Satrumun Breaking News
Satrumun Breaking News |
புழல் சிறை அருகே 65 வீடுகள் சாம்பல் Posted: 10 May 2007 05:22 PM CDT புழல் சிறைச்சாலை பின்புறம் உள்ள திருமலை நகர் குடியிருப்பு பகுதியில் 65 வீடுகள் நேற்று பிற்பகல் தீப்பற்றி எரிந்து சாம்பலானது. இதில் ஒரு பெண் மயங்கிச் சாய்ந்தார். மற்றொருவர் காயம் அடைந்தார். இங்கு 100க்கும் மேற்பட்ட குடிசைகள், ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட வீடுகள் உள்ளன. தகவல் அறிந்து மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, திருவள்ளூர் கலெக்டர் ரன்வீர் பிரசாத், புழல் பேரூராட்சி தலைவர் மகாதேவி அன்பழகன், மற்றும் அதிகாரிகள் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவற்றை வழங்கினர். அதே பகுதியில் உள்ள தனியார் இடத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். |
Posted: 10 May 2007 05:10 PM CDT சென்னை, மே 11: முதல்வர் கருணாநிதியின் சட்டப் பேரவை பொன் விழா இன்று தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி, மக்களவை தலைவர் சோம்நாத் சட்டர்ஜி உட்பட பல தலைவர்கள் பங்கேற்று கருணாநிதியை பாராட்டுகிறார்கள். தமிழக முதல்வர் கருணாநிதி, சட்டப் பேரவை உறுப்பினராக கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இதை பாராட்டி, "சட்டப் பேரவையில் கருணாநிதி பொன் விழா" சென்னையில் 2 நாட்கள் நடத்தப்படுகிறது. விழாவை முன்னிட்டு சென்னை நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது. முதல் நிகழ்ச்சியாக, சட்டப் பேரவையில் இன்று காலை 10 மணிக்கு விழா தொடங்குகிறது. கருணாநிதியை ஆளுநர் பர்னாலா மற்றும் சட்டமன்றக் கட்சி தலைவர்கள் பாராட்டி பேசுகிறார்கள். மாலை 6 மணிக்கு தீவுத்திடலில் பொன் விழா கூட்டம் நடக்கிறது. இதற்காக மாநகரில் 13 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என போலீஸ் கமிஷனர் லத்திகா தெரிவித்துள்ளார். மேலும், நகரின் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். விழாவுக்கு 10 ஆயிரம் மாநகர போலீசாரும், 3 ஆயிரம் தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். முக்கிய விருந்தினர்களின் வாகன அணிவகுப்பு செல்லும் நேரத்தில், ஒரு சில சாலைகளில் போக்குவரத்து மாற்றியமைக்கப்படும். அமைச்சர் க.அன்பழகன் தலைமை தாங்குகிறார். பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர்கள் வி.பி.சிங், ஐ.கே.குஜ்ரால், மத்திய அமைச்சர்கள் லாலு பிரசாத் யாதவ், சரத்பவார், ராம்விலாஸ் பாஸ்வான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் மற்றும் தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சித் தலைவர்கள் வாழ்த்திப் பேசுகிறார்கள். முதல்வர் கருணாநிதி ஏற்புரையாற்றுகிறார். பொன்விழா மலர், விழாவில் வெளியிடப்படுகிறது. விழாவின் 2ம் நாள் நிகழ்ச்சியாக, நாளை காலை 11 மணிக்கு பேரவையில், மக்களவை தலைவர் சோம்நாத் சட்டர்ஜி கலந்து கொண்டு, முதல்வரை வாழ்த்தி பேசுகிறார். Dinakaran |
Posted: 10 May 2007 03:50 PM CDT கோவைத் தம்பி-திரைப்படத் தயாரிப்பாளர் சீமான்-திரைப்பட இயக்குநர் சிம்பு-திரைப்பட நடிகர் "ஜெயம்' ரவி-திரைப்பட நடிகர் ஜீவா-திரைப்பட நடிகர் விஷால்-திரைப்பட நடிகர் த்ரிஷா-திரைப்பட நடிகை நவ்யா நாயர்-திரைப்பட நடிகை கஞ்சா கருப்பு-நகைச்சுவை நடிகர் ஆர்த்தி-நகைச்சுவை நடிகை வினித்-குணசித்திர நடிகர் பாலகுமாரன்-இயற்றமிழ் கலைஞர் வண்ணதாசன்-இயற்றமிழ் கலைஞர் கவிஞர் கலாப்பிரியா-இயற்றமிழ் கலைஞர் சுப.வீரபாண்டியன்-இலக்கியப் பேச்சாளர் மரபின் மைந்தன் முத்தையா-இலக்கியப் பேச்சாளர் கீதா ராஜசேகர்-இசை ஆசிரியர் சஞ்சய் சுப்ரமணியம்-குரலிசைக் கலைஞர் ஸ்ரீவத்சவா-மிருதங்கக் கலைஞர் சரஸ்வதி ராஜகோபாலன்-வீணைக் கலைஞர் டாக்டர் இரா.செல்வகணபதி-சமயச் சொற்பொழிவாளர் இறையன்பன் குத்தூஸ்-இறையருட்பாடகர் இஞ்சிக்குடி சுப்ரமணியன்-நாதஸ்வர கலைஞர் மலைக்கோட்டை எஸ்.சுப்ரமணியன்-தவில் கலைஞர் கிரிஜா பக்கிரிசாமி-பரதநாட்டிய ஆசிரியர் திவ்யா கஸ்தூரி-பரதநாட்டிய கலைஞர் சிந்தூரி-பரதநாட்டிய கலைஞர் திருநங்கை நர்த்தகி நடராஜ்-நாட்டிய நாடகக் கலைஞர் ஆர்.முத்தரசி-நாட்டிய நாடகக் கலைஞர் கவிஞர் இன்குலாப்-நாடக ஆசிரியர் பேராசிரியர் இரா.ராஜு-நவீன நாடக இயக்குநர் தங்கராஜ் என்ற எம்எல்ஏ தங்கராஜ்-நாடக நடிகர் வி.மூர்த்தி-நாடக நடிகர் தேவிப்பிரியா என்ற ரமணதேவி-நாடக நடிகை வி.ஆர்.திலகம்-பழம்பெரும் நாடக நடிகை சி.ஐ.டி.சகுந்தலா-பழம்பெரும் திரைப்பட நடிகை பா.விஜய்-திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார்-திரைப்பட பாடலாசிரியர் கபிலன்-திரைப்பட பாடலாசிரியர் இயக்குநர் பாலா-திரைப்பட கதாசிரியர் வித்யாசாகர்-திரைப்பட இசையமைப்பாளர் மது பாலகிருஷ்ணன்-திரைப்பட பின்னணி பாடகர் திப்பு-திரைப்பட பின்னணி பாடகர் பாம்பே ஜெயஸ்ரீ-திரைப்பட பின்னணி பாடகி எம்.வி.பன்னீர்செல்வம்-திரைப்பட ஒளிப்பதிவாளர் விட்டல்-திரைப்பட எடிட்டர் நேஷனல் செல்லையா-திரைப்பட புகைப்படக் கலைஞர் அதிவீர பாண்டியன்-திரைப்பட பத்திரிகை ஆசிரியர் கே.அம்மச்சி விராமதி-நாட்டுப்புற இசைக் கலைஞர் ஆக்காட்டி ஆறுமுகம்-நாட்டுப்புற இசைக் கலைஞர் டாக்டர் கே.ஏ.குணசேகரன்-நாட்டுப்புற இசை ஆய்வாளர் டிராட்ஸ்கி மருது-ஓவியக் கலைஞர் சி.ஜெ.பாஸ்கர்-சின்னத்திரை இயக்குநர் விடுதலை-சின்னத்திரை கதை வசனகர்த்தா வேணு அரவிந்த்-சின்னத்திரை நடிகர் போஸ் வெங்கட்-சின்னத்திரை நடிகர் மௌனிகா-சின்னத்திரை நடிகை தீபா வெங்கட்-சின்னத்திரை குணச்சித்திர நடிகை டி.ஜி.தியாகராஜன்-சின்னத்திரை தயாரிப்பாளர் அலெக்ஸ்-தந்திரக்காட்சி கலைஞர் |
ச:தூக்கிலிடப்பட்டவரின் வித்தியாசமான கடைசி ஆசை Posted: 10 May 2007 02:12 PM CDT அமெரிக்காவில் நாஷ்வில், டென்னிசியில் தூக்கிலிடப்பட்ட பிலிப் ஒர்க்மேன் கடைசி ஆசையாக தனக்கு வழங்கப்பட்ட உணவுத் தேர்வுக்குப் பதில் வெளியே ஏழை யாருக்கேனும் ஒரு வெஜிட்டேரியன் பீசாவை வழங்குமாறு சிறை அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். ஆனால் அவரின் ஆசையை அதிகாரிகள் நிறைவேற்ற மறுத்துவிட்டனர். ஒர்க்மேனின் விருப்பத்தை அறிந்த பொதுமக்கள் அங்குள்ள யூனியன் ரெஸ்க்யூ மிஷன் என்னும் சேவை அமைப்புக்கு சுமார் 170 பிசாக்களை நன்கொடையாக அனுப்பினர். Executed man gets last meal wish after he dies |
நேப்பாளத்துக்கு எண்ணெய் வழங்குவதை இந்தியன் ஆயில் நிறுத்தியது Posted: 10 May 2007 01:50 PM CDT இந்திய எண்ணெய் நிறுவனம் கடன் அடைக்கத் தவறிய நேப்பாளத்துக்கு பெற்றோலிய எண்ணெய் வழங்குவதை நிறுத்தியதைத் தொடர்ந்து அங்கே பெற்றோல் தட்டுப்பாடு பரவலாகியுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் பட்ட 90 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையிலான கடனை அடைக்க முடியாத நிலையில் தமது நிறுவனம் உள்ளதாக நேப்பாள அரச எண்ணெய் நிறுவனத்தின் சார்பில் பேசிய நிர்வாகி தெரிவித்தார். நேப்பாள பெற்றோல் நிலையங்களுக்கான சப்ளை 60 வீதத்தினால் குறைக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். பல நிலையங்களில் பெற்றோல் தீர்ந்து விட்டது. இமயமலைத் தேசமான நேப்பாளத்துக்கு பெற்றோலிய எண்ணெய்களை வழங்கி வருகின்ற ஒரு ஒரே நாடு இந்தியா மட்டுமே. BBC NEWS | South Asia | Nepal hit hard by India oil cuts |
ஜனநாயகத்தை மீண்டும் நிலை நிறுத்த முயற்சிக்காத வரை உதவி கிடையாது: ஐரோப்பிய கமிஷன் Posted: 10 May 2007 01:46 PM CDT ஜனநாயகத்தை மீண்டும் நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்காத வரை பிஜிக்கு நிதியுதவி கிடையாது என பசிபிக் நாடுகளுக்கான ஐரோப்பிய கமிஷன் பிரதிநிதி ராபர்டோ ரிடால்பி தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், பிஜிக்கு நிதியுதவி அளிப்பதென்பது அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்ட அந் நாட்டு இடைக்கால ராணுவ அரசு எடுக்கும் நடவடிக்கையையும், அங்கு மனித உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பதையும் பொறுத்தே அமையும் என்றார். Dinamani |
அஸ்லன்ஷா ஹாக்கி: இந்தியா ஆர்ஜென்டீனாவைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேற்றம் Posted: 10 May 2007 01:41 PM CDT இபோ (மலேசியா), மே 10: 16-வது அஸ்லன்ஷா கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி பெற்றது. மலேசியாவில் உள்ள இபோ நகரில் புதன்கிழமை மாலை நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோற்கடித்தது. இவ் வெற்றி மூலம் மொத்தம் 6 புள்ளிகளைச் சேர்த்திருந்தது இந்தியா. ஆஸ்திரேலியா, ஆர்ஜென்டீனா ஆகிய அணிகளும் "ஏ' பிரிவில் தலா 6 புள்ளிகளைச் சேர்த்திருந்தன. இதையடுத்து, கோல் வித்தியாசத்தில் ஆர்ஜென்டீனா அரையிறுதி வாய்ப்பை இழந்தது. ஆஸ்திரேலியா முதலிடத்தையும், இந்தியா இரண்டாம் இடத்தையும் பெற்று, அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறின. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியா அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மலேசியாவுடன் மோதல்: வெள்ளிக்கிழமை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் போட்டியை நடத்தும் மலேசியாவுடன் இந்தியா விளையாடுகிறது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் கொரியாவை எதிர்த்து ஆஸ்திரேலியா விளையாடுகிறது. கொரியா வெற்றி: செவ்வாய்க்கிழமை ஒத்திவைக்கப்பட்டு, புதன்கிழமை தொடர்ந்த ஆட்டத்தில் கொரியா 4-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானின் சவாலை முறியடித்தது. Dinamani |
காமன்வெல்த் போட்டிக்கு ரூ. 3,566 கோடி தேவை அமைச்சர் தகவல் Posted: 10 May 2007 01:39 PM CDT புதுதில்லி, மே 10: 2010-ம் ஆண்டு இந்தியா நடத்த உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு ரூ. 3,566 கோடி தேவை என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார். இதில், ஸ்டேடியம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளுக்காக இந்திய விளையாட்டு ஆணையம் மதிப்பிட்டுள்ள ரூ. 1000 கோடியும் அடங்கும் என மக்களவையில் புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன், அப் போட்டிக்கு வீரர்களைத் தயார்படுத்துவதற்காக மட்டும் நடப்பு ஆண்டில் ரூ. 300 கோடி தேவை என்பதையும் வலியுறுத்தியுள்ளார். இந்த 300 கோடி வீரர்களுக்கான பயிற்சிக்கு மட்டுமே தவிர, கட்டமைப்பு வசதிகள் எதற்கும் பயன்படுத்தப்படமாட்டாது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். Dinamani |
ச:டாக்டர் படிப்பின் ஒருபகுதியாக கிராமங்களில் கட்டாயப்பணி Posted: 10 May 2007 11:50 AM CDT மருத்துவப் படிப்பின் ஒரு பகுதியாக மருத்துவ மாணவர்கள் கிராமங்களில் கட்டாயப் பணியாற்ற வகை செய்யும் திட்டம் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. டாக்டர் படிப்பின் ஒருபகுதியாக கிராமங்களில் கட்டாயப்பணி எம்.எஸ்.என் தமிழ் |
Links for 2007-05-09 [del.icio.us] Posted: 10 May 2007 12:00 AM CDT |
கொல்கொத்தாவில் இரயிலோட்டம் நிறுத்தம் Posted: 05 May 2007 06:08 AM CDT மஜிஸ்ட்ரேட் ஒருவரை வாகனாரையில் ஏற்றாததைக் குறித்த எழுந்த சர்ச்சையில் சம்பந்தப் பட்ட வாகனஓட்டி(Motorman)யையும் வாகனகாவலரை(Guard)யும்கைது செய்ய ஆணையிட மற்ற இரயில் தொழிலாளர்கள் கிளர்ச்சி செய்து மாநகர இரயில் போக்குவரத்து சியால்தா டிவிஷனின் மூன்று பக்கங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளது.. இரயில்வே மேலதிகாரிகள் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இது பற்றி The Hindu News Update Service |
"பந்த்' நாளில் முன்பதிவு செய்த ரயில் பயணிகளுக்கு திருப்பி வழங்கிய கட்டணம் ரூ.7.80 லட்சம் Posted: 04 Apr 2007 09:51 AM CDT சென்னை, ஏப். 4: தமிழகத்தில் "பந்த்' நடைபெற்ற மார்ச் 31-ம் தேதி மட்டும் ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழு கட்டணத் தொகையாக 3,905 பயணிகளுக்கு ரூ. 7 லட்சத்து 80 ஆயிரத்து 260 திருப்பி வழங்கப்பட்டது. பந்த் நாளுக்கு முந்தைய நாளான மார்ச் 30-ம் தேதி மட்டும் முன்பதிவு ரத்து செய்த 3,148 பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத் தொகையாக ரூ. 5 லட்சத்து 82 ஆயிரத்து 628 திருப்பி வழங்கப்பட்டது. இந்த இருநாள்களில் மட்டும் தெற்கு ரயில்வேக்கு பயணிகள் கட்டண வசூலில் ரூ. 13 லட்சத்து 62 ஆயிரத்து 888 இழப்பு ஏற்பட்டது. |
Posted: 04 Apr 2007 09:58 AM CDT சென்னை, ஏப். 4: நாடு முழுவதும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் விழாக்காலங்கள் மற்றும் சாதாரணக் காலங்களில் பயணக் கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. சாதாரணமாக எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி முதல் வகுப்புகளில் விழாக் காலங்களில் 3 சதவீதமும், சாதாரண காலங்களில் 6 சதவீதமும் குறைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. 102 இருக்கைகள் வசதி கொண்ட ஏசி சேர் காரில் விழாக் காலத்தில் 4 சதவீதமும், சாதாரண காலத்தில் 8 சதவீதமும் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதேபோல ஏசி 2 அடுக்கு, ஏசி 3 அடுக்கு பெட்டிகளுக்கும் பயணக் கட்டணத்தில் தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது நாடு முழுவதும் இயக்கப்படும் 90 சதவீதம் முக்கிய ரயில்களில் இக் கட்டணக் குறைப்பு அல்லது சலுகை ஏதும் வழங்கப்படாது என்று ரயில்வே துறை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. எனினும் சில குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் மட்டும் இச் சலுகை வழங்கப்படும் என்று ரயில்வே உத்தரவிட்டுள்ளது. வைகை, பல்லவன், பிருந்தாவன், லால்பாக், சென்னை-பெங்களூர் இடையே மாலையில் இயக்கப்படும் சதாப்தி, சப்தகிரி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் இந்தச் சலுகை வழங்கப்படும் எனத் தெரியவந்துள்ளது. எனினும், பாண்டியன், மலைக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி, தமிழ்நாடு, திருக்குறள், இன்டர்சிட்டி, நீலகிரி, கோவை உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் கட்டணக் குறைப்புச் சலுகை ஏதும் வழங்கப்படாது என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. Dinamani |
நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகள் - மலிங்கா சாதனை Posted: 28 Mar 2007 04:31 PM CDT வெற்றி பெற நான்கு ரன்கள், கையில் ஐந்து விக்கெட்டுகள் என தெம்புடன் ஆடிக்கொண்டிருந்த தென்னாப்பிரிக்காவை, தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தினறடித்தார் லஸித் மலிங்கா. இதுவரை யாரும் தொடர்ந்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பின்னடைவில் இருந்து சுதாரித்து, எளிதாக வென்றிருக்க வேண்டிய போட்டியை தடுமாறி வென்றது தென்னாப்பிரிக்கா. முழு ஸ்கோர்கார்ட் |
சற்றுமுன்: திரைப்படத்தால் விபரீதம் : பள்ளிமானவன் தீக்குளிப்பு Posted: 22 Mar 2007 03:09 AM CDT சேலம் நகரில் பள்ளி மாணவன் தீக்குளித்து இறந்தான். அண்மையில் வெளிவந்த ஒரு ஆங்கில திரைப்படத்தில் வருவது போல் சாகசம் செய்ய நினைத்ததால் இந்த விபரீதம் நிகழ்ந்தது. கமலக்கண்ணன்(13) தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கிறான். செவ்வாய் கிழமை வீட்டில் தனியே இருந்த அவன், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு, அலறியபடி வெள்யில் ஓடி வந்துள்ளான், அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு கமலக்கண்ணன் இறந்தான். அண்மையில் வெளியான ஆங்கிலத்திரைபடத்தில் ஒருவர் தீப்பிடித்த உடலோடு மோட்டார் சைக்கிள் ஓட்டிவரும் காட்சி இடம்பெற்றிருக்கும். இதைப்போல தானும் செய்ய வேண்டும் என்று கமலக்கண்ணன் அடிக்கடி கூறி வந்துள்ளான். நன்றி :-தினமணி |
சற்றுமுன்:72 பேர் மரணம் - மொசாம்பிக் ஆயுதக் கிடங்கு வெடிப்பு Posted: 23 Mar 2007 05:15 AM CDT மொசாம்பிக்கின் ஆயுதக் கிடங்கில் நடந்த வெடிப்புகள், தீயில் 72 பேர் மரணமடைந்திருப்பதாக அந்நாட்டு நலவாழ்வு அமைச்சகர் கூறினார்.300 பேர் வரை காயமடைந்திருப்பதாகவும் சாவு எண்ணிக்கை உயரலாம் என்றும் மேலும் அவர் கூறினார். கிடங்கிலிருந்த இராணுவத்தினரும் அருகாமையில் அமைந்த சேரிவாசிகளும் பாதிக்கப் பட்டவர்களாகும். 72 Die in Mozambique Weapons Depot Blast - washingtonpost.com |
சற்றுமுன்: சென்னையில் தீவிபத்து Posted: 02 Apr 2007 06:38 AM CDT சென்னை ஏப்ரல் 2, 2007 சென்னை அண்ணாசாலையில் இருக்கும் ஆனந்த் தியேட்டர் வளாகத்தில் மராமத்துப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. திடீரென மின்கசிவு ஏற்பட்டு அருகில் இருந்த ட்ரான்ஸ்பார்மர் மூலம் தீப்பற்றிக் கொண்டது. தியேட்டர் வளாகத்திலிருந்த உமா ஆப்செட் ப்ரின்டர்ஸின் குடோனில் தீப்பிடித்து லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது. உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்து, தேனாம்பேட்டை தீயணைப்பு நிலையத்தார் வந்து தீயை அணைத்தனர். உயிர்ச்சேதம் ஏதுவுமில்லை. -- சற்றுமுன்னுக்காக லக்கிலுக் |
தமிழ்நாடு: RDX கொண்டுசென்ற கார் வெடித்ததில் 20 பேர் பலி Posted: 07 Apr 2007 05:22 AM CDT விழுப்புரம் அருகே செந்தூர் கிராமம் அருகே ஆர்டிஎக்ஸ் எடுத்துச் செல்லப்படுவதாக சந்தேகிக்கப் படும் காரொன்று தீப்பிடித்துக் கொண்டதில் வெடித்து சிதறி அந்த இடத்தில் புளி பறித்துக் கொண்டிருந்த பத்துபேரும் அதே இடத்திலும் மருத்துவமனையில் பத்துபேருமாக இறந்தனர்். சம்பவ இடத்திற்கு விரைந்த பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ5 இலட்சம் கொடுக்கவும் பாதிக்கப் பட்ட வீடுகளை கட்டித்தரவும் மாநில அரசு ஆவண செய்யும் என கூறினார். மேல் விவரங்களுக்கு..Zee News - 20 killed as explosives-laden car blows up in TN |
சேப்பலின் விமர்சனம் குறித்து சச்சின் பேட்டி Posted: 03 Apr 2007 07:05 PM CDT "கடந்த பதினேழு வருடங்களாக கிரிக்கெட்டுக்கு எனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளேன். சேப்பலைப் போல் , இதுவரை எந்த ஒரு கோச்சும் என் நடத்தை சரியில்லை என்று சொன்னதில்லை" -- சச்சின் ஆதங்கம் முழு விவரங்களுக்கு |
ரூ. 2 கோடி சந்தன கட்டைகள் கடத்தல்: துப்பாக்கியுடன் 31 பேர் கும்பல் கைது Posted: 10 Apr 2007 04:11 AM CDT ரூ. 2 கோடி சந்தன கட்டைகள் கடத்தல்: துப்பாக்கியுடன் 31 பேர் கும்பல் கைது சேலம் மாவட்டம் ஏற்காடு வசம்பாடியில் உள்ள எஸ்டேட்டில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் 2 மினி லாரி மற்றும் டாடாசுமோ காரில் 35 பேர் கொண்ட கும்பல் வந்து காவலாளி பழனியை சரமாரியாக அடித்து உதைத்து கட்டிப்போட்ட பின்னர் குடோனில் சாக்கு மூட்டைகளில் அடுக்கி வைக் கப்பட்டு இருந்த உயர்ரக சந்தன கட்டைகளை2 லாரிகளில் ஏற்றி கடத்தினர். தகவல் அறிந்து சேலம் ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திர சேகரன் தலைமையில் இன்ஸ் பெக்டர் மோகன்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், கிருஷ்ணமூர்த்தி, சுப்ரமணி, மாவட்ட வன அலுவலர் பாரதி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து கொள்ளை அடிக்கப்பட்ட சந்தன மரக்கட்டைகளுடன் வந்த 2 மினி லாரிகளையும் மடக்கினர். அதை பின்தொடர்ந்து வந்தடாடாசுமோ காரையும் சுற்றி வளைத்தனர். கொள்ளை கும்பலை சேர்ந்த 31 பேரை போலீசார் கைது செய்தனர். 4 பேர் தப்பி சென்றுவிட்டனர். |
சற்றுமுன்: 27 இடஒதுக்கீடுக்கு இடைக்காலத் தடை Posted: 29 Mar 2007 03:02 AM CDT டெல்லி: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. எனவே நாட்டில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கணக்கு குறித்து உரிய ஆவணங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அதைத் தாக்கல் செய்த பின்னரே இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிக்கப்படும். அதுவரை இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தங்களது இடைக்கால உத்தரவில் தெரிவித்திருந்தனர். மேலதிக தகவல்களுக்கு |
சற்றுமுன்: சுப்புடு உடலுக்கு கலாம் அஞ்சலி Posted: 30 Mar 2007 05:55 PM CDT புதுடில்லி:பரபல கர்நாடக இசை விமர்சகர் சுப்புடு, டில்லியில் காலமானார். ஜனாதிபதி அப்துல் கலாம் நேரில் சென்று சுப்புடுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கர்நாடக இசை விமர்சகராக புகழ் பெற்றவர் சுப்புடு என்ற சுப்ரமணியம். கர்நாடக இசையில் இந்துஸ்தானி இசை கலப்பதை கடுமையாக எதிர்த்தவர் சுப்புடு. இவரது விமர்சனங்கள் காரசாரமாகவும், தவறை சுட்டிக் காட்டுவதில் சுவையாகவும் அமைந்திருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருந்த அவர், நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு தெற்கு டில்லியில் காலாமானார். அவருக்கு வயது 91. ஜனாதிபதி அப்துல் கலாம் நேரில் சென்று சுப்புடுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நேற்று காலை 11.30 மணிக்கு சுப்புடுவின் உடல் தகனம் செய்யப்பட்டது. - தினமலர் |
பிஸ்மில்லா கானின் குடும்பத்தினர் உ.பி. தேர்தலைப் புறக்கணிப்பு Posted: 04 May 2007 12:58 PM CDT வாராணசி, மே 4: மறைந்த ஷெனாய் இசைக் கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லா கானின் குடும்பத்தினர், வியாழக்கிழமை நடந்த உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலை 'குடும்பத்தாருக்கு நிதி உதவி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை விரைவில் நிறைவேற்றவேண்டும்' என்று கோரி புறக்கணித்தனர். பிஸ்மில்லா கான் மறைந்தவுடன் அவரது குடும்பத்தாருக்கு நிதி உதவி, அவரது பெயரில் கலாசார அகாதெமி, உஸ்தாத் நினைவரங்கம் அமைக்க நிதி என பல்வேறு வாக்குறுதிகள் மத்திய, மாநில அரசுகள் சார்பில் அறிவிக்கப்பட்டன. அவர் மறைந்து 8 மாதங்கள் ஆன பிறகும் வாக்குறுதிகளில் பல இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளன என்று பிஸ்மில்லா கானின் மகன் நய்யார் ஹுசைன் தெரிவித்தார். 'குடும்பமே வறுமையில் வாடுகிறது. அதை சமாளிக்க எங்களுக்கு பெட்ரோல் பங்க் ஒதுக்கீடு செய்யவேண்டும்' என்றார் ஹுசைன். Dinamani |
ச:பெண்கள் இரவில் வேலை செய்யத் தடை - கர்நாடகா சட்டம் Posted: 10 May 2007 10:54 AM CDT பெண்களை இரவு 8 மணிக்கு மேல் வேலை செய்யச்சொல்வதை தடைசெய்ய கர்நாடகாவில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. 1961ம் ஆண்டில் இயற்றப்பட்ட கர்நாடக கடைகள் மற்றும் வியாபாரக்கூடங்கள் சட்டம் திருத்தப்பட்டு, இரவு 8 மணிக்கு மேல் பெண்களை வேலைசெய்யச் சொல்பவர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ 10,000 முதல் 20,000 வரை அபராதம் விதிக்க வகைசெய்யப்பட்டுள்ளது. பல மகளிர் அமைப்புக்கள் இந்த திருத்தம் பெண்களை பாகுபடுத்துகிறது என எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கணினித் துறைக்கு(IT/BT) இந்த சட்ட திருத்தத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. Bangalore: Women barred from night shift in Karnataka Bellevision, India Karnataka notifies law banning women in night shiftsHindu, India Karnataka notifies law banning night shift for womenTimes of India, India இதுகுறித்த விமர்சனக் கட்டுரை Is there a dark side to the Night Work Ban? indiainteracts.com |
ச:கடவுள்களின் ஆபாசப் படம் வரைந்த மாணவர் கைது Posted: 10 May 2007 11:15 AM CDT வதோதராவில் எம் எஸ் பல்கலைக்கழகத்தில் நுட்பக் கலை பயின்றுவரும் மாணவர் சந்திரமோகன் இந்து மற்றும் கிறீத்துவக் கடவுள்களின் படங்களை ஆபாசமாக வரைந்ததற்காக கைதுசெய்யப்பட்டுள்ளார். விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜகவினர் பல்கலைக்கழக வளாக்கத்தில் புகுந்து காட்சிப்பொருட்களாக வைக்கப்பட்டிருந்த படங்களை சேதப்படுத்தினர். மேலும் போலீசில் வழக்கு பதிவு செய்தனர். சர்ச்சைக்குரிய படங்கள் பொதுமக்களின் பார்வையில் வைக்கப்படவில்லை என்றும் ஆசிரியர்களின் பார்வைக்கே வைக்கப்பட்டிருந்தன என்றும் பல்கலையின் ஆசிரியர்கள் தெரிவித்தனர். Student held for painting gods in 'obscene postures'Times of India, India Art college exhibition attacked by VHPNDTV.com, India Hindu brigade damage paintings in VadodaraNDTV.com, India Artist arrested for 'obscene' paintingsTimes Now.tv, India ''This was an internal assessment of the students. The teachers evaluate their works and are not open to the general public. We will inquire how the outsiders came in,'' said Shivji Panikar, Dean, Faculty of Fine Arts. ''They are playing with the sentiments of the Hindu community by showing such obscene paintings of our Gods and Goddesses,'' said Neeraj Jain, Leader, BJP. |
பாப் உல்மர் கொலை: முஷ்டாக் அஹ்மத் விஷம் கலந்த மதுபோத்தல்களை கொடுத்தார் ? Posted: 10 May 2007 10:21 AM CDT பாப் உல்மர் கொலைவழக்கில் புதுத் திருப்பமாக பாக்கிஸ்தான் தொலைக்காட்சியொன்று தன்னிடம் கொடுக்கப்பட்ட நஞ்சு கலந்த இரண்டு சாம்பேன் மது போத்தல்களை அணியின் பௌலிங் கோச்சான முஷ்டாக் அஹ்மது உல்மருக்கு கைமாற்றியதாக கூறியது. இதுபற்றிய செய்தி துணுக்கு: MSN INDIA - Champagne bottles passed on to Woolmer by Ahmed: TV channel |
You are subscribed to email updates from சற்றுமுன்... To stop receiving these emails, you may unsubscribe now. | Email Delivery powered by FeedBurner |
Inbox too full? Subscribe to the feed version of சற்றுமுன்... in a feed reader. | |
If you prefer to unsubscribe via postal mail, write to: சற்றுமுன்..., c/o FeedBurner, 549 W Randolph, Chicago IL USA 60661 |
No comments:
Post a Comment