். wwww.thatstamil.com |
RJD தலைவராக லாலு-ஆறாம் முறையாகத் தேர்வு. Posted: 26 Aug 2007 10:20 AM CDT |
ஹைதராபாத் குண்டுவெடிப்பு: ஒருவர் கைது. Posted: 26 Aug 2007 10:13 AM CDT ஹைதராபாத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 50 பேர் பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இக்குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தான், வங்கதேசத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள் பின்னணியில் இருந்துள்ளதாக ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி தெரிவித்துள்ளார். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் நாக்பூரில் தயாரிக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இக்குண்டு வெடிப்புக்கு உதவியதாக ஒருவரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். தினமலர் |
பாலஸ்தீனத்திற்கு இந்தியா சார்பில் பள்ளிக்கூடம், மருத்துவமனை. Posted: 26 Aug 2007 10:05 AM CDT பாலஸ்தீனத்தில் காஸா நகரில் இந்திய அரசு சார்பில் பள்ளிக்கூடம் கட்டும் பணி துரிதமாக நடந்து வருகிறது. ஜெருசேலம் அருகே கட்டப்படும் இந்த உயர்நிலைப்பள்ளி பகுதி தற்போது ஹமாஸ் பிரிவு நிர்வாகத்திடம் உள்ளது. இந்திய அரசு கட்டி கொடுக்கும் மற்றொரு இருதய நோய் அறுவை சிகிச்சை மையமும் கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளது. பள்ளிக்கூட கட்டத்திற்கு ஜவஹர்லால் நேரு பெயர் சூட்டப்படுகிறது. இந்திய தூதர் சிக்கூர்ரஹ்மான் இத்தகவலை தெரிவித்துள்ளார் |
ஃபிடல் காஸ்ட்ரோ மரணமா? - சாவேஸ் மறுப்பு. Posted: 26 Aug 2007 10:00 AM CDT கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மரணமடைந்து விட்டதாக வந்த தகவல்கள் உண்மையல்ல என காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பரும், வெனிசுவேலா அதிபருமான ஹூகோ சாவேஸ் தெரிவித்துள்ளார். கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ உடல்நலக்குறைவு காரணமாக, அதிபர் பதவியை தனது சகோதரர் ரவுல் காஸ்ட்டிரோவிடம் ஒப்படைத்தார். அதன்பின் அவர் எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் கடந்த 13 ம் தேதி, காஸ்ட்ரோவின் பிறந்த நாளன்று அவர் பொது மக்களுக்கு காட்சி தருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அத்தகைய நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளாததால், உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்திருப்பார் என அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பரும், வெனிசுவேலா அதிபருமான ஹூயூகோ சாவேஸ் இந்த தகவல்களை மறுத்துள்ளார். தினமலர் |
"நலப்பணிகளுக்கு தடையாக இராமதாஸ் இருக்கிறார்" - ஆற்காடுவீராசாமி Posted: 26 Aug 2007 09:56 AM CDT முதல்வர் கருணாநிதி மக்களுக்காக நற்பணிகள் செய்ய முயற்சி மேற்கொள்கிறார். அதற்கு பா.ம.க. இராமதாஸ் தடை போடுகிறார் என்று மின்சாரத் துறை அமைச்சர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். சூளைமேடு பகுதியில் தமிழக அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமை வகித்தார். அவர் தன் தலைமையுரையில் முதல்வர் கருணாநிதி துணை நகரம் கொண்டு வரலாம் என்றார். இதனால் விளைநிலங்கள் வீணாகும் என்று இராமதாஸ் தடை போட்டார். இது போன்று விமான நிலைய விரிவாக்கம், தற்போது டைட்டானியம் தொழிற்சாலை என்று தொடர்ந்து அவர் தடை போட்டுக் கொண்டே வருகிறார் என்று இராமதாஸ் மீது பகிரங்கமாகக் குற்றம்சாட்டி பேசினார். நன்றி: தினமலர் |
அமெரிக்க டென்னிஸ்: சானியா, மகேஷுக்கு இரட்டையர் ஆட்டங்களில் வெற்றி. Posted: 26 Aug 2007 09:49 AM CDT அமெரிக்காவில் உள்ள நியூஹெவன் நகரில் பைலட் பென் டென்னிஸ் போட்டி நடந்தது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா-சாண்டன் ஜிலோ (இத்தாலி) இணை வாகையர் பட்டம் பெற்றது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த இறுதிப் போட்டியில் சானியா இணை 6-1, 6-2 என்ற நேர் கணக்கில் கியூபர்-பிளாக் இணையை வென்றது. இரட்டையர் பிரிவில் சானியா பெற்ற 7-வது பட்டம் இதுவாகும். இந்த ஆண்டு ஸ்டான்போர்டு, சின்சினாட்டி போட்டியிலும், 2006-ம் ஆண்டு கொல்கத்தா, பெங்களூரூவிலும், 2004-ம் ஆண்டு ஹைதராபாத்திலும் பட்டம் பெற்று இருந்தார். இதே போல ஆண்கள் இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதி (இந்தியா)-ஜிமோன்ஜிக் (செர்பியா) இணை வாகையர் பட்டம் பெற்றது. இந்த இணை 6-3, 6-3 என்ற நேர் கணக்கில் மார்சின்- ஸ்பெஸ்டென்பர்க் (போலந்து) இணையை தோற்கடித்தது. |
ரூ 2.30 கோடி கள்ள நோட்டுகள் - ஹைதராபாத்தில் பிடிபட்டன. Posted: 26 Aug 2007 09:40 AM CDT ஹைதராபாத் நகரில் கள்ள நோட்டுகள் அதிகம் புழக்கத்தில் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்து இருந்தது. ஹைதராபாத் விமான நிலையத்தில் துபாயை சேர்ந்த ஒபைது அலி (31) என்பவன் சந்தேகத்தின் பேரில் பிடிபட்டான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாகிஸ்தானில் இருந்து அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளை துபாய் வழியாக மும்பை கொண்டு வந்து அங்கிருந்து ஹைதராபாத்தில் புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. இது தொடர்பாக ஒபைதுவை போலீசார் கைது செய்தனர். மேலும் ஹைதராபாத்தை சேர்ந்த கலியா, முகமது நஜாத், செய்யது கவுஸ்பாசா ஆகியோரையும் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2.30 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஆகும். கடந்த ஏப்ரல் மாதம் கள்ள நோட்டுகளை அவர்கள் ஹைதராபாத்துக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது. ஹைதராபாத்தில் நேற்று நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு இந்த கள்ள நோட்டு கும்பல் பிடிப்பட்டது. இது தொடர்பாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் பல்வீந்தர்சிங் கூறும் போது, இந்த கள்ள நோட்டுகள் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டவை. ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து கடல் வழியாக இந்தியா வந்துள்ளது என்றார். பிடிபட்ட ஒபைது 3 முறை பாகிஸ்தான் சென்று வந்துள்ளான். அங்கிருந்து கள்ள நோட்டுகளை வாங்கி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக மும்பைக்கு கொண்டு வந்துள்ளான். தாவூத் இப்ராகிமின் கும்பலை சேர்ந்தவனில் இவனும் ஒருவன். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். நன்றி:மாலைமலர் |
விதர்பாவில் 8 விவசாயிகள் தற்கொலை Posted: 26 Aug 2007 09:00 AM CDT மகாராஷ்டிரத்தின் விதர்பா பகுதியில் மூன்று நாள்களில் 8 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். யாவத்மால் மாவட்டத்தில் மூன்று பேரும், அமராவதி மாவட்டத்தில் 2 பேரும், வாசிம், பந்த்ரா, புல்தானா மாவட்டங்களில் தலா ஒருவரும் கடன்தொல்லையால் தற்கொலை செய்திருப்பதாக தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. அப்பகுதியில், இந்த மாதத்தில் மட்டும் 65 விவசாயிகள் தற்கொலை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தினமணி Another 8 more cotton farmers commit suicides in Vidarbha: VJAS demands Rs. 2700 per quintal as price of cotton In Vidarbha's darkness, the first glimmer: farmer suicides down :: indianexpress.com Zee News - 259 farmer suicides between May-July 2007: Govt |
திடீர் உடல் நலக்குறைவு: நடிகை குஷ்பு ஆஸ்பத்திரியில் அனுமதி Posted: 26 Aug 2007 07:50 AM CDT நடிகை குஷ்பு கலைஞர் டெலிவிஷனுக்காக "நம்ம குடும்பம்'' என்ற டி.வி. தொட ரில் நடித்து வந்தார். "வேகம்'' என்ற படத்திலும் நடித்தார். "ஜாக்பாட்'' என்ற டி.வி. நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் குஷ்புவுக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி னார். உடனடியாக அவரை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். குஷ்புவின் கணவர் சுந்தர் .சி காரைக்குடியில் "பொறுக்கி'' படப்பிடிப்பில் இருந்தார். தகவல் அறிந்ததும் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அவசரமாக இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார். நேராக ஆஸ்பத்திரிக்கு சென்று குஷ்புவை பார்த்தார். ஒரு வாரம் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவார் என்று தெரிகிறது. இதனால் அவர் சம்பந்தப்பட்ட டி.வி. தொடர் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட் டுள்ளன. மாலைமலர் |
திரு.வி.க.வின் 125-வது பிறந்த நாள் Posted: 26 Aug 2007 07:48 AM CDT தமிழ்தென்றல் என போற்றப்படும் திரு.வி.க.வின் 125-வது பிறந்த நாளை யொட்டி சென்னை பட்டாளம் மார்க் கெட் அருகில் உள்ள சிலைக்கு புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் மாலை அணி வித்தார். இதேபோல் பாரதியஜனதா சார்பில் மாநில தலைவர் இல.கணேசன், பா.ம.க. சார்பில் கட்சி தலைவர் ஜி.கே. மணி ஆகியோரும் மாலை அணிவித்தனர். மாலைமலர் |
Posted: 26 Aug 2007 06:40 AM CDT ஒரிசாவின் காலராவிற்கு 48பேர் பலியாகியுள்ளனர். ரயகடா மாவட்டத்தில் 50பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள செய்தித் தாள்கள் கடந்த சில வாரங்களில் 250பேர் இறந்திருக்கிறார்கள் என செய்திகள் வெளியிட்டுள்ளன. ஆயிரக் கணக்கானோர் காலராவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 10நிமடங்களுக்கு ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதாகவும் சம்பட் எனும் செய்தித் தாள் தெரிவிக்கிறது. ஆனால் மருத்துவ அதிகாரி சீத்தாராம் இதை மறுத்துள்ளார். மாவட்டத்தின் 26 கிராமங்களில் 48 பேர் இதுவரை இறந்துள்ளதாகவும் இதில் 16 கிராமங்களை அவர்கள் அணுக இயலவில்லை(inaccessible) என்றும் அவர் தெரிவித்துள்ளார். அண்மத்திய வெள்ளப் பெருக்கில் குடிநீர் ஆதாரங்கலில் காலரா கிருமிகள் பரவியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். இறப்பு எண்ணிக்கையை பல்வேறு நாளிதழ்களும் பல்வேறு விதமாய் வெளியிட்டுவருகின்றன. 48 dead in Orissa cholera outbreak Hindustan Times, India 70 die as cholera breaks out in parts of Orissa Times of India, India 80 die of cholera in Orissa Hindu, India Cholera outbreak kills 58 tribals in Orissa Reuters India, India |
Posted: 25 Aug 2007 08:33 PM CDT விண்வெளியில் தங்கும் விடுதி 2012-இல் திறக்கும் --------------------------------------------------------- அடுத்த முறை விடுமுறையை கழிக்க எங்கு செல்லலாம்??? ஊட்டி,கொடக்கானல்,ஏற்காடு??? பேசாமல் விண்வெளிக்கு சென்றால் என்ன?? "வெறும்" 4 மில்லியன் டாலர்கள்் செலவில் விண்வெளியில் விடுமுறையை கழிக்கலாம். வெறும் 80 நிமிடங்களில் பூமியை சுற்றி வரலாம் மற்றும் நாள் ஒன்றிற்கு 15 முறை சூரியன் உதிப்பதை பார்க்கலாம்,இது போன்று பல்வேறு விஷயங்களை நீங்கள் 2012-இல் இருந்து செய்ய முடியும். இது பற்றிய செய்திக்கட்டுரை இதோ பேரண்டத்தில் ஓட்டை --------------------------------- இதயத்தில் ஓட்டை,ஓசோன் மண்டலத்தில் ஓட்டை என்று எங்கு பார்த்தாலும் குறை கண்டுபிடித்துக்கொண்டு இருந்த மனிதனுக்கு அடித்தது ஜாக்பாட். அங்கே இங்கே பார்த்துவிட்டு கடைசியில் பேரண்டத்திலேயே (Universe) ஓட்டை இருப்பதாக கண்டுபிடித்து விட்டான். அதுவும் கொஞ்ச நஞ்சமில்லை ,இந்த ஓட்டையின் விட்டம் ஒரு பில்லியன் ஒளி வருடங்கள் இருக்கும் என கணக்கிட்டிருக்கிறார்கள். ஒரு ஒளி வருடம் என்பது ஒளி ஒரு வருடம் முழுதும் பயணம் செய்தால் அடையக்கூடிய தூரம். ஏரிடனஸ் (Eridanus) எனும் நட்சத்திரத்தொகுப்பில்(Constellation) காணக்கூடிய இந்த ஓட்டை ,இருக்கக்கூடிய பகுதியில் நட்சத்திரங்கள் ,அண்டங்கள் (Galaxies), Dark matter இப்படி எதுவுமில்லாமல் வெறுமையாக இருக்கிறதாம். இதுவரை மனிதனுக்கு தெரிந்த வரை மிகப்பெரிய வெற்றிடம் இதுதான்.ஏன் இவ்வளவு பெரிய ஓட்டை இருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை.இது பற்றிய மேலும் செய்திகள் இங்கே சர்க்கரையால் ஆன பேட்டரி ------------------------------------- பேட்டரி தீர்ந்துவிட்டட்தா?? சமயலறைக்கு சென்று சிறிது சர்க்கரை எடுத்து வந்து நிறப்பிவிட்டால் போதும்!! "என்ன உளருகிறான் இவன்" என்கிறீர்களா?? ஜப்பான் நிறுவனமான சோனி (Sony) உருவாக்கியிருக்கும் பேட்டரி உங்களிடம் இருந்தால் இப்படி செய்யலாம். சுற்றுச்சூழலுக்கு எந்த விதத்திலும் மாசு விளைவிக்காத இந்த விதமான பேட்டரி பற்றிய செய்தி இதோ நன்றி: http://www.cnn.com/2007/TECH/08/14/space.hotel.reut/index.html http://www.reuters.com/article/scienceNews/idUSN2329057520070824 http://www.reuters.com/article/scienceNews/idUSSP22885120070824 |
You are subscribed to email updates from சற்றுமுன்... To stop receiving these emails, you may unsubscribe now. | Email Delivery powered by FeedBurner |
Inbox too full? Subscribe to the feed version of சற்றுமுன்... in a feed reader. | |
If you prefer to unsubscribe via postal mail, write to: சற்றுமுன்..., c/o FeedBurner, 549 W Randolph, Chicago IL USA 60661 |
No comments:
Post a Comment