Friday, May 25, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

தொடரும் 'பருத்தி வீரன்' பிரச்னை

Posted: 25 May 2007 07:54 PM CDT

'பருத்தி வீரன்' படத்துக்காகத் தான் செலவழித்த பணத்தைப் பெற்றுத் தரவேண்டும் என இயக்குநர் அமீர் தயாரிப்பாளர் சங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

'பருத்தி வீரன்' படத்தை முதலில் ஸ்டுடியோ ஸ்கிரீன் பட நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்தார். பின்னர் அவர் விலக, இயக்குநர் அமீரே படத் தயாரிப்பை ஏற்றார். ஆனால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட மீண்டும் ஸ்டுடியோ ஸ்கிரீன் நிறுவனமே படத்தை வாங்கி வெளியிட்டது.

படத்துக்காக அமீர் செலவு செய்த பணத்தை (ரூ.1.75 கோடி) படத்தின் வசூலிலிருந்து தருவதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் படம் பெரிய வெற்றி பெற்று, நல்ல வசூலோடு 100வது நாளை நெருங்கியும் அமீருக்கு பணம் தரப்படவில்லை.

Dinamani

ரஜினியின் சிவாஜி - தங்கர்பச்சான் சவால்

Posted: 25 May 2007 07:24 PM CDT

பள்ளிக்கூடம் ரிலீஸ் தாமதமாகிக் கொண்டே வருவதால் எரிச்சலில் இருக்கிறார் அப்படத்தின் இயக்குனர் தங்கர்பச்சான். தாமதத்திற்கு காரணம் ரஜினி! இப்படத்தை விலைபேச வரும் விநியோகஸ்தர்கள் அனைவரும், ரஜினியின் சிவாஜி ரிலீஸ் ஆக போகுது. அதனால் உங்க படத்தின் ரிலீசை தள்ளி போடுங்க என்கிறார்களாம் அவரிடம்.

மேலும் முழு செய்திக்கு "தமிழ்சினிமா.COM"

ஜூன் 26 மதுரை மேற்கு இடைத்தேர்தல்

Posted: 25 May 2007 07:09 PM CDT

மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடைபெறும். தேர்தல் முடிவுகள் ஜூன் 29-ல் அறிவிக்கப்படும்.

மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.வி.சண்முகம் கடந்த பிப். 5-ம் தேதி காலமானார். அதையடுத்து இத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 8. அடுத்த நாள் பரிசீலனை. வாபஸ் பெற கடைசி நாள் 11.

Dinamani

ச: மியான்மர் அரசு மக்களாட்சி போராளி சு கியின் வீட்டு சிறையை நீட்டித்தது

Posted: 25 May 2007 10:32 AM CDT


பல நாடுகளின் வேண்டுகோளைப் புறக்கணித்து மியான்மர் ( பர்மா) இராணுவ அரசு மக்களாட்சி மலர போராடும்நோபல் பரிசு பெற்ற யூ சாங் சு கி அவர்களின் வீட்டுசிறையை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்துள்ளது.

photo courtesy: CBC

Myanmar Extends Suu Kyi's House Arrest - washingtonpost.com

ச: ரிலையன்ஸ் காய்கறி வியாபாரம்: மறுபக்கம்

Posted: 25 May 2007 10:07 AM CDT

ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த இரு வாரங்களாக காய்கறி வியாபாரிகள் புதிதாக திறந்துள்ள ரிலையன்ஸ் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் விவசாயிகளோ தங்களுக்கு சரியான நேரத்தில் நல்ல விலை கிடைப்பதாக மகிழ்ச்சியடைவதாகக் கூறுகின்றனர். இடைத்தரகர்கள் நிர்ணயித்த விலையில் தாங்கள் முன்பு ஒன்றும் சொல்ல முடியாதிருந்ததாகவும் சொன்ன பணத்தை இழுபறியின்றி கிடைப்பதாகவும கூறுகின்றனர்.்

மேலும்.. Farmers happy with Reliance entry in vegetable business

ச: இந்தியாவில் இணைய குற்றங்கள் அதிகரிப்பு: அபாய எச்சரிக்கை

Posted: 25 May 2007 09:55 AM CDT

இந்திய இணைய உலகில் வைரஸ்கள், பாட்ஸ், மின்னஞ்சல் குப்பைகள், போலி வணிகத்தளங்கள் என்பன பல்கி வருவதாக வைரஸ் எதிர்ப்பு நிறுவனம் சிமாண்டிக்கின் இணைய பாதுகாப்பு அபாய அறிக்கை கூறுகிறது.

இதுபற்றி ..Techtree.com India > News > Security > Symantec Puts India on 'Red Alert'

ச:கிரிக்கெட்: இந்தியா 326/0: ஜாஃபர் சதம்

Posted: 25 May 2007 09:18 AM CDT

தாக்காவில் நடைபெறும் இரண்டாம் டெஸ்ட்டின் முதல்நாள் ஆட்டமுடிவில் விக்கெட் இழப்பு எதுவுமின்றி இந்தியா 326 ஓட்டங்களை எடுத்து வலுவான நிலையில் உள்ளது. துவக்க ஆட்டக்காரர்கள் இருவருமே நீரிழப்பினால் சோர்வடைந்து பெவிலியனுக்கு ஆட்டமிழக்காமல் திரும்பினார்கள். அணியின் எண்ணிக்கை 175 இருந்தபோது கார்த்திக் 82 ஓட்டங்களில் தசையிழுப்பு ஏற்பட்டு retired hurt ஆனார். அணித்தலைவர் ராகுலுடன் தொடர்ந்து ஆடிய ஜாஃபரும் அணி எண்ணிக்கை 281 இருக்கையில் 138 ஓட்டங்களை எடுத்த நிலையில் முகாமிற்கு திரும்பினார். ஆட்ட இறுதியில் ராகுல் திராவிட் 88 ஓட்டங்களுடனும் சச்சின் டெண்டுல்கர் ஒன்பது ஓட்டங்களுடனும் ஆடிக்கொண்டு இருந்தனர்.

Deccan Herald - Jaffer shines; India in a commanding position

அலகாபாத்தில் வெடிபொருட்கள் பறிமுதல்.

Posted: 25 May 2007 08:11 AM CDT

நக்சல்களுக்கு இது எடுத்துச் செல்லப்பட்டதா ? ஜீப் டிரைவர் ராஜேஷ் படேலிடம் போலீசார் துருவி துருவி விசாரனை.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து அலகாபாத்திற்கு ஜீப்பில் கொண்டு வரப்பட்ட வெடிபொருட்களை போலீசார் கைப்பற்றினர். நேற்றிரவு வழக்கமான ரோந்து நடவடிக்கையின் போது இவை கைபற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக ஜீப் டிரைவர் ராஜேஷ் படேல் என்பவரை கைது செய்துள்ள காவல்துறையினர், அவரிடம் தொடர்ந்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் தீபக்பட் கூறுகையில், ஜீப்பில் இருந்து 50 கிலோ அமோனியம் நைட்ரேட்டும் 1000 மீட்டர் வெடிமருந்து ஒயர்களும் பறிமுதல் செய்யப்பட்டது என்றார். இவை கல் உடைக்கும் பணிக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்ற அவர், நக்சல்களுக்கு இது எடுத்துச் செல்லப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடப்பதாகச் சொன்னார். கடந்த செவ்வாயன்று கோரக்பூரில் நிகழ்ந்த குண்டு வெடிப்புக்குப் பின், பைசாபாத் மற்றும் பரூக்காப்பாத் ரயில் நிலையங்களில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையிலிருந்து பாகிஸ்தானுக்கு, அன்புடன்!

Posted: 25 May 2007 08:07 AM CDT

தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரையைச் சேர்ந்த இருவர், பாகிஸ்தானுக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
மதுரையை சேர்ந்தவர் மதுரை வீரன் (40). இவர் ஒரு டாக்சி டிரைவர். திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் திருமலைச்சாமி (30). வனத்துறை ஊழியர் இவர். கடந்த 11ம் தேதி இருவரும் மதுரையிலிருந்து சைக்கிளில் ஒரு வித்தியாசமான பயணத்தை தொடங்கியுள்ளனர். தீவிரவாதம் ஒழிய வேண்டும், அன்பு தழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆரம்பித்துள்ள இந்த சைக்கிள் பயணம் பாகிஸ்தானில் நிறைவுறப் போகிறது. மதுரையில் கிளம்பிய இவர்கள் திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம், சென்னை, ஸ்ரீபெரும்புதூர் வழியாக காஞ்சிபுரத்தை வந்தடைந்துள்ளனர். அங்கு மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்தனர். அவரிடம் உலக அமைதியை வலியுறுத்தி கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் பேசுகையில், ஆண்டுதோறும் இதுபோல ஒரு பயணத்தை மேற்கொள்கிறோம். 2002ம் ஆண்டு டெல்லிக்குப் பயணித்தோம். பின்னர் காஷ்மீருக்கும் சென்றோம். இது எங்களின் 18வது பயணமாகும். உலக மக்கள் அனைவரும் வன்முறை, தீவிரவாதம் ஒழிந்து, அமைதியாக வாழவேண்டும் என்பதே எங்களுடைய குறிக்கோள் என்றனர். தொடர்ந்து சைக்கிளிலேயே பயணம் செய்து ஜூன் 15ம் தேதிக்குள் பாகிஸ்தானின் லாகூகர் நகருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். காஞ்சிபுரத்திலிருந்து கிளம்பி வேலூர், ஓசூர், பெங்களூர், மத்திய பிரதேசம், உ.பி., ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் வழியாக வாகாவை அடைகின்றனர். பின்னர் அங்கிருந்து லாகூர் செல்கின்றனர்.

மக்களுக்காக நிலம் தராத விஜயகாந்த் : கருணாநிதி.

Posted: 25 May 2007 08:01 AM CDT

சொத்துக்களைக் குவித்தும், மாட மாளிகைகளைக் கட்டியும் வைத்துள்ள சில மனிதர்களுக்கு மக்களுக்காக நிலம் கொடுக்க மனம் வரவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை மறைமுகமாக சாடியுள்ளார் முதல்வர் கருணாநிதி. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை, சொத்துக்களைக் குவித்துக் கொண்டு, மாட மாளிகைகளைக் கட்டிக் கொண்டு இருக்கும் சிலருக்குத்தான் மக்களுக்காக கணிசமான நிலத்தைத் தர மனம் வரவில்லை. சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்காக எடுக்கப்படும் நிலங்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்கும். பெரிய பணக்காரர்களை விட ஏழை மக்களுக்கு எப்போதுமே பெரிய மனசு உண்டு. சிலரைப் போல, சொத்து போகிறதே என்று கூப்பாடு போடுவதில்லை, மக்கள் நலனுக்காக தங்களது நிலத்தை இழக்க எப்போதுமே அவர்கள் தயங்கியதில்லை. அரசியல் உள்நோக்கம் என்று வம்பாக குற்றம் சாட்டுவதும் இல்லை. கலைஞர் டிவி குறித்து ஒரு வாரப்பத்திரிக்கை மிக மோசமாக விமர்சித்திருக்கிறது. திருப்பித் தாக்கும்போது அதைத் தாங்கும் தைரியத்துடன் அந்தப் பத்திரிக்கை இருக்கட்டும். எனது வாழ்க்கையில் விமர்சனங்களை சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டுள்ளேன். அவமானமாக ஒருபோதும் நான் கருதியதில்லை. பொறியியல் கவுன்சிலிங்கை ஒரே இடத்தில் நடத்தினால் அது வேகமாகவும், வெளிப்படையாகவும் இருக்கும் என்பதால்தான் சென்னையில் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டது. வெளியூர்களிலிருந்து சென்னைக்கு கவுன்சிலிங்குக்காக வரும் மாணவர்களின் நலனுக்காக கவுன்சிலிங்குக்கான கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல பேருந்துக் கட்டணத்திலும் பாதி அளவுக்கு சலுகை தரப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்குள் அரசியல் மாற்றம் ஏற்படும் என வைகோ கூறி வருவது வியப்பாக உள்ளது. ஒரு வேளை அவரது கட்சியுடனான தொடர்பை அம்மா இந்த ஆண்டு இறுதிக்குள் துண்டித்துக் கொள்ளப் போகிறாரோ என்னவோ. திருப்பூர் டாஸ்மாக் மதுக் கடை பாரில் ஏற்பட்ட விபத்தில் 29 பேர் இறந்துள்ளனர். இந்த பாரை திமுகவைச் சேர்ந்தவர் நடத்தியதாக கூறுவது தவறு. உண்மையில் அந்த பாரை நடத்தி வந்தவர் மதிமுகவைச் சேர்ந்தவர் என்று பத்திரிக்கைகள் அனைத்திலும் செய்தி வந்துள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

ச; கிரிக்கெட்: இந்தியா முதலில் பேட்டிங்: 169/0

Posted: 25 May 2007 03:24 AM CDT

இன்று ஷேரே பங்களா நேஷனல் ஸ்டாடியத்தில் துவங்கிய இரண்டாம் டெஸ்டின் முதல்நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற பங்களாதேச அணி இந்தியாவை முதலி ஆட அழைத்தது. முதலில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக்கும் வாசிம் ஜாஃபரும் ஆட்ட்மிழக்காமல் 169 ஓட்டங்கள் எடுத்துள்ளனர். முதல் ஆட்டத்தில் தங்க முட்டை வாங்கிய ஜாஃபர் 80 ஓட்டங்களும் கார்த்திக் 82 ஓட்டங்களும் எடுத்துள்ளனர்.

ச: மம்தா வெளிநடப்பு: சமாதான பேச்சு முறிவு

Posted: 25 May 2007 03:22 AM CDT

கடந்த சில நாட்களாக பரபரப்பாக எதிர்ப்பார்க்கப் பட்ட நந்திகிராம அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜியின் வெளிநடப்பால் பிசிபிசுத்தது. இடதுசாரிகள் போலீஸ் துப்பாக்கிச்சூட்டை நியாயப் படுதும் விதமாக தீர்மானம் கொண்டுவந்ததாக குற்றம் சாட்டி அவர் தனது கட்சியினருடன் வெளிநடப்பு செய்தார்.

விவரங்களுக்கு..Mamata walkout ends meet

ச:பசுமை ஆஸ்கார்: இரண்டு இந்திய திட்டங்கள் பரிசீலனையில்

Posted: 25 May 2007 03:12 AM CDT

உணவு கழிவுகளிலிருந்து சமையல்வாயுவையும் மின்சக்தியையும் தயாரிக்க உதவும் பையோ டெக் என்ற கேரள நிறுவனமும் நூற்றுக்கணக்கான கர்நாடக கிராமங்களில் சாணியிலிருந்து சமையல்வாயு தயாரிக்க உதவும் SKG சங்க என்ற கர்நாடக நிறுவனமும் பசுமை ஆஸ்கார் என வழங்கப்படும் ஆஷ்டன் விருதுகளுக்கு பரிசீலிக்கப் படுகின்றன.

மேல்விவரங்களுக்கு..The Hindu News Update Service

ச: ஹைதராபாத் குண்டுவெடிப்பு: மகாராட்டிரத்தில் ஒருவர் கைது

Posted: 25 May 2007 02:33 AM CDT

ஹைதரபாத்தின் மெக்காமஜித்தில் வெடித்த குண்டுகளில் இருந்த RDXஐ பெற உதவியதாக சோயப் ஜாகிர்தார் என்பவரை மகாராட்டிய காவல்துறையினர் ஜல்னா நகரில் அவரது வீட்டில் கைது செய்து ஆந்திர கவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இன்றைய வெள்ளி தொழுகைக்கு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.


மேலும்..The Hindu News Update Service

ச: நெல்சன் மாண்டெலாவிற்கு உலக தொழிலாளர் நிறுவன விருது

Posted: 25 May 2007 02:24 AM CDT

தனது முதல் வருடாந்திர ILO Decent Work award ஐ முன்னாள் தென்னாப்பிரிக்க அதிபர் நெலசன் மாண்டெலாவிற்கு உலக தொழிலாளர் நிறுவனம் (International Labour Organisation) வழங்கியுள்ளது. அவருடன்அமெரிக்காவில் பென்சில்வேனியாவிலுள்ள பிட்ஸ்பர்க் பல்கலையில் தென்னமெரிக்க ஆய்வை மேற்கொண்டிருக்கும் முனைவர் கார்மெலோ மேசாலகோ அந்த விருதை பங்கு கொள்கிறார்.

விவரங்களுக்கு..The Hindu News Update Service

ச: வசுந்தரா ராஜே விமானம் அவசர தரையிறக்கம்

Posted: 25 May 2007 02:15 AM CDT

ராஜஸ்தான் மாநில முதல்வர் சென்ற மாநில அரசின் விமானம் நுட்பக் கோளாறினால் தில்லியின் இந்திராகாந்தி பன்னாட்டு விமானநிலையத்தில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அவசர நிலையில் தரையிறங்கியது. தான் மயிரிழையில் தப்பியதற்கு இறைவனுக்கும் இராஜஸ்தான் மக்களின் ஆசிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.


Vasundhara Raje's plane makes emergency landing- Hindustan Times

ச: தென்னாப்பிரிக்காவில் சாலைவிபத்தில் 15 பேர் மரணம்

Posted: 25 May 2007 02:07 AM CDT

தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் நடந்த நெடுஞ்சாலை விபத்து ஒன்றில் பெரும்பாலும் குழந்தைகள் உட்பட 15 பேர் இறந்தனர் என செய்தி குறிப்பொன்று கூறுகிறது. ஐந்து வாகனங்கள் ஈடுபட்ட இந்த விபத்தில் இரண்டு மினிபஸ் டாக்ஸிகள், ஒரு டிரக் மற்றும் இரு கார்கள் அடிபட்டன. இது பற்றி மேலுமறிய..The Hindu News Update Service

பதவியை இழக்கவும் தயார் - கருணாநிதி.

Posted: 24 May 2007 11:47 PM CDT

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தருவதற்காக தனது பதவியை இழக்கவும் தயாராக இருப்பதாக முதலமைச்சர் மு. கருணாநிதி கூறியுள்ளார்.
இந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது.இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் அவ்ர்கள், பிற்படுத்தப்பட்டோருக்கான நாடாளுமன்ற குழுவை அமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தாம் உறுதிகொண்டிருப்பதாக கூறினார்.இந்தக் குழு அமைந்தால் தான் பிற்படுத்தப்பட்டோரின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை நீதியே குறுக்கீடு செய்கிறது என்றும், இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் வகையில் போடப்பட்ட உத்தரவை உச்சநீதிமன்றமே உடைத்தெறிந்துவிட்டது என்றும் அவர் கூறினார்.இட ஒதுக்கீடு கோரி காலங்காலமாக போராடி வருவதாகவும், இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்றும் கூறிய கருணாநிதி, இதற்கு பதவி தடையாக இருந்தால் அதைத் துறக்கவும் தயங்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.மாநாட்டில் மத்திய மாநில அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சன் டிவி அதிகாரிக்கு கொலை மிரட்டல்.

Posted: 24 May 2007 11:37 PM CDT

சன் டிவியின் துணைத் தலைவரும், தலைமை நிகழ்ச்சி அதிகாரியுமான ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா, தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார். நேற்று காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த ஹன்ஸ் ராஜ் சக்ஸேனா, ஆணையர் லத்திகா சரணைச் சந்தித்து ஒரு புகார் மனுவைக் கொடுத்தார். அதில், தனது செல்போனைத் தொடர்பு கொண்ட ஒருவர், உடனடியாக சன் டிவியிலிருந்து விலக வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை, கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று மிரட்டியதாக தனது புகாரில் கூறியுள்ளார் சக்ஸேனா. இதையடுத்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டனர். அதில், பி.சி.ஓ.விலிருந்து அந்த தொலைபேசி அழைப்பு வந்தது தெரிய வந்தது. விரைவில் கொலை மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது கண்டுபிடிக்கப்படும் என லத்திகா சரண் தெரிவித்துள்ளார். புதிதாக தொடங்கப்படவுள்ள கலைஞர் டிவிக்கு சன் டிவியிலிருந்தே ஆட்களை இழுக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் சன் டிவியின் துணைத் தலைவருக்கு கொலை மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

'கருப்பனைக் கட்டிக்க மாட்டேன்' - பிஹார் மணப்பெண் பிடிவாதம்

Posted: 24 May 2007 09:41 PM CDT

மாப்பிள்ளை கறுப்பாக இருப்பதால் பிஹாரை சேர்ந்த ரஜனி திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை. மணப்பையன் சரல் பிரசாத்தின் இரண்டு நாள் உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பின், மணமுடிப்பு பரஸ்பர ஒப்புதலுடன் நடந்தேறியது.

Bride turns down dark groom | Reuters

கென்யாவை அச்சுறுத்தும் தொடரும் வன்முறை சம்பவங்கள்

Posted: 24 May 2007 09:00 PM CDT

தடை செய்யப்பட்ட முங்கிகி (Mungiki) மதப் பிரிவை சேர்ந்தவர்கள் கென்யாவின் தலைநகருக்கு வெளியே தலையைக் கொய்த பிணங்களை காலடித்தடமாக விட்டுவைப்பதன் மூலம் பீதியைக் கிளப்பியிருக்கிறார்கள்.

டிசம்பரில் நடக்க இருக்கும் தேர்தலை நிலைகுலைய வைக்கும் நோக்குடன் இந்த கொடூரக் கொலைகள் நடக்கினறன. கடந்த மூன்று மாதத்தில் பன்னிரெண்டு பேர் இவ்வாறு இறந்திருக்கின்றனர்.

Banned Sect Blamed for Kenya Beheadings | World Latest | Guardian Unlimited: "Police launched a manhunt to quash the Mungiki, which emerged in the 1990s inspired by the Mau Mau rebellion against colonial rule. Clashes have broken out every election year since 1992, and this year has been no different. Besides the Mungiki violence, land disputes in the Mount Elgon area, 320 miles northwest of Nairobi, have killed more than 140 people and forced tens of thousands from their homes."

ஏழாவது முறையாக ஏசி மிலான் வெற்றி

Posted: 24 May 2007 08:35 PM CDT

ஐரோப்பிய கால்பந்து குழுக்களுக்கான சாம்பியன் கோப்பையை ஏசி மிலான் வென்றுள்ளது. இத்தாலியின் ஏசி மிலான் இங்கிலாந்தின் லிவர்பூல் அணியை 2-1 என்னும் கோல் வித்தியாசத்தில் தோற்கடித்து கோப்பையை மீட்டது.

AC Milan crowned Champions- Sports-Sections-TIMES NOW.tv

No comments: